.

Thursday, May 17, 2007

எஸ்டோனிய நாட்டு கணனிகள் மீது இணையத்தளம் மூலம் தாக்குதல்

எஸ்டோனிய அரசாங்க கணனி வலையமைப்புகள் மீதான இணையத் தளம் மூலமான தாக்குதலை, இராணுவ ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டுள்ள நேட்டோ அமைப்பு, இந்த தாக்குலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக ஒரு நிபுணரை அங்கு அனுப்பியுள்ளது.

இந்த இணையத்தளம் மூலமான தாக்குதல் குறித்து எஸ்டோனியா ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதல் ரஷ்ய அரசாங்கத்தினாலேயே ஆரம்பிக்கப்பட்டதாக எஸ்டோனியா கூறும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

எஸ்டோனியர்கள் தமது நடவடிக்கைகள், வணிகங்கள் ஆகியவற்றை நடத்துவதன் மையப் பகுதி வரை இந்த அச்சுறுத்தல் சென்றுள்ளது.

எஸ்டோனிய இணையத்தள சார்வர்களை அளவுக்கு அதிகமாக நிரப்பி, அவை முடக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் ஒன்றிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களால், எஸ்டோனிய அரசாங்க இணையங்கள், வங்கிகள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவை பல தடவைகள் செயலிழந்து போயின.

நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய ஒன்றிய- ரஷ்ய மாநாட்டில் இந்த விவகாரம் முதன்மை விவகாரமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்டோனியா விரும்புகிறது.
- (BBC Tamil)

Russia accused of unleashing cyberwar to disable Estonia | Russia | Guardian Unlimited

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

பாலத்தீனத்தின் காசா நகர ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியதில், குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளார்கள், 25 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு நடைபெற்ற ஒரு தாக்குதலில், ஹமாஸின் பாதுகாப்பு தலைமையகம் அழிக்கப்பட்டது, மற்றொன்று ஹமாஸ் உறுப்பினர்கள் பயணம் செய்த காரின் மீது மேற்கொண்டது.

இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஹமாஸின் இராணுவப் பிரிவு எச்சரித்துள்ளது.

பாலத்தீனக் குழுக்களான ஹமாஸ் மற்றும் ஃபத்தாவினரிடையே தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெறும் மோதல்களில் காசாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த மோதல்கள் காரணமாக இதுவரை குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

BBC NEWS | Middle East | Israel launches Gaza air strikes (BBC Tamil)

ச: பிரதமர் அசாமிலிருந்து நாடாளுமன்ற மேலவைக்கு தேர்வு

அசாமிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் அசாம் கணபரிஷத்தின் தீபக் தாசும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். முன்னதாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சராயிருந்து வெளியேற்றப் பட்ட மட்டங் சிங் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதாலும் மற்றொரு வேட்பாளர் மேட்டுரை சேர்ந்த பத்மராஜன் தேர்தல்மனு நிராகரிக்கப் பட்டதாலும் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர்.


PM elected to RS uncontested after high drama- Hindustan Times

சக எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றிய அதிமுக எம்.பி. நாராயணன்

தமிழக அரசைக் கலைக்கக் கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கடந்த வாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உணர்ச்சி வேகத்தில் அதிமுக உறுப்பினர் ஒருவர், அவை அதிகாரிகள் அமர்ந்திருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து தூக்கியெறிந்தார். நல்லவேளையாக யார் மீதும் படாமல் அது கீழே விழுந்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு இன்னொரு உறுப்பினர் ரஹ்மான்கான் இருக்கைக்கு அருகே சென்று இருக்கையின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு அவையை ஒத்திவைக்குமாறு அழுத்தமாக வலியுறுத்தினார்.

அவையின் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் இதுபற்றி பிரச்சினை எழுப்பப்பட்டது. மாநிலங்களவைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் மிகக்கோபமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ரஹ்மான்கானும் அதிமுக உறுப்பினர்கள் நடந்துகொண்டதைப் போல அவையில் இதுவரை யாரும் நடந்ததில்லை என்று கூறினார்.

அவர்களின் செயல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை நடந்த நேரத்தில், பி.ஜி.நாராயணன் குறுக்கிட்டு, "இனிமேல் தனது கட்சி உறுப்பினர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். இது மாநிலத்தில் மிக முக்கியப் பிரச்சினை என்பதால் சற்று உணர்வுப்பூர்வமாக நடந்துகொண்டார்கள். மற்றபடி அவையையோ, தலைவர் மற்றும் துணைத் தலைவரையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை. இப் பிரச்சினையை இத்துடன் விட்டுவிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்ட நிலையில், புதன்கிழமை தங்கள் பிரச்சினையை வலியுறுத்தி அவையிலிருந்து அடையாள வெளிநடப்புச் செய்ததுடன் அதிமுகவினர் அமைதியடைந்தனர்.

Dinamani

ச: இரயில் பெட்டிகளில் இருமொழித்திட்டம் அமல் ?

அண்மையில் இரயில்வே அமைச்சகம் விடுத்த ஒரு சுற்றறிக்கையின்படி இரயில் பெட்டிகளில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் வைக்கப்படவேண்டுமென்றும் தமிழ்நாட்டில் செல்கின்ற இரயில்களில் மட்டும் தமிழிலும் எழுதப் படும் என்ற செய்தியைக் கொண்டு ஒரிசா மாநில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்தினர். ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் தனிச் சலுகை, எங்கள் ஊரிலும் ஒரியாவில் எழுதப் பட வேண்டுமெனக் கோரினர். பிற மாநில உறுப்பினர்களும் அவைநாயகரும் கூட புழக்கத்தில் இருக்கும் மூன்றுமொழி பெயர்ப்பலகைகளை கைவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் உடனேயே அந்தச் சுற்றறிக்கையை வாபஸ் வாங்குவதாக அவைக்கு உறுதி கூறினார். ஆனால் சற்று நேரத்தில் திரும்பிவந்து அந்த சுற்றறிக்கை நாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்டத்தின் படியும் ஆட்சிமொழி சட்டத்தின்படியும் இயற்றப் பட்டிருப்பதால் மீட்க முடியாது என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும் உறுப்பினர்களின் உணர்வை மதித்து அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் இதுபற்றி சட்டதிருத்தம் முன்வைப்பதாக கூறினார்.


மேலும்..Flip-flop over 3rd language for train names

டேரா பாபாவைக் கைது செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் கடும் கண்டனம்

புது தில்லி, மே 17: சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் நடந்துகொண்ட "டேரா சச்சா சௌதா" அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராம் என்பவரைக் கைது செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

சீக்கியர்களால் மிகவும் மதிக்கப்படும் 5 பெரிய குருமார்களில் (பஞ்ச பியாரா) ஒருவரான குரு கோவிந்த சிங்கைப் போல உடையணிந்து, ஒப்பனை செய்துகொண்டு தெருவில் ஊர்வலம் சென்றார் பாபா குர்மீத்சிங் ராம். பாபா குர்மீத்சிங் ராம், ஹரியாணா மாநிலத்தில் வசிக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை பாரதீய ஜனதா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் கவலையும் கண்டனமும் தெரிவித்தனர். "இது மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பஞ்சாபில் இருக்கும்போது மத்திய அரசால் ஏதும் செய்ய முடியாது" என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதில் அளித்தார்.

பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசும், ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் அரசும் ஆட்சி செய்கின்றன.

"சீக்கியர்களை வாத்துகள் என்று நினைத்துவிடாதீர்கள், இதைப் போன்ற செயல்களால் வட இந்தியா முழுக்க கலவரம் வெடிக்கும்" என்று தர்லோசன் சிங் என்ற சுயேச்சை உறுப்பினர் எச்சரித்தார்.

"கற்பழிப்பு, கொள்ளை, பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அந்த பாபா மீது பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று சுட்டிக்காட்டினார் எஸ்.எஸ். அலுவாலியா (பாஜக).

Dinamani

குடியரசுத் தலைவர் மனைவிக்கு கட்டுப்பாடு அதிகம்: நாராயணமூர்த்தி மனைவி பேட்டி

புணே, மே 17: குடியரசுத் தேர்தலில் 'இன்போசிஸ்' தலைவர் நாராயண மூர்த்தி போட்டியிடப் போவதாக நிலவி வரும் கருத்துக்கள் வெறும் வதந்திகளே என அவரது மனைவி சுதா மூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.

"மக்களைச் சந்திப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. சமூக சேவையும், புத்தகங்கள் எழுதுவதும் எனக்கு விருப்பமான செயல்கள். ஆனால், குடியரசுத் தலைவரின் மனைவிக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். அவ்வாறு வாழ எனக்கு விருப்பமில்லை. அதனால் எனது கணவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் எனக் கூறுவது வெறும் வதந்தி' என அவர் கூறினார்.

Dinamani

ச: 27%தடையை நீக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் : அமைச்சர் அர்ஜூன்சிங்

தடையை நீக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் : அமைச்சர் அர்ஜூன்சிங்

உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த கல்வியாண்டு இடஒதுக்கீடு இல்லை எனவும் கூறியுள்ளது. இதனையடுத்து இந்த தடையை நீக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் அர்ஜூன்சிங்தெரிவித்தார்

நன்றி:- தினமலர்

ச: கனிமொழி, அழகிரி - யாருக்கு வாய்ப்பு?

மாநிலங்களவைக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் திமுக சார்பில் கருணாநிதியின் மகள் கனிமொழி அல்லது மகன் மு.க.அழகிரிக்கு போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

ஆறு இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும்..............

நன்றி:- MSN தமிழ்

ச: மின் வெட்டை கண்டித்து உண்ணாவிரதம்: அதிமுக

முன் அறிவிப்பின்றி மின் வெட்டு அமலில் உள்ளதைக் கண்டித்து அதிமுக சார்பில் வெள்ளியன்று கரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர்.....

மேலும்..

நன்றி : MSN தமிழ்

ச: உச்சநீதிமன்றம் 27% இடஒதுக்கீடு வழக்கு: பெரிய பெஞ்ச் விசாரணைக்கு

அரசின் இடஒதுக்கீடு கொள்கை குறித்து பல கேள்விகளை ஆய்வுசெய்யவேண்டியிருப்பதால் உச்சநீதிமன்றம் இன்று வழக்கை அதிக நீதிபதிகள் அமரும் பெரிய நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இந்திய அரசியல் நிர்ணய சட்டதிருத்தம் 93இல் நுழைக்கப்பட்ட 15(5) பகுதியை சட்டப்படி செல்லுமா என அந்த பெரிய நீதிமன்ற அமர்வு ஆய்வு செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேலும்...Deccan Herald - SC refers OBC quota issue to larger bench

ச:புஷ்ஷுடன் டோனி பிளேர் சந்திப்பு

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து அடுத்த மாதம் விலகும் டோனி பிளேர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்தார்.

பிரதமர் என்ற முறையில் கடைசியாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிளேருக்கு அதிபர் புஷ் விருந்து அளித்தார்.

மேலும்..........

நன்றி : MSN தமிழ்

ச:இந்திய பயிற்சியாளராக வாட்மோர் விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போதைய பங்களாதேஷ் பயிற்சியாளர் டேவ் வாட்மோர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்்டு வாரியம் அவரை தொடர்பு கொண்டு இருப்பதாகவும், இதுகுறித்து இந்த வார இறுதியில் வாரியத் தலைவர் சரத்பவார் அவருடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்....

நன்றி MSN தமிழ்

ச: இணையம் பற்றித் தெரியாத நீதியரசர் !

புதனன்று ஆங்கில நீதிபதியொருவர் இணையதளம் (Website) என்றால் என்னவென்று தெரியாது என்று இணையம் வழி தீவிரவாதம் தூண்டியதாக ப்திவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது கூறினார். நீதிபதி பீட்டர் ஓப்பன்ஷாவின் புரிதலுக்காக அரசு வழக்கறிஞர் மார்க் எல்லிசன் தனது குறுக்கு விசாரணையை சற்று நிறுத்திக்கொண்டு "web site", "Forum" முதலிய சொற்களை விவரித்தார்.
தொடர்புள்ள செய்தி: "Web site" baffles Internet terrorism trial judge - Yahoo! News

இதனை யொட்டிய கணினி பொறியாளர்களின் இணையதள விவாதம்

அர்ச்சகர் பள்ளிகள் இடைக்கால தடைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி வழங்க தடை விதிக்கக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கு உதவும் வகையில் அனைத்து ஜாதியினரும் பயிற்சி பெற அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆதி சைவ சிவாச்சாரியார் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்க செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Dinamalar

-o❢o-

b r e a k i n g   n e w s...