.

Sunday, July 1, 2007

"TCS" க்கு வாழ்த்துக்கள்

TCS நிறுவனம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த நடப்பு ஆண்டில் சுமார் 1006 மாணவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் பணி அமர்த்திருக்கிறது. இது இந்தியாவிலேயே ஒரு புதிய சாதனை.

"மேலும் செய்திக்கு CNN IBN TV.."

விமான நிலையம் மீது தாக்குதல் - இங்கிலாந்தில் பரபரப்பு.

பிரித்தானிய மாகாணங்களுள் ஒன்றான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கார் தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்திற்குள் ஒரு கார் படு வேகமாக வந்தது. அந்தக் காரை பாதுகாவலர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால் பாதுகாவலை மீறிக் கொண்டு அந்தக் கார் படுவேகமாக நுழைவாயிலை நோக்கி விரைந்தது.

வந்த வேகத்தில் நுழைவாயில் சுவற்றில் மோதி நின்றது. அடுத்த விநாடியே கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் வந்தவர்கள் தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தக் காரைச் சுற்றிலும் போலீஸார் குவிந்தனர். அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேயற்றப்பட்டனர்.

தீப்பிடித்து எரிந்த காரிலிருந்து குதித்த இருவரும் உயிர் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் தெற்காசியர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒருவரின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்னொருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த இந்த திடீர் சம்பவத்தால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

நேற்று முன் தினம் தான் லண்டனில் குண்டுகளுடன் நிறுத்தப்பட்ட கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

இந் நிலையில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் கார் குண்டு மற்றும் கிளாஸ்கோ தாக்குதல் குறித்து லண்டன் மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இரு சம்பவங்கள் தொடர்பாகவும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கும், கிளாஸ்கோ தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன. இது தீவிரவாத தாக்குதல் என்று கூற முடியும்.

விமான நிலையத்தில் மோதியவர்களில் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளார். அவரது உடலில் சந்தேகத்திற்கிடமான ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அது தற்கொலைப் படையினர் அணியும் ஜாக்கெட்டாகவும் இருக்கலாம். அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதும் அந்த நபர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலிருந்து ஊழியர்கள், நோயாளிகள் இடம் மாற்றப்பட்டனர். பின்னர் உடலிலிருந்து அந்தக் கருவி எடுக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது என்றார்.

இதற்கிடையே செஷையர் பகுதியில் ஒரு பெண் உள்பட 3 பேர் இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முஸ்லீம் என்று நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இவர்கள் இருவரும் வந்த காரை மடக்கி இருவரையும் கைது செய்தனர்.

இருப்பினும் இந்தக் கைது குறித்த முழு விவரத்தையும் காவல்துறை வெளியிடவில்லை.

இந்த இரு சம்பவங்களையும் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு நிலை உச்சகட்ட அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நன்றி: தட்ஸ் தமிழ்

கர்நாடகம்: கள் சாராய விலக்கு நடைமுறைபடுத்தப்பட்டது.

ஜூலை 1-ந்தேதி (இன்று) முதல் கள், சாராய கடைகள் மூடப்படும் என்று கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியும் நிதிமந்திரியுமான எடியூரப்பா அறிவித்திருந்த படி இன்று காலை 10 மணி முதல் கள்-சாராய விற்பனை நிறுத்தப்பட்டது.

இதனிடையே கள் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், மாநிலம் முழுவதும் 4 லட்சம் தொழிலாளர்கள் கள் சாராய விற்பனை மூலம் வாழ்க்கை நடத்தி வந்தனர். அவர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்யாமல் கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கள் விற்பனைக்கு தொடர்ந்து அனுமதி தர வேண்டும் என்று கேட்டு இருந்தனர்.

இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அரசுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பி உள்ளார்.

"சிவாஜி" படத்தில் நடித்த துணை நடிகர் கொலை

போரூர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்தவர் ஜீவா (35) இவர் `சிவாஜி', "வசந்தம் வந்தாச்சு" உள்பட ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

அவர் தனது நண்பர் செல்வராஜுடன் வட பழனி பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் கும்பல் இருவரையும் குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் வைத்து கடத்தி சென்றது. சிறிது தூரம் சென்றதும் செல்வராஜை அந்த கும்பல் அடித்து கீழே தள்ளியது. ஜீவாவுடன் ஆட்டோ மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.

மறுநாள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் "ஜீவாவை முடித்து விட்டோம்'' என்றும் வெளியில் சொன்னால் உன்னையும் முடித்து விடு வோம் என்றும் செல்வராஜை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போய் செல்வராஜ் இது பற்றி யாரிடமும் கூறாமல் இருந்தார். நேற்று மேற்கண்ட விபரத்தை புகாராக எழுதி விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அழகேசனிடம் கொடுத்தார்.

அவரோ கடத்தல் என்பதெல்லாம் நாடகமாக இருக்கும்'' என கூறி ஜீவா காணா மல் போய் விட்டார் என வழக்குப் பதிவு செய்துள்ளார். இதற்கிடையே கடந்த 27-ந் தேதி ஜீவா கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு நந்தம்பாக்கம் அருகே மணப்பாக்கம் ராணுவ சுடுகாட் டில் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை கைப்பற்றி போரூர் ராமச்சந்திரா ஆஸ் பத்திரிக்கு அனுப்பிய நந் தம்பாக்கம் போலீசார் ஜீவா மர்மமான முறையில் மரணமடைந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை கூட விசாரிக்க மனமில்லாமல் ஜீவா வழக்கை கிடப்பில் போட்டனர். அக்கம் பக்கத்து காவல் நிலையத்துக்கு கூட இப்படி ஒரு ஆண் நபர் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார் என அந்த தகவலை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜீவாவின் நண்பர் செல்வராஜுக்கு ஜீவா மணபாக்கம் சுடுகாட்டில் கொலை செய்து வீசப்பட்டுள்ள தகவல் கிடைத்தது. இவராக போய் நந்தம் பாக்கத்தில் விசாரித்த பின்னர் தான் சுடுகாட்டில் பிண மாக கிடந்தவர் ஜீவா என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசுக்கு தெரிய வந்தது. தாமதமாக விழித்துக் கொண்ட நந்தம்பாக்கம் போலீசார் இது பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர்.கொலை தொடர்பாக நந்தம்பாக்கம் போலீஸ்காரர் ஒருவர் கூறும் போது:-

ஜீவா கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்தால் குற்றவாளியை பிடிக்க வேண்டும், கோர்ட்டு வழக்கு என அலைய வேண்டும் அதனால் அனாதை பிணம் என்று கணக்கு காட்டி எரித்து விட முடிவு செய்தனர். ஆனால் கடைசி நேரத்தில் செல்வராஜ் தந்த தகவலால் ஜீவா வழக்கை விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் கவனமில்லாமல் உள்ளனர் என்றார்.

நன்றி: மாலைமலர்

பர்தா சர்ச்சை: மறுப்பு வெளியிட்டார் பிரதீபா

"பர்தா அணிவதிலிருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும்' என்று பேசி சர்ச்சையில் சிக்கிய பிரதீபா பாட்டீல், எதிர்பார்த்தபடி தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். தன்னை சந்திக்க வந்த முஸ்லிம் தலைவர்களிடம், "பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை' என்று தெரிவித்துள்ளார்.

முகலாய படையெடுப்பின் போது, பெண்களை பாதுகாக்க அவர்கள் பர்தா அணிய வைக்கப்பட்டதாகவும், தற்போது அது போன்ற நிலை இல்லாததால், பர்தா பழக்கத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தல் காங்., கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் பிரதீபா பாட்டீல்.

சமீபத்தில் ஜமாயத் உலேமாயே ஹிந்த் மவுலானா அர்ஷத் தானி, காங்., மூத்த தலைவர் ஹசன் அலி, டில்லி மேயர் தலத் சுல்தான் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள், பிரதீபா பாட்டீலை சந்தித்து பேசினர்.அப்போது, இந்தியாவின் மேம்பாட்டில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பை திரும்பத் திரும்ப வெகுவாக பாராட்டினார் பிரதீபா. முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் விஷயத்தில், தான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, "முகலாயர்கள் பெண்களுக்கு பெரிதும் மதிப்பும் மரியாதையும் அளித்தனர். பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை தான்' என்று கூறினார்



தினமலர்

திருமாவளவன் படப் பிரச்னை தீர்ந்தது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராளியாக நடித்துள்ள படம் 'அன்புத்தோழி'. இந்தப் படத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பல காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்ததால் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. இதனால் படம் மேல்முறையீட்டுக்கு சென்றது. அங்கு "அன்புத்தோழி' விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான படம் இல்லை என தயாரிப்பாளர் பிரபாவதியும், இயக்குநர் எல்.ஜி.ரவிச்சந்திரனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கமளித்தனர்.

இதையடுத்து 12 உறுப்பினர்கள் கொண்ட ரிவைசிங் கமிட்டி படத்தை வெள்ளிக்கிழமை பார்த்தது. 'ஈழம்', 'வெறியாட்டம்' போன்ற வார்த்தைகளையும், சில காட்சிகளையும் நீக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை தயாரிப்பு தரப்பு ஏற்றுக்கொள்ளவே படத்துக்கு "யு' சான்றிதழ் வழங்கப்பட்டது. படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

தினமணி

முன்னெச்சரிக்கை கண்காணிப்பு: யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?

சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள "யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்' கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் "நிமிட்ஸ்' குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:

"நிமிட்ஸ்' கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.

"நிமிட்ஸ்' கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.

இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.

"நிமிட்ஸ்' கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி

வீண் வாதம் செய்கிறார் பொன்முடி: ராமதாஸ்

கல்லூரிக் கட்டண விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி நடவடிக்கை எடுக்காமல் வீண் வாதம் செய்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், சுயநிதிக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம்தான் உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

"இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) போன்ற கமிட்டிகளிடம்தான் கூடுதலான அதிகாரம் குவிந்துள்ளது. அதை எதிர்த்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் போரிட்டால், முதல்வரின் அனுமதியுடன் நானும் அதில் பங்கேற்பேன்" என்று உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ராமதாஸ் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டபடி, மத்திய அரசின் நிறுவனங்களுக்கும், சுயநிதிக் கல்லூரிகளின் கட்டண நிர்ணயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கட்டாய நன்கொடையை தடுப்பதற்கும் அந்த நிறுவனங்களின் பணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதோடு அந்த நிறுவனங்களின் பணி முடிந்து விடுகிறது. கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் தான் உள்ளது.

2002-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அது தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் 2003-ம் ஆண்டில் குழுக்கள் அமைக்கப்பட்டு கட்டணம் நிர்ணயித்து அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கட்டண நிர்ணயம் தொடர்பாக, மாநில அரசிடம் எதுவுமே இல்லை என்பதைப் போல, அமைச்சர் சொல்லியிருக்கிறார். அதிகாரம் இல்லாமலா 1992-ம் ஆண்டில் நன்கொடை தடைத் சட்டத்தை (ஜெயலலிதா தலைமையிலான) மாநில அரசு கொண்டு வந்தது.

மக்கள் சிரிக்க மாட்டார்களா? இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லும்போது மட்டும் எங்களிடம் அதிகாரம் இல்லை என்பதைப்போல சட்டத்தைக் கொண்டு வந்தவர்களே சொன்னால், அதைக் கேட்டு மக்கள் சிரிக்க மாட்டார்களா?

இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் மத்திய சுகாதாரத் துறையையும் வம்புக்கு இழுத்து போராடத் தயாரா என்றும் அமைச்சர் பொன்முடி விதண்டாவாதம் செய்திருக்கிறார். கூட்டணி பற்றி உபதேசமும் செய்திருக்கிறார்.

கட்டாய நன்கொடை, கட்டணக் கொள்ளை பற்றி அரசுக்கு புகார்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. முதல்வரின் தனிப் பிரிவுக்கே இத்தகைய புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சில குறிப்பிட்ட படிப்பில் தனியார் கல்லூரிகளிடம் இருந்து அரசின் ஒதுக்கீட்டுக்கு உரிய இடம் பெறப்படவில்லை என்றும், அவர்கள் விரும்பிக் கொடுத்த இடத்தை மட்டும் பெற்றுக் கொண்டு திருப்தி அடைந்திருக்கிறார்கள் என்ற விவரம் எல்லாம் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, அரசுக்கு எதுவுமே தெரியாது என்று அமைச்சர் கூறுவது சுத்தப் பொய்.

யாரும் புகார் கொடுக்கவில்லை என்பதற்காக நாட்டில் நடந்துகொண்டிருக்கின்ற அக்கிரமங்களை எல்லாம் மக்கள் நல அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?

இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மத்திய அரசை நோக்கி கையைக் காட்டி திசை திருப்புவது எந்த வகையில் நியாயம்.

மத்திய அரசுக்கும், இங்கே மாநிலத்தில் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல அமைச்சர் பொன்முடி வேண்டுமானால் பேசலாம். ஆனால், மக்கள் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

முந்தைய சற்றுமுன்...: இராமதாஸ் Vs திமுக: "மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராடத்தயாரா?"

தினமணி

சக்திவாய்ந்த வெடிபொருள் பறிமுதல்: பெரும் விபத்து தவிர்ப்பு

காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு பெஹல்காம் அடிவார முகாமில் இருந்து செல்லும் வழியில் கானாபல் அருகே சக்திவாய்ந்த வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டு செயலிழக்கப்பட்டது. இதையடுத்து, பெரும் விபத்தும் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது.

அனந்த்நாக் டிகிரி கல்லூரி அருகே கேட்பாரற்றுக் கிடந்த ஒரு டிபன் பாக்ஸில் சக்திவாய்ந்த 5 கிலோ வெடிபொருள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அச்சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு வைத்ததற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புதான் காரணம் என்று மாவட்டப் போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் ஜாவீத் அகமது மட்டூ கூறினார்.

தினமணி

UK terror threat now 'critical'

லண்டனின் க்ளாஸ்கோ விமான நிலையத்தில் எரியும் காரை கொண்டு நுழைவாயிலை தகர்த்து இடித்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.

இரன்டு கார் நிறைய வெடுகுண்டுகள் இருந்ததை நேற்று கண்டுபிடித்து உயிர்சேதத்தைத் தடுத்ததன் தொடர்ச்சியாக இன்று இந்த தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

மேலும் குண்டுவெடிப்புகள் நிகழலாம் என்று கணிக்கப்படுவதால் நாடெங்கும் தீவிரவாத தயார் நிலையை 'அதி உயர் நெருக்கடிநிலை' என்று பிரகடனம் செய்துள்ளார்கள். இரகசியமாக தகவல் தெரிவிக்க விரும்புவோர், 0800789321 என்னும் எண்ணில் துப்புகளைப் பகிரலாம்.

BBC NEWS | UK | UK terror threat now 'critical'

இண்டர்நெட்டில் செக்ஸ் - சென்னைக்கு 2-வது இடம்

சென்னை, ஜுன். 30-

இண்டர்நெட்டில் செக்ஸ் தகவல்களை தேடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் எந்த நாட்டில், எந்த நகரங்களில் கூக்லி இணைய தளம் மூலம் செக்ஸ் தகவல்கள் அதிகம் தேடப்படுகின்றன என்ற புள்ளி விபரம் "கூக்லி சர்ச் டிரெண்ட்'' மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உலகிலேயே பாகிஸ்தான் நாட்டில்தான் இண்டர்நெட் மூலம் செக்ஸ் தகவல் தேடுவோர் அதிக எண்ணிக்கை யில் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்த 2-வது இடத்தில் எகிப்த் நாடும், 3-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. துருக்கி, வியட்நாம், மொராக்கோ, ஈரான், சவுதி அரேபியா, செர்பியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.

உலக நகரங்கள் அளவிலான பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும், சென்னை 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. 3-வது இடத்தை எகிப்து நாட்டின் முக்கிய நகரமான கெய்ரோ பிடித்துள்ளது.

இஸ்தான்புல், அன்காரா, ராபர்ட், மும்பை, வர்சா ஆகிய நகரங்கள் முறையே அடுத்த டுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

நன்றி: மாலை மலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...