.

Wednesday, August 1, 2007

ச: சென்னை கமிஷனராகிறார் நாஞ்சில் குமரன்.

சென்னை கமிஷனராக இருந்த லதிகா சரண் திடீரென மாற்றப் பட்டு நாஞ்சில் குமரன் ஐபிஎஸ் புதிய கமிஷனதாக நியமிக்கப் பட்டுள்ளார்.

இந்தியாவில் வெள்ளம் காரணமாக ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

அடைமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் சுமார் ஒருகோடிபேர் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். இவர்களில் பலர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். விளைநிலங்கள் பெருமளவு நீரில் மூழ்கியதால், பரவலாக பயிர் நாசமாகியிருக்கிறது.

அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பல்லாயிரக்கணக்கான கிராமசவாசிகளுக்கு, ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் இராணுவத்தினர் நிவாரணப் பொருட்களை அளித்துவருவதாக, அசாம் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளத்திலிருந்து தப்பும் நோக்கத்தில் அவசரமாக படகில் பயணம் செய்யமுயன்ற கிராமவாசிகள் 28 பேர், அவர்கள் பயணம் செய்த படகு மூழ்கியதில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக வட இந்திய மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய சற்றுமுன்...: வடமாநிலங்களில் மழை: வெள்ளத்தில் சிக்கி 55 பேர் சாவு

BBC Tamil

BBC NEWS | South Asia | Flood evacuees die in India storm
Floods worsen in India's Assam state, 5 million displaced

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தனது பயணச்சீட்டு விலைகளில் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஐநூற்று ஐம்பது மில்லியன் டாலர்கள் அபராதமாக கட்டவேண்டும் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஒழுங்குமுறை ஆணையங்கள் தீர்ப்பளித்துள்ளன.

இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள வான்போக்குவரத்து போட்டி விதிமுறைகளில், இதுவே மிக மோசமான விதிமீறல் என்று இவர்கள் இதை வர்ணித்துள்ளன.

கொரியாவின் தேசிய வானூர்தி நிறுவனமான கொரியன் ஏர் நிறுவனத்தின் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் முன்னூறு மில்லியன் டாலர் அபராதத்தை விதித்திருந்தது.

பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் கட்டணங்களில் கூடுதல் விலையை வசூலித்ததாக கொரியன் ஏர் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

2004 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தோடு சேர்ந்து, கூடுதல் கட்டணங்களை வசூலித்ததாக ஒப்புகொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் நடந்த பெட்ரோலிய விலையேற்றம் காரணமாகவே இந்த கூடுதல் கட்டணங்களை வசூலித்ததாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறியுள்ளது.

BBC Tamil

British Airways fined $550 million for ripping off passengers - TIME
How Branson got out of a pickle | Special reports | Guardian Unlimited: "If only British Airways, instead of Virgin Atlantic, had picked up the phone to inform the authorities of the illegal price fixing activities, it might have escaped scot-free. But its arch-rival Virgin Atlantic got there first and, as whistleblower, earned itself immunity from penalties on both sides of the Atlantic."

புதிய வழிகாட்டி மதிப்பு: தி.நகர் ்- ரூ. 12 ஆயிரம்; அண்ணா சாலை - ரூ.8,850

தமிழ்நாட்டில் நில விற்பனை யில் சந்தை விலைக்கும், வழி காட்டி மதிப்புக்கும் (அரசு விலை) இடையே வித்தியாசம் அதிகமாக இருந்தது. அதாவது வெளியில் நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் அதை பதிவு செய்யும் போது அந்த இடத்தில் அரசாங்க மதிப்பு மிக குறைவாக இருக்கும்.

இதனால் பத்திர பதிவில் பல்வேறு மோசடிகள் ஏற்பட்டன. கறுப்பு பண புழக்கம் அதிகரித்து அரசுக்கு வருவாய் இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதை முற்றிலும் களைய தமிழ்நாடு முழுவதும் வழி காட்டி மதிப்பை மாற்றி அமைக்க அரசு உத்தரவிட்டி ருந்தது. இதன்படி புதிய வழி காட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. சந்தை விலைக்கும் முந்தை வழிகாட்டி மதிப்புக்கும் இடையே வேறுபாட்டை பாதியாக குறைக்கும் வகையில் இந்த விலை நிர்ணயம் உருவாக்கப்பட்டுள்ளது.

அபிராமபுரம் 2-வது தெருவில் ரூ. 872 ஆக இருந்த சதுர அடி இப்போது ரூ. 2365 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் அபிராமபுரம் 4-வது தெருவில் விலை ரூ. 3430 ஆக உள்ளது.

தி.நகர் உஸ்மான் ரோட்டில் பஸ் நிலையம் முதல் பனகல் பார்க் வரை சதுர அடி ரூ. 11 ஆயிரமாக இருந்த விலை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. நாகேசுவரராவ் ரோடு முதல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதியிலும் ரூ. 12 ஆயிரமாக விலை நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

இதே போல் அண்ணா சாலை பகுதி விலை சதுர அடி ரூ. 8850 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் தெருவின் சதுர அடி விலை எவ்வளவு என்பதை பார்க்க இண்டர்நெட்டில் www.tnreginet.net என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரு, அவென்யூ, நகர்களுக்கும் இதில் விரிவாக விலை விவரங்கள் உள்ளன.

மாலைமலர்

சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தால் சஞ்சய்தத் ஜாமீனில் விடுதலை ஆவதில் சிக்கல்

6 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றுள்ள சஞ்சய்தத் மும்பை ஜெயிலில் அடைக் கப்பட்டு உள்ளார்.

அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வரவும், வழக்கை அப்பீல் செய்யவும் அவரது வக்கீல்கள் முயற்சித்து வரு கின்றனர். மும்பை தடா கோர்ட்டில் சஞ்சய்தத்துக்கு வழங்கிய தண்டனை குறித்து அதிகாரப் பூர்வமான உத்தரவு நகல் கிடைத்த பிறகே ஜாமீன் கேட்கவோ, அப்பீல் செய்யவோ முடியும். எனவே அதை பெறும் முயற்சியில் வக்கீல்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இது கையில் கிடைக்க 2 நாட்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அது வந்ததும் அவர்கள் ஜாமீன் கேட்டு மனு செய்வார்கள். இந்த வழக்கில் ஜாமீன் பெறவோ அல்லது அப்பீல் செய்யவோ சுப்ரீம் கோர்ட் மட்டுமே அணுக முடியும். எனவே சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல உள்ளனர். நாளை அல்லது நாளை மறு நாள் அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

இருந்தாலும் சஞ்சய்தத்துக்கு அவ்வளவு எளிதாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று பிரபல கிரிமினல் வக்கீல் ஒய்.பி.சிங் கூறினார்.

மும்பை குண்டு வெடிப்பு சதியில் சஞ்சய்தத் சம்பந்தப் பட்டு இருந்ததாக இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. குற்றஞ் சாட்டி இருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். வெடிகுண்டு சதியில் இருந்து சஞ்சய் தத்தை விடுவித்தது தவறு என்று சி.பி.ஐ. அப்பீல் செய்ய வாய்ப்பு உள்ளது. அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்று சி.பி.ஐ. வற்புறுத்தும் எனவே அவ்வளவு எளிதாக ஜாமீன் கிடைக்காது என்று அவர் கூறினார்.

வெடிகுண்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பை சேர்ந்தவரோ அல்லது சாட்சி யாளர் ஒருவரோ சஞ்சய் தத்துக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்றாலும் சிக்கல் ஏற்பட்டு விடும்.

ஜாமீன் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது. அவர்களுக்கு எப்போது வசதி வருகிறதோ அப்போது விசாரிப்பார்கள். எனவே அவர்கள் விசாரித்து முடிவு சொல்லும் வரை ஜெயிலில் இருந்தே ஆக வேண்டும்.

அதே போல அப்பீல் வழக்கையும் அவர்கள் அவசரப்பட்டு விசாரித்து முடிவு சொல்ல வேண்டியது இல்லை. எனவே அப்பீல் வழக்கில் முடிவு வரவும் கால தாமதம் ஆகலாம். இது பற்றி அதிக்கிரோத்கர் கூறும் போது, "நாம் ஒரு குற்றத்தை செய்து விட்டால் அவ்வளவு எளிதாக வெளிவந்து விட முடியாது. சட்ட ரீதியான பல விஷயங்களை சந்தித்தே ஆக வேண்டும்'' என்றார்.

மாலைமலர்

NDTV.com: Glimmer of hope for Sanjay Dutt
Sanjay Dutt's bail hopes rest on SC-India-The Times of India

பாலக்காடு வட்டம்: முழு கேரள அமைச்சரவையும் தில்லியில் ஆர்பாட்டம் நடத்தும்

நடுவண் அரசு மாநிலத்திற்கு வெள்ள நிவாரண உதவி கொடுக்கப் படாததிற்கும் பாலக்காடு இரயில்வே வட்டம் பிரிக்கப்பட்டு சேலம் வட்டம் உருவாக்கப் படுவதையும் எதிர்த்து முழு கேரள அமைச்சரவையும் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் திகதி தில்லியில் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன் இந்த தகவலைத் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் மாநில எம் பி களும் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வர் என்றும் கூறினார். ஆகஸ்ட் 10 அன்று துவங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் மாநில எம் பிக்கள் இப்பிரச்சினையை எழுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

The Hindu News Update Service

டைரக்டர் அமீர் மீது கார்த்தி பாய்ச்சல் - ஆசிய பட விழாவுக்கு அழைக்கவில்லை என்பதா?

டெல்லியில் நடந்த ஆசிய பட விழாவில் 'பருத்தி வீரன்' சிறந்த படமாக தேர்வானது. இதில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. விருது வழங்கும் விழாவில் 'பருத்தி வீரன்' கதாநாயகன் கார்த்தி பங்கேற்றார்.

இந்த விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று 'பருத்தி வீரன்' டைரக்டர் அமீர் குறை கூறினார். தன்னை ஓரம் கட்டுவதாகவும் சொன்னார். என்னை ஒதுக்குவது இது முதல் தடவை அல்ல. கேன்ஸ் பட விழாவுக்கு பருத்தி வீரன் படத்தை அனுப்பியதையும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

இதுபற்றி நடிகர் கார்த்தி கூறியதா வது:-

ஆசிய பட விழாவில் 'பருத்தி வீரன்' படத்துக்கு இரு விருதுகள் கிடைத்தது பெருமையான விஷயம். இந்தி, பெங்காளி என 100 படங்கள் பங்கேற்றன. அதில் இரு விருதுகளை 'பருத்தி வீரன்' வென்றது. விருது பெறும் விழாவுக்கு இ-மெயில் மூலம் என்னை அழைத்தனர். டைரக்டர் அமீருக்கும் இ-மெயில் அனுப்பி அழைத்தார்கள். அவர் வரவில்லை.

விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று அமீர் சொல்வது சரியல்ல. இது போன்ற விழாக் களுக்கு இ-மெயில் மூலம்தான் அழைப்பாளர்கள். கேன்ஸ் பட விழாவுக்கு 'பருத்தி வீரன்' படம் அனுப்பப்பட்டது பற்றியும் அமீருக்கு இ-மெயிலில் தகவல் தெரிவித்தேன். தன்னை ஓரம் கட்டுவதாக அவர் சொல்வது நியாயமற்றது.

இது போன்ற விழாக்களுக்கு படத்தை அனுப்ப ரூ. 15 ஆயிரம் வரை செலவாகும். படத்தின் இயக்குனர், நடிகர்கள், கதை போன்ற விவரங்கள் அடங்கிய குறிப்பு புத்தகமும் தயார் செய்து அனுப்ப வேண்டும். இதையெல்லாம் சொந்த செலவில் செய்துதான் ஒவ் வொரு விழாவுக்கும் அனுப்புகிறேன்.

இத்தனையும் செய்த பிறகும் டைரக்டர் அமீரிடம் இருந்து விமர்சனம் வருவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர் மீது எப்போதும் மரியாதை வைத்துள்ளேன். ஓரம் கட்டவில்லை. ஒதுக்கவும் இல்லை. 'பருத்தி வீரன்' படம் பற்றிய ஒவ்வொரு தகவலும் அவருக்கு அனுப்பப்படுகிறது.

ஆசிய பட விழாவில் 'பருத்தி வீரன்' படத்தை பார்த்து விட்டு வெளிநாட்டினர் அசந்து போயினர். பிரியாமணி நடிப்பை பார்த்து இப்படியும் ஒரு பெண் இருக்கிறாரா? என்று ஆச்சரியப்பட்டனர். படத்தை அங்கு அனுப்பியதால் தானே இந்த பெருமைகள் கிடைத்தன. ஒரு ஆளாக நின்று தான் இதை செய்கிறேன்.

முந்தைய சற்றுமுன்...: தொடரும் 'பருத்தி வீரன்' பிரச்னை

மாலைமலர்

நீதிமன்றத்தினுள் கைதிகள் தர்ணா..

கோவையில் பரபரப்பு.
கோவையில் நீதி மன்றத்திற்கு விசாரணைக்காக கொண்டுவரப்பட்ட கோவை குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட கைதிகள் இன்று நீதி மன்றத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்ல மறுத்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 103 வது எதிரியாக கடந்த எட்டு வருடங்களாக சிறையில் உள்ள ஷெரிஃப் (வயது 26) என்பவருக்கு கோவை கலவரத்தில் முழங்காலில் குண்டுத்துகள்கள் பாய்ந்ததால் கடந்த எட்டு வருடங்களாக சிறையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் நிலைமை மோசமானதை அடுத்து, கோவை கங்கா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் உடனடியாக காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும், தவறினால் கால் அழுகி காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததால் கடந்த 31-05-2006 அன்று உடனடி சிகிச்சை மேற்கொள்ள விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு தரப்பு இவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்று தடை உத்தரவு பெற்றது.

ஏற்கனவே முந்தைய அரசின் உதாசீனத்தாலும் சரியான சிகிச்சை அளிக்காததாலும் ஏற்கனவே கைதி ஒருவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் கைதிகளின் மருத்துவ சிகிச்சைக்கு எதிராக அரசு தரப்பு மனிதாபிமான அடிப்படையில்கூட செயல்படாமல் தடை உத்தரவுகளை பெற்றுள்ளதால் பல கைதிகள் உடல் உறுப்புக்களையும் உயிரையும் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று விசாரணைக்காக நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் சுமார் ஐம்பது பேர், அல் உம்மா சிறைவாசி கோவை முகம்மது அன்சாரி என்பவரின் தலைமையில் நீதி மன்றத்தை விட்டு சிறை திரும்ப மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோவையெங்கும் பரபரப்பாக காணப்பட்டது, காவல் துறையின் உயர் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் தொடர்நது கைதிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் கடந்த அரசின் அதே மெத்தனப்போக்கும், காழ்ப்புணர்ச்சியும் இப்போதும் தொடர்வதாகவும் இந்நிலை மாறவேன்டும் என்றும் மற்றும் கடந்த எட்டு வருடங்களாக தகுந்த சிகிச்சையில்லாமல் வாடிவரும் கைதிகளுக்கு உடனடி சிகிச்சையும் மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளும் வழங்க வேன்டும் என்றும் ஷெரிஃப் என்பவருக்கு உடனடியா விசாரனை நீதிபதியின் பரிந்துறையின்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வெளியேற மறுத்தனர்.

இரவு பத்தரை மணி வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையின் முடிவாக தாசில்தாரும் காவல்துறை அதிகாரிகளும் இரண்டு நாட்களில் இதுகுறித்து சரியான தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் கைதிகள் சிறைக்கு திரும்பினர். காலையில் இருந்து இரவு பத்தரை மணி வரை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாலும், கைதிகளின் உறவினர்களும் பொதுமக்களும் அதிக அளவில் கூடியதாலும் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.

பிரதமர், உங்க காருக்குப் பெட்ரோல் போட வரார்.

இந்த நியூஸி நாட்டில் biofuel இன்றுமுதல் விற்பனைக்கு வந்திருக்கு.அநேகமாக இங்கே இருக்கும் 95% கார்களுக்குப் பிரச்சனை இருக்காதுன்னுபுள்ளிவிவரம் சொல்லுதாம்.
ஆனாலும், கார் தயாரிப்பாளர்கள், அவர்களின் வாடிக்கையாளர்களுக்குஇந்த பெட்ரோல் சரிப்படுமா இல்லையான்னு சொல்லணுமுன்னுஅரசாங்கம் அறிவிச்சிருக்கு.



நாட்டின் பிரதமர் இந்த biofuel விற்பனையைத் துவக்கி வச்சு, பல கார்களுக்குப் பெட்ரோல் ஊத்திக்கிட்டு இருக்கார்.

ச: மதானி விடுதலை-பாஷா உள்பட 7 பேர் குற்றவாளிகள்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி விடுதலை செய்யப்பட்டார்.
அல்-உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...

பிஎஸ் என் எல் நிறுவனத்தில் VRS ?

பி எஸ் என் எல் நிறுவனத்தின் வயதான ஊழியர்களை களையெடுக்கும் விதமாக தாமாகவே ஓய்வு பெறும் திட்டத்தை தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக ஓய்வுதருவாயில் உள்ள நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஏகே சின்ஹா கூறினார்.தலைநகரில் இதுவரை அமைச்சகத்தின் கட்டிடத்தில் இயங்கிவந்த பிஎஸ் என் எல் நிறுவனம் தனக்கென கட்டிக் கொண்ட புதிய கட்டிட திறப்பு விழாவின் போது அவர் இவ்வாறு கூறினார். பி எஸ் என் எல் இன் ஊழியர்கள் அரசு ஓய்வூதியத்தைப் பெறுவதால் இத்திட்டத்திற்கு அரசின் அனுமதி தேவைப்படுகிறது.

BSNL set to prune ageing workforce with VRS offers

டாடா ஆலைக்கு ஆதரவாகப் பேரணி

திருநெல்வேலி, ஆக. 1: டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலையை நிறுவ வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணியில் ஆலைக்கு நிலம் கொடுக்க தயாராக உள்ள விவசாயிகளும், வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொள்வார்கள் என சட்டப்பேரவை உறுப்பினர் என். மாலைராஜா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் அவர் அளித்த பேட்டி:

சாத்தான்குளத்தில் டாடா தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தொழில்வளம் பெருகும் என்பதோடு சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

எனவே, இந்தத் தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவித்து, நிலம் கொடுக்க தயாராக உள்ள சுமார் 2,500 விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொள்ளும் பேரணியை நடத்த உள்ளோம்.

இந்த பேரணி வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தை சென்றடையும். அங்கு தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், நிலம் கொடுக்க தயாராக உள்ளவர்களும் ஆட்சியரிடம் மனுக்களை அளிப்பார்கள் என்றார் அவர்.

தினமணியிலிருந்து நேரடி பதிப்பு

கருணாநிதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு - ஜெயலலிதா அறிக்கை

என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சாத்தான்குளம் பகுதியில் டைட்டானியம் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டேன். இந்தத் தொழிற்சாலையை அனைத்துக் கட்சியினரும் எதிர்க்கும் நிலையில் எனது கருத்துகளுக்கு எதிராக முதல்வர் கருணாநிதி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "கார்னட் என்ற விலை மதிப்புடைய கனிமத்தைத் திருட்டுத்தனமாக எடுத்து, தேச நலனுக்குப் பாதகமாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் தனிப்பட்ட தாதா ஒருவர். அவருடன் ஜெயலலிதா செய்து கொண்ட எழுதப்படாத ஒப்பந்தமே டைட்டானியம் ஆலைத் திட்டத்தை அவர் எதிர்க்கக் காரணம். ஜெயலலிதா டிவியில் அந்த தாதா ஒரு பங்குதாரர்' என்று கூறியிருக்கிறார் கருணாநிதி.

அறிக்கை என்ற பெயரில் இல்லாத - பொல்லாத கற்பனைகள், அபாண்டமானக் குற்றச்சாட்டுகளை முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

டைட்டானியம் ஆலை அமைக்கும் திட்டத்துக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும், ஏன் அவருடைய சொந்த கட்சிக்காரர்களே அந்தப் பகுதியில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இந்த கனிமவளம் "மேஜர் மினரல்ஸ்' என்று சொல்லப்படும் இனத்தைச் சார்ந்தது ஆகும். அதற்குரிய சட்ட திட்டங்கள், வழிமுறைகள் மத்திய அரசின் சுரங்கத் துறையால் கையாளப்பட்டு வருகின்றன. இதில் எந்த விதத்தில் தவறு நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி உள்ளது.

அப்படி இருக்கையில் சட்டவிரோதமாக யாரோ ஒருவர் அந்த கனிமத்தைத் திருடுகிறார். அதற்கு நான் உடந்தையாக இருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளேன் என்று சொல்வது கருணாநிதிக்கு சட்டமும் தெரியவில்லை; மக்கள் மன நிலையும் புரியவில்லை என்பதைக் காட்டுகிறது.

அப்படிப்பட்டவருக்கு, மக்களுக்காக போராட்டம் அறிவிக்கின்ற என்னைப் போன்றவர்களைக் கண்டால் எரிச்சலாகத்தான் இருக்கும். அந்த எரிச்சலைக் கொட்டித் தீர்க்கும் விதமாகத்தான் அவரது அறிக்கை அமைந்துள்ளது.

எனது கைத்தடி என்றும் எழுதப்படாத ஒப்பந்தத்தை ஒருவரிடம் நான் போட்டிருக்கிறேன் என்றும் என்னைப் பற்றி அவதூறு எழுதி இருக்கிறார். என்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்கு நிச்சயமாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை கருணாநிதி மீது நான் தொடர உள்ளேன்.

தினமணியிலிருந்து நேரடி பதிப்பு செய்யப்பட்டுள்ளது

மதுரை- மேட்டுப்பாளையம் பஸ்ஸில் ஜெலட்டின் குச்சிகள்

மதுரையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்த அரசு பஸ்ஸில் 10 ஜெலட்டின் குச்சிகள் காண்டுபிடிக்கப்பட்டன. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் நேரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தினமலர்

ஆண்டிப்பட்டியில் மாணவர்கள் மீது தடியடி

தங்கள் பள்ளியில் தேவையான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி போரடிய, தரம் உயர்த்தப்பட்ட அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களும் பேற்றோர்களும் போலீஸ்தடியடியில் சிக்கினர். 20க்கும் மேற்பட்ட மாணவ மானவியர் காயம் அடைந்துள்ளனர்.

போராட்டத்தின்போது 1 மணி நேரம் போக்குவரத்து தடையானது. பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறாமல் போனது. பின்னர் கல்வீச்சைத் தொடர்ந்து போலீஸ் தடியடி நடவடிக்கையில் இறங்கியது.

நன்றி: தினமலர்

பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

எங்களை புரிந்துகொண்டதற்கும் எங்களுக்காக பரிவு காட்டியதற்கும் பத்திரிக்கைகளுக்கு நன்றி என சஞ்சய் தத் சகோதரி ப்ரியா தத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திக்கு TV"CNN IBN TV."

-o❢o-

b r e a k i n g   n e w s...