.

Wednesday, August 1, 2007

சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தால் சஞ்சய்தத் ஜாமீனில் விடுதலை ஆவதில் சிக்கல்

6 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றுள்ள சஞ்சய்தத் மும்பை ஜெயிலில் அடைக் கப்பட்டு உள்ளார்.

அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வரவும், வழக்கை அப்பீல் செய்யவும் அவரது வக்கீல்கள் முயற்சித்து வரு கின்றனர். மும்பை தடா கோர்ட்டில் சஞ்சய்தத்துக்கு வழங்கிய தண்டனை குறித்து அதிகாரப் பூர்வமான உத்தரவு நகல் கிடைத்த பிறகே ஜாமீன் கேட்கவோ, அப்பீல் செய்யவோ முடியும். எனவே அதை பெறும் முயற்சியில் வக்கீல்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இது கையில் கிடைக்க 2 நாட்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அது வந்ததும் அவர்கள் ஜாமீன் கேட்டு மனு செய்வார்கள். இந்த வழக்கில் ஜாமீன் பெறவோ அல்லது அப்பீல் செய்யவோ சுப்ரீம் கோர்ட் மட்டுமே அணுக முடியும். எனவே சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல உள்ளனர். நாளை அல்லது நாளை மறு நாள் அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

இருந்தாலும் சஞ்சய்தத்துக்கு அவ்வளவு எளிதாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று பிரபல கிரிமினல் வக்கீல் ஒய்.பி.சிங் கூறினார்.

மும்பை குண்டு வெடிப்பு சதியில் சஞ்சய்தத் சம்பந்தப் பட்டு இருந்ததாக இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. குற்றஞ் சாட்டி இருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். வெடிகுண்டு சதியில் இருந்து சஞ்சய் தத்தை விடுவித்தது தவறு என்று சி.பி.ஐ. அப்பீல் செய்ய வாய்ப்பு உள்ளது. அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்று சி.பி.ஐ. வற்புறுத்தும் எனவே அவ்வளவு எளிதாக ஜாமீன் கிடைக்காது என்று அவர் கூறினார்.

வெடிகுண்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பை சேர்ந்தவரோ அல்லது சாட்சி யாளர் ஒருவரோ சஞ்சய் தத்துக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்றாலும் சிக்கல் ஏற்பட்டு விடும்.

ஜாமீன் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது. அவர்களுக்கு எப்போது வசதி வருகிறதோ அப்போது விசாரிப்பார்கள். எனவே அவர்கள் விசாரித்து முடிவு சொல்லும் வரை ஜெயிலில் இருந்தே ஆக வேண்டும்.

அதே போல அப்பீல் வழக்கையும் அவர்கள் அவசரப்பட்டு விசாரித்து முடிவு சொல்ல வேண்டியது இல்லை. எனவே அப்பீல் வழக்கில் முடிவு வரவும் கால தாமதம் ஆகலாம். இது பற்றி அதிக்கிரோத்கர் கூறும் போது, "நாம் ஒரு குற்றத்தை செய்து விட்டால் அவ்வளவு எளிதாக வெளிவந்து விட முடியாது. சட்ட ரீதியான பல விஷயங்களை சந்தித்தே ஆக வேண்டும்'' என்றார்.

மாலைமலர்

NDTV.com: Glimmer of hope for Sanjay Dutt
Sanjay Dutt's bail hopes rest on SC-India-The Times of India

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...