பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதிக்கு வெளியே இஸ்லாமிய மாணவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலின் போது வெடித்த துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இறந்தவர்களில் இரு மாணவர்களும், ஒரு சிப்பாய் மற்றும் ஒரு செய்தியாளர் ஆகியோர் அடங்குவர்.
அந்த மசூதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் முட்கம்பிகளை கொண்டு தடைகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுவதை அடுத்து, வெடித்த மோதல்களில் பலர் காயமடைந்தனர். அந்தக் கட்டிடத்துக்கு மிக நெருக்கமாகச் சென்றுள்ள பாதுகாப்புப்படையினர், கேந்திர முக்கியத்துவ வாய்ந்த இடங்களை கையகப்படுத்தியுள்ளதுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகளைச் வீசி வருகிறார்கள்.
பல மாதங்களாக அரசாங்கத்தை பகிரங்கமாக நிராகரிக்கும் மாணவர்களுக்கு, கடும்போக்கு இஸ்லாத்தைப் போதிக்கும் இடமாக இந்த செம்மசூதி மாறியுள்ளது. பல பொதுக் கட்டிடங்களைப் பிடித்துள்ள இவர்கள், பாலியல் தொழிலாளர்கள் என்று குற்றஞ்சாட்ட்டப்பட்டவர்களை கடத்தியவர்களாவர்.
- BBC Tamil
BBC NEWS | South Asia | Clashes erupt at Pakistan mosque
Tuesday, July 3, 2007
இஸ்லாமாபாதில் செம்மசூதிக்கு வெளியில் இடம்பெற்ற மோதலில் பலர் பலி
Posted by Boston Bala at 11:08 PM 0 comments
ஹைதராபாத்தில் அடுத்த அமெரிக்க தூதரகம்
மும்பை, கொல்கொத்த்ஹா, சென்னையை அடுத்து ஹைதராபாத்தில் அமெரிக்க தூதரகம் நிறுவப்படவுள்ளது. 2008 முதல் தற்காலிக வசதிகளுடன் செயல்பட ஆரம்பிக்கும் இந்தத் தூதரகம் 2011ல் 12 ஏக்கர் நிலப்பரப்பில் எழுப்பப்படும் கட்டிடத்திற்குள் செயல்பட ஆரம்பிக்கும்.
India's fourth American counsulate in Hyderabad - The Hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 8:39 PM 0 comments
கொல்கத்தாவில் பெரும் மழை - 10 பேர் மரணம்
கல்கத்தாவில் பெய்த பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவிலிருந்து மொத்தம் 163mm மழை பெய்துள்ளது. இதனால் இயல்புநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீடு இடிந்து விழுந்ததாலும், அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கியும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
Posted by சிறில் அலெக்ஸ் at 8:24 PM 0 comments
காந்தியின் கடிதம் இந்தியாவால் பெறப்பட்டது
காந்தி கொல்லப்படுவதற்கு 19 நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தை இந்தியா எல்லத்தில் விடப்படுவதிலிருந்து தடுத்து வாங்கிக்கொண்டது.
முந்தைய சற்றுமுன் செய்தி
Govt acquires Gandhiji's manuscript - Business Standard
Posted by சிறில் அலெக்ஸ் at 8:12 PM 0 comments
ஏசு அழைக்கிறார் தலைமை அலுவலகம் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
ஏசு அழைக்கிறார் நிர்வாக இயக்குனரும், கோவை காருண்யா பல் கலைக்கழகத்தின் இணை வேந்தருமான டாக்டர் பால் தினகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ராஜாஜி சாலை யில் ஏசு அழைக்கிறார் அமைப்பின் புதிய தலைமை அலுவலகமான ஜே.சி.ஹவுஸ் திறக்கப்பட உள்ளது. இன்று (3-ந் தேதி) மாலை 5 மணிக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை திறந்து வைக்கிறார்.
இந்த அலுவலகத்தில் ஏசு அழைக்கிறார், கோவை காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் சீஸா அமைப்பின் தலைமை அலுவலகங்கள் செயல்பட உள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலகம் இனி முழு நேர பிரார்த்தனை சேவைக்காக பயன்படுத்தப்படும்.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு தலைநகரங்களிலும் 24 மணி நேர பிரார்த்தனை கோபுரங்கள் தொடங்கப்பட உள்ளது. தினமும் டெலிபோன், கடிதம், இ.மெயில் மூலம் பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கிறார்கள். அவர்களுக்காக 24 மணி நேரமும் பிரார்த்தனை செய்கிறோம். சீஸா அமைப்பின் மூலம் ஏழைகளுக்கு உதவிகளையும் வழங்க உள்ளோம். இந்த ஆண்டு 1 கோடியே 4 லட்சம் செலவில் உதவிகள் நேரடியாக வழங்கி சேவை செய்ய உள்ளோம்.
மாலைமலர்
Posted by Boston Bala at 6:54 PM 1 comments
சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்' படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை
அஜீத்தின் கிரீடம் ரிலீசுக்கு தயாராகிறது. ஆழ்வாருக்கு பின் அவர் நடித்த படம் இது. திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். சுரேஷ் பாலாஜி தயாரித்துள்ளார். இவர் பழம் பெரும் நடிகர் பாலாஜி மகன். விஜய் இயக்கி யுள்ளார். ஜி.பி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தந்தை மகனுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டமே கதை. தந்தை பாத்திரத்தில் ராஜ்கிரன் நடிக்கிறார்.
அஜீத்தை தனக்கு பிடித்த துறையில் பெரிய ஆளாக்க ராஜ்கிரன் விரும்புகிறார். அஜீத்தோ இன்னொரு துறையில் சாதிக்க துடிக்கிறார். இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. அஜீத் குடும்பத்தை விட்டு பிரிகிறார். பிறகு தந்தை வியக்கும் வகையில் உயர்ந்து காட்டுவது கிளைமாக்ஸ்.
கிரீடம் படம் இந்த வாரம் தணிக்கை குழுவுக்கு அனுப்பட உள்ளது. வருகிற 12-ந் தேதி படம் ரிலீசாகும் என தெரிகிறது. அன்றைய தினம் தவறினால் 20-ந் தேதி வெளியாகும்.
இப்படத்துக்கான சென்னை விநியோக உரிமைகளை நாகாரவி வாங்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஆர்யா நடித்த வட்டாரம், லாரன்ஸ் நடித்த முனி படங்களை விநியோகம் செய்தவர். கிரீடத்தை வாங்க பிரமிடு சாய்மீரா மற்றும் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனங்கள் முயற்சித்தன. இறுதியில் நாகாரவி கைக்கு போய் உள்ளது.
இது பற்றி நாகாரவி கூறும் போது, கிரீடம் படத்துக்கான சென்னை வினியோக உரிமையை ரூ.75 லட்சத்துக்கு வாங்கியுள்ளேன். 5 தியேட்டர்களில் திரையிட முடிவு செய்துள்ளோம் என்றார். என்.எஸ்.சி. தவிர எல்லா ஏரியாக்களுக்கும் கிரீடம் படம் விற்கப்பட்டு விட்டது. என்.எஸ்.சி.க்கு மட்டும் தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் தொகை வராததால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
மாலைமலர்
Posted by Boston Bala at 6:52 PM 2 comments
சென்னையில் 107 வயது பெண்ணை சந்தித்த அமெரிக்க போர் வீரர்கள்
சென்னை வந்துள்ள அமெரிக்க விமானத்தாங்கி போர் கப்பலில் உள்ள வீரர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள 'விஷராந்தி' முதியோர் இல்லத்துக்கு சென்று சமூக சேவை பணியில் ஈடுபட்டனர். அங்கு 107 வயதுடைய பெண் ஒருவர் வசிக்கிறார். அவ ருக்கு ஆங்கிலம் உள்பட 5 மொழிகள் தெரியும். அவரை அமெரிக்க வீரர்கள் சந்தித் தனர். அப்போது அந்த கால அனுபவங்களை அவர் ராணுவ வீரர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இந்திய சுதந்திர போராட் டம் குறித்து அவர் கூறிய கதை களை அமெரிக்க வீரர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். இவ்வளவு அதிக வயதான பெண் திறமையாக பேசியது அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
அமெரிக்க வீரர்கள் இந்திய குழந்தைகள் நல மையத்துக்கு சென்று அவற்றை சுத்தப்படுத்தி பெயிண்ட் அடித்து கொடுத்த னர். குழந்தைகளுக்கு பரிசு பொருட்களையும் வழங்கி னார்கள்.
மாலைமலர்
Posted by Boston Bala at 6:49 PM 0 comments
600 மாணவிகளுக்கு ஒரே கழிவறை
ஆந்திர, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக மாணவிகள் சேர்க்கை பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஆந்திர அரசு பள்ளிகள் பலவற்றில் அடிப்படை வசதிகள் மோசமான நிலை இருப்பது தான் என்பது தெரிய வந்துள்ளது.
அது பற்றி கூறப்படும் புள்ளி விவரங்கள் வருமாறு:-
ஆந்திர மாநில அரசு பள்ளிக்கூடங்களில் சுமார் 40 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள். மொத்தம் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் 36 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் கழிவறை வசதி இல்லை. 24 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் சுத்தப்படுத்தப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 5 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் டேபிள், சேர் உபகாரணங்கள் போது மான அளவில் இல்லை. 20 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் போதுமான அளவு வகுப்பறை கூடங்கள் இல்லை.
அரசு பள்ளிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறைக்கு ஒரு உதாரணம். அசிபாபாத் நகரில் உள்ள ஒரு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் 600 மாணவிகள் மொத்தம் படித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே ஒரு கழிவறை வசதி மட்டுமே உள்ளது. வகுப்புகளுக்கு இடைவேளை விடும் போது இந்த கழிவறை களுக்கு முன்பு நீண்ட வரிசை யில் மாணவிகள் நிற்பது வேதனையளிக்கிறது.
இதனால் 10 நிமிட இடைவேளை போதாமல் மேலும் நேரத்தை நீட்டிக்க வேண்டியிருக்கிறது என்கின்ற னர் அப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியைகள். நிறைய அரசு பள்ளிக் கூடங்களில் காம்பவுண்ட் சுவர் இல்லை. இதைப்பயன்படுத்தி பள்ளிக்கூட இடத்தில் வீடுகள் கட்டி ஆக்ரமிக்கின்றனர் என்கின்றனர் ஆசிரியர்களும் மாணவர்களும்.
ஐதராபாத் நகரில் உள்ள நிறைய அரசு பள்ளிகளில் கூட கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லாமல் இருப்பதாக அதில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மாலைமலர்
Posted by Boston Bala at 6:36 PM 2 comments
கிரிக்கெட்: இந்தியா- பாக் ஒருநாள் போட்டி மழையால் தாமதம்
இன்று இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் காலை 1045க்குத் துவங்கவேண்டிய இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் ஆட்டம் தொடர்ந்தமழை மற்றும் ஆடுகளம் ஈரமாக இருப்பதால் தாமதமாக துவங்கும். நடுவர்கள் உள்ளூர் நேரம் 1400 மணிக்கு பார்வையிட்டு விளையாட இயலுமா என முடிவு செய்வார்கள்.
Rain delays start of India-Pakistan clash
Posted by மணியன் at 5:34 PM 0 comments
த மு மு க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அமெரிக்க போர் கப்பலின் (நிமிட்ஸ்) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை சரியாக 4மணியளவில் சென்னை துறைமுகம் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இவ் ஆர்பாட்டத்தில் 500க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர் ஆர்பாட்டத்திற்க்கு மாநில தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமைவகித்தார் பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி துனைத்தலைவர் அப்துல்ஜலீல் மாநில செயலாளர் ஜே. எஸ். ரிஃபாய், அ. சாதிக் பாஷா, எஸ். முஹம்மது ஜைனுலாப்தீன், எம். தமீமுன் அன்சாரி,பி. அப்துஸ் சமது, துனை செயலாளர்கள் எஸ் எஸ். ஹாரூன் ரஷீது ஜெ. ஹாஜா கனி மற்றும் ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்துக்கொண்டனர் பின்னர் செதியாளர்களுக்கு அதன் தலைவர் அளித்த பேட்டியில்...... அமெரிக்காவின் நேச நாடுகளான ஆஸ்த்திரேலியா ஜப்பான் போன்ற நாடுகள் கூட தங்கள் மக்களின் பாதுக்காப்பை கருதி இந்தக்கப்பலை தங்கள் கடல் எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. அமெரிக்க போர்கப்பலில் வருபவர்களை மகிழ்விக்க சென்னைக்கு ஆயிரக்கணக்கான விலை மாதர்களை வரவழைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி நம்மையெல்லாம் வெட்கி தலைகுனிய வைத்துள்ளது என்றார்.
சற்று முன்க்காக.... நண்பர் அதிரை ரவூஃப்.
Posted by Adirai Media at 5:32 PM 0 comments
UK தீவிரவாதம்: இந்திய மருத்துவர் ஆசி.யில் கைது
இலண்டனிலும் கிளாஸ்கோவிலும் தவறிய தீவிரவாத தாக்குதல் முன்னிட்டு ஒரு இந்திய மருத்துவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றொரு மருத்துவர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட் தெரிவித்தார். கான்பெர்ராவில் இதழாளர்களுக்கு அளித்த நேர்முகத்தில் இருபத்தியேழு வயதான அந்த மருத்துவர் கிழக்கு குயீன்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் பதிவாளராக பணிபுரிந்து வந்தார் என்றும் நாட்டைவிட்டு அவர் ஒருவழி டிக்கெட் எடுத்துக் கிளம்பும் முன்னர் தீவிரவாத தடுப்பு காவலர்கள் பிரிஸ்பேன் பன்னாட்டு விமானநிலையத்தில் அவரை கைது செய்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்படும் எட்டாவது நபராகும். அனைவரும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
The Hindu News Update Service
Posted by மணியன் at 4:54 PM 0 comments
19 ஆண்டுகளுக்குப் பின் நினைவு திரும்பியவர்.
போலந்து நாட்டை சேர்ந்தவர் ஜேன் கிரிப்ஸ்சி. ரெயில்வே தொழிலாளி. 19 ஆண்டுகளுக்கு முன் இவர் வேலைக்கு சென்ற போது வேகமாக வந்த ரெயில் இவர் மீது மோதியது.
படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் மயங்கிய நிலையில் (கோமா) கிடந்தார். உடலில் காயங்கள் குணமானாலும், அவருக்கு நினைவு திரும்பவில்லை. அவர் 2 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்று டாக்டர்களும் கைவிரித்து விட்டனர்.
ஆனால் ஜேன் கிரிப்ஸ்சி மயங்கிய நிலையிலேயே 19 ஆண்டுகளாக படுக்கையில் கிடந்தார். அவரது மனைவியும் நம்பிக்கை இழக்காமல் நினைவு திரும்பாத கணவனுக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேன் கிரிப்ஸ்சிக்கு இப் போது நினைவு திரும்பி விட்டது. படுக்கையில் இருந்து எழுந் தார். இப்போது அவருக்கு 65 வயது ஆகிறது. புதிய உலகத்தை பார்ப்பது போல் அதிசயமாக அனைவரையும் பார்த்தார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதும் அவருக்கு இப்போது தான் தெரியும். செல்போன்களை சர்வசாதாரணமாக எல்லோரும் பயன்படுத்துவதையும் அவர் அதிசயமாக பார்க்கிறார். எல்லாமே அவருக்கு மாறிப் போயிருந்தது.
மாலைமலர்
Posted by வாசகன் at 3:35 PM 2 comments
தொடரும் வாயாட்டங்கள்: இராமதாசுக்கு கருணாநிதி பதில்
சுயநிதி கல்லூரிகளின் அதிக கட்டணத்தை முன்வைத்து தமிழகத்தில் சுழன்றடிக்கும் அரசியல் அக்கப்போரில் இம்முறை பா ம க நிறுவனரும் தோழமை கட்சியினருமான மருத்துவர் இராமதாஸுக்கு முதலமைச்சர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.
அதில்,கடந்த ஆட்சியானாலும், இந்த ஆட்சியானாலும் சுயநிதிக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் வாங்குகின்றார்கள் என்றால், அதன் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு அந்த சுயநிதிக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் பெற்றதற்கான ஆதாரம் வேண்டுமல்லவா என்றுதான் அந்தத் துறையின் அமைச்சர் பொன்முடி திரும்பத் திரும்பக் கேட்கிறார்.
டாக்டர் அவர்களே, தானே இதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டு, இதற்கான ஆதாரத்தை தோழமைக் கட்சி என்ற முறையிலே பெற்றுத் தருவாரானால், அதற்கு சட்டப்படி மாநில அரசினால் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுக்க நான் தயாராக இருக்கின்றேன் என்ற உறுதியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுயநிதிக் கல்லூரிகளுக்கு ஆதரவாக இந்த அரசு நடக்கவில்லை. அரசுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இடையே வழக்கே நடைபெற்று நேற்று தான் அதில் அரசுக்கு சார்பான தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்தத் தீர்ப்பைப் பற்றி கோ.க.மணி இன்று வெளியிட்ட அறிக்கையில் வரவேற்றுப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதாகும்.
இந்த அரசைப் பொறுத்த வரையில் மாணவர்கள் நலன்களைக் காப்பதில் யாருக்கும் சளைத்தது அல்ல. மாணவர்களின் நலன்களை விட சுயநிதிக் கல்லூரி உரிமையாளர்களின் சொந்த நலனைப் பற்றி இந்த அரசு என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது.
அதனால் தான் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வினை ரத்து செய்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் மூன்று பல்கலைக்கழகங்களையும் நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் தொடங்கியிருக்கிறோம்.
டாக்டர் ராமதாஸ், அமைச்சர் பொன்முடி தவறே நடக்கவில்லை என்று கூறுவதாக பேசியிருக்கிறார். தவறே நடக்கவில்லை என்று அமைச்சர் எப்போதும் கூறவில்லை. நடப்பதற்கான ஆதாரத்தையும், புகாரையும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுக்க இயலுமென்று தான் அமைச்சர் பொன்முடி சொல்லி வருகிறார்.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதாகவும் பா.ம.க. நிறுவனர் கூறுகிறார். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய் யக் கூடிய அதிகாரம் மத்திய அரசின் அமைச்சர் அன்புமணியின் பொறுப்பிலே உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தானே உள்ளது. அங்கீகாரத்தை அவர் ரத்து செய்ய வேண்டுமென்றாலும், அவரிடம் புகார் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுக்க இயலும்.
``தோழமையுடன் இருக்கும் நாம், இந்த ஆட்சியிலும் போராட வேண்டுமா?'' என்று டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார். இதைத் தான் நானும் கேட்கிறேன். ஜெயலலிதா ஆட்சியை விட உயர் கல்வித்துறை அமைச்சகம் மிகவும் மோசமாக உள்ளது என்று அறிக்கை விடுத்தால் அதையும் கேட்டுக் கொண்டு தோழமைக் கட்சி கூறுகிறது என்பதற்காக விளக்கம் சொல்லாமல் இருக்க முடியுமா?
இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சகம் என்ற ஒன்றை கிடையாது. ஆனால் அதை விட தற்போது மோசம் என்று ஒரு தோழமைக் கட்சியின் தலைவர் வெளிப்படையாக விமர்சனம் செய்வது தான் முறையா?
என்று வினவியுள்ளார்
Posted by வாசகன் at 2:21 PM 0 comments
"ஷெகாவத்தும் உத்தமரில்லை" - காங்கிரஸ்
நாட்டின் தலைமைப்பதவியான குடியரசுத்தலைவர் பொறுப்புக்கு தேர்தல் களை கட்டி வரும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் பிரதீபா பாட்டில் மீது பலப்பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. அவர் சொத்து கணக்கு பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதாவினர் மனு கொடுத்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக, நீ மட்டும் யோக்கியமா தோரணையில் எதிர்கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளரும், தற்போதைய துணை குடியரசுத்தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத் மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
இதற்கான ஆதாரங்களையும் காங்கிரஸ் திரட்டி வருகிறது.
1976-ம் ஆண்டு அத்தியாவசிய பொருள் பதுக்கல் சட்டத்தின் கீழ் செகாவத்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக் கப்பட்டது. அந்த வழக்கை தோண்டி எடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகளை கூற திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அப்போதைய வழக்கின் மு.கு.ப (F I R ) ஐத் தேடி எடுக்கும் முயற்சியில் காங்கிரஸார் இறங்கி உள்ளனர்.
செகாவத் ராஜஸ்தான் முதல்-மந்திரியாக இருந்த போது அவரது மகன், மருமகன் மீது தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு செல்ல விடாமல் தடுத்ததாகவும், மருமகன் தொடர்பான வழக்கில் சட்டசபையில் பொய் சொன்னதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த செய்திகளையும் வெளியே கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
இது பற்றி பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் கூறும் போது "காங்கிரசின் எந்த முயற்சிக்கும் பலன் இருக்கப் போவதில்லை'' என்றார்.
Posted by வாசகன் at 12:56 PM 1 comments
சென்னை வந்தது நிமிட்ஸ்.
Posted by Adirai Media at 11:19 AM 0 comments
ஜெயேந்திரர் ஆஜராக உத்தரவு .
மந்தைவெளி ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உட்பட 11 பேர் மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் வரும் 23ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுகிறது. அன்று அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை மந்தைவெளியில் வசித்து வந்த ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் வீட்டு வேலையாள் ஆகியோர் தாக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக காஞ்சி ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கான்ட்ராக்டர் ரவிசுப்ரமணியன் உட்பட 12 பேர் மீது கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ரவி சுப்ரமணியன் அப்ரூவராக மாறினார்.வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி சுந்தரேச அய்யர், ரகு ஆகியோர் சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி முகமது இசத் அலி, இவர்கள் மீதான வழக்குக்கு ஆரம்ப முகாந்திரம் உள்ளது என கூறியுள்ளார். மேலும், வரும் 23ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்; வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Posted by Adirai Media at 11:02 AM 0 comments
ராதிகா செல்வி Vs. வேலு
நெல்லையில் செயல்பட்டு வந்த ரயில்வே துணை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை மதுரைக்கு மாற்றி இருக்கிறது தென்னக ரயில்வே.
"ரயில்வே அதிகாரிகளின் சுய லாபத்துக்காகவே இந்த மாறுதல்" என்று ரயில்வே ஊழியர்கள் போர்க்கொடி தூக்கும் இந்த விஷயத்தில் தலையிட்டிருக்கிறார் உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி.
"நெல்லை-திருச்செந்தூர் அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு 15 ஆண்டுகள் போராடிய பிறகுதான் தற்போது திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நெல்லையில் செயல்பட்டு வந்த துணை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை மதுரைக்கு மாற்றியதை மீண்டும் நெல்லைக்கே மாற்ற வேண்டும்'' என்று ரயில்வே துறை இணை அமைச்சர் வேலுவிடம் நேரடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளாராம் ராதிகா செல்வி.
தமிழன் எக்ஸ்பிரஸ்
Posted by Boston Bala at 9:14 AM 0 comments
ஃபெடரேஷன் கோப்பை தட களம்: தமிழகத்துக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்
மதுரையில் நடைபெற்ற 7-வது ஃபெடரேஷன் கோப்பை ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழகம் கைப்பற்றியது. ஆடவர், மகளிர் ஆகிய 2 பிரிவிலும் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் தமிழகம் வென்றது.
13 தங்கம், 14 வெள்ளி உள்பட 34 பதக்கங்களைச் சேர்த்து முதலிடத்தைப் பிடித்தது தமிழகக் குழு.
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற கேரளம், 5 தங்கம், 6 வெள்ளி உள்பட 15 பதக்கங்களைச் சேர்த்து 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.
சிறந்த வீரராக பஞ்சாப்பை சேர்ந்த அமர்தீப்சிங், சிறந்த வீராங்கனையாக தமிழகத்தைச் சேர்ந்த ஜி. காயத்திரி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முடிவுகள் விவரம் (முறையே முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் விவரம்);
ஆடவர் பிரிவு:
200 மீ. ஓட்டம்:1. மணீந்தர் சிங் (பஞ்சாப்)- 22.2 விநாடி, 2. ஹேமந்த் (தமிழ்நாடு), 3. எஸ். சத்யா (தமிழ்நாடு).
800 மீ.:1. பல்ஜித் யாதவ் (ஹரியாணா)- 1 நிமி. 58.9 விநாடி, 2. அஜய் யாதவ் (ஜார்க்கண்ட்), 3. இப்ரார் அகமது (உத்தரப்பிரதேசம்).
3,000 மீ. ஓட்டம்: 1. ஜெய்பிரகாஷ் (ஜார்க்கண்ட்)- 9 நிமி. 14.4 விநாடி, 2. பி. ராகேஷ் (கர்நாடகம்), 3. விகாஷ்மொகிட் (மகாராஷ்டிரம்).
5,000 மீ. ஓட்டம்: 1. பி. எழில்நிலவன் (தமிழ்நாடு)- 15 நிமிடம் 45.7 விநாடி. 2. சந்தீப் யாதவ் (உத்தரப்பிரதேசம்), 3. ஆனந்த்குஜுர் (ஜார்க்கண்ட்).
10,000 மீ. நடை: 1. அம்ரீத்குமார் (பஞ்சாப்)- 51 நிமி. 16.4 விநாடி, 2. பிரதீப் (ஹரியாணா), 3. அருண்லம்பா (ராஜஸ்தான்).
400 மீ. தடை ஓட்டம்:1. சிஜில் வர்க்கீஸ் (கேரளம்)- 54.0 விநாடி, 2. டி. பாலமுருகன் (தமிழ்நாடு), 3. பர்வீண்குமார் (ஹரியாணா).
நீளம் தாண்டுதல்: 1. பி.கே. அனூப் (கேரளம்)- 7.32 மீ., 2. ஆர்.எஸ். பிஜில் (தமிழ்நாடு), 3. டி. சுரேஷ்பாபு (தமிழ்நாடு).
சங்கிலிக்குண்டு எறிதல்: 1. அமித்குமார் (உ.பி.)- 59.50 மீ., 2. ராமாசங்கர் யாதவ் (உ.பி.), 3. சங்கர் பூனியா (குஜராத்).
போல்வால்ட்: 1. அவதேஷ்குமார் யாதவ் (உ.பி.)- 4 மீ., 2. கே. ராஜேஷ் (தமிழ்நாடு), 3. தனீஷ் ஸ்டீபன் (கேரளம்).
குண்டு எறிதல்: 1. ராஜீந்தர் குமார் (பஞ்சாப்)- 17.30 மீ., 2. ஜக்பீர்சிங் (ஹரியாணா), 3. பல்ஜீந்தர் சிங் (மகாராஷ்டிரம்).
உயரம் தாண்டுதல்: 1. கமல்ஜித் சிங் (ஜார்க்கண்ட்)- 2.05 மீ., 2. ஜிதின் சி. தாமஸ் (கேரளம்), 3. அபிஷேக் ராய் (மேற்கு வங்கம்).
மகளிர் பிரிவு:
200 மீ. ஓட்டம்: 1. கே. மிருதுளா (ஆந்திரம்)- 25.8 விநாடி, 2. அர்ஜினா காட்டூன் (மேற்கு வங்கம்), 3. சி. ஷில்பா (கேரளம்).
800 மீ. ஓட்டம்:1. ஜுமாகாட்டுன் (மே.வ.) -2 நிமி. 14.7 விநாடி, 2. ஸ்டெபி ஆப்ரகாம் (கேரளம்), 3. பி.இ. இந்திரா (கர்நாடகம்).
3,000 மீ. ஓட்டம்: 1. எல். சூரியா (தமிழ்நாடு)- 10 நிமி. 36.1 விநாடி, 2. சிபானி தாஸ் (மே.வ.), 3. அனிமாகுஜுர் (ஜார்க்கண்ட்).
10,000 மீ. நடை: 1. நிர்மலா (ராஜஸ்தான்)- 1 நிமி. 4.7 விநாடி, 2. சுஜாதாபதன்கர் (மகாராஷ்டிரம்), 3. அனிதா மேகலா (ராஜஸ்தான்).
400 மீ. தடை ஓட்டம்: 1. கே.ஏ. சோனிகா (கேரளம்)- 1 நிமி. 2 விநாடி, 2. ஆர். ரம்யா (தமிழ்நாடு), 3. வி. ஹனி (தமிழ்நாடு).
வட்டு எறிதல்: 1. ரிங்கோ சங்வான் (ஹரியாணா)- 39.07 மீ., 2. மணிஷாசிங் (ஹரியாணா), 3. அனிதாபசர்ஹாத்தி (கோவா).
நீளம் தாண்டுதல்: 1. பி. சுபாஷிணி (தமிழ்நாடு)- 5.46 மீ., 2. எஸ். டெல்பின்ராணி (தமிழ்நாடு), 3. கே.எம். நிம்னா (கேரளம்).
சங்கிலிக் குண்டு எறிதல்: 1. மஞ்சுபாலா (ராஜஸ்தான்)- 47.0 மீ., 2. மீனாட்சி ராஜ்ரூப் (ஹரியாணா), 3. ரீனா குமாரி (ஹரியாணா).
தினமணி
Posted by Boston Bala at 8:50 AM 1 comments
b r e a k i n g n e w s...