ஏசு அழைக்கிறார் நிர்வாக இயக்குனரும், கோவை காருண்யா பல் கலைக்கழகத்தின் இணை வேந்தருமான டாக்டர் பால் தினகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ராஜாஜி சாலை யில் ஏசு அழைக்கிறார் அமைப்பின் புதிய தலைமை அலுவலகமான ஜே.சி.ஹவுஸ் திறக்கப்பட உள்ளது. இன்று (3-ந் தேதி) மாலை 5 மணிக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை திறந்து வைக்கிறார்.
இந்த அலுவலகத்தில் ஏசு அழைக்கிறார், கோவை காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் சீஸா அமைப்பின் தலைமை அலுவலகங்கள் செயல்பட உள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலகம் இனி முழு நேர பிரார்த்தனை சேவைக்காக பயன்படுத்தப்படும்.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு தலைநகரங்களிலும் 24 மணி நேர பிரார்த்தனை கோபுரங்கள் தொடங்கப்பட உள்ளது. தினமும் டெலிபோன், கடிதம், இ.மெயில் மூலம் பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கிறார்கள். அவர்களுக்காக 24 மணி நேரமும் பிரார்த்தனை செய்கிறோம். சீஸா அமைப்பின் மூலம் ஏழைகளுக்கு உதவிகளையும் வழங்க உள்ளோம். இந்த ஆண்டு 1 கோடியே 4 லட்சம் செலவில் உதவிகள் நேரடியாக வழங்கி சேவை செய்ய உள்ளோம்.
மாலைமலர்
Tuesday, July 3, 2007
ஏசு அழைக்கிறார் தலைமை அலுவலகம் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
Posted by
Boston Bala
at
6:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
உண்மைதானா? அரசியல் எண்டா எதுவும் நடக்குமா? பூனை சகுனம் பார்க்கிறது. பல்லி கிளி ஜோசியம் பார்க்கிறது. என்னையா நாட்டில நடக்குது? பாலா நாம முழிச்சுகிட்டேதான் செய்தியை வாசிக்கிறோம்.?
கலியுகம்.
புள்ளிராஜா
Post a Comment