அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு!!
குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து சென்னை வரும் அப்துல்கலாமுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று மாலை அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதன் பின்னர் நாளை மாலை விமானம் மூலம் சென்னை வரும் அப்துல்கலாமுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அண்ணாபல்கலைக்கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து அப்துல்கலாமை வரவேற்று அண்ணா பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்துக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு தங்கியிருந்து அவர் மாணவர்களுக்கு பாடம் எடுப்பார் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
1 comment:
ஐந்து வருடங்கள் இந்த அறிவு களஞ்சியத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருந்தார்கள். இன்றுடன் அது உடைக்கபடுகிறது.
Post a Comment