.

Wednesday, April 25, 2007

சர்வதேச மகளிர் சம்மேளன துணைத் தலைவராக இந்தியப் பெண் தேர்வு

புது தில்லி, ஏப். 25: சர்வதேச ஜனநாயக மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக, இந்திய தேசிய மகளிர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஆன்னி ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச சம்மேளனத்தின் 14-வது மாநாடு, வெனிசூலா தலைநகர் காரகாஸில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், இந்திய சம்மேளனத்தின் தலைவர் சாரதாமணி, ஆன்னி ராஜா, கிருஷ்ணா மஜும்தார், பி.வி. விஜயலட்சுமி, ஆந்திரத்தின் பஸ்யா பத்மா, கேரளத்தின் கமலா சதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும், ஏழை மக்களைப் பாதிக்கும் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச சம்மேளனத்தின் தலைவராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த மர்கியா கேம்போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் ஆன்னி ராஜாவுடன், பாலஸ்தீனம், அங்கோலா, ஆர்ஜென்டீனா, சைப்ரஸ் நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

Dinamani

இட ஒதுக்கீடு: பிரதமருடன் அர்ஜுன்சிங் சந்திப்பு.


உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில்,பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் இன்று சந்தித்துப் பேசினார். ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இவ்வாண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கையின் போது, பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்க்கப்படாமல் இருப்பது குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.பிரதமரை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன்சிங், இட ஒதுக்கீடு வழக்கை முன்னதாகவே விசாரிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் மாறுபட்ட தன்மை நிலவுகிறது என்றார். வழக்கை முன்கூட்டியே விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், இதனால் இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்கப்படாமல் இருப்பது குறித்து, பிரதமருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

அணை விவகாரம்: தெலுங்கானா பகுதியில் பந்த்

அணை கட்டும் விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசின் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த தெலுங்கானா பந்த், 21 காலை துவங்கியது. இதையொட்டி அடிலாபாத், நிஸாமாபாத், கரீம் நகர், வாரங்கல் மற்றும் நல்கொண்டா ஆகிய ஐந்து தெலுங்கானா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பஸ் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன. பள்ளி, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட்டுவதற்கு மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நந்தத் மாவட்டத்திற்கு தேவையான 2.7 டிஎம்சி குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்று ஆந்திரா கூறி வருகிறது.

மகாராஷ்டிர அரசின் இந்த போக்கைக் கண்டித்து தெலுங்கானா பகுதிகளீல் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

MSN

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்திற்கு இலங்கை தகுதி?

இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தன் விளைவாக அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை குவித்தது.

இரண்டாவதாக ஆடிய நியுசிலாந்து 35 ஓவர்களில் ஒன்பது விக்கெட்களை இழந்து 165 மட்டுமே அடித்திருக்கிறது. முரளி நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், முன்னாள் உலகச் சாம்பியன் இலங்கை அணி வெற்றியின் வாயிலில் உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது.

2004-ல் "இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக பிரசாரம் செய்தது தவறுதான்: அத்வானி

புணே, ஏப். 24: 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் "இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறுதான் என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி தெரிவித்தார்:

"சென்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்று பிரகடனப்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறு. அதற்கு பதிலாக "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று பிரசாரம் செய்திருக்கலாம். அதுதான் உண்மை.

தில்லியில் சமீபத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரில் "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. அப்போது எனக்கு இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு பதிலாக இந்தியா எழுச்சி பெறுகிறது என்று கூறி தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றியது என்று அத்வானி கூறினார்.

2009-ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு "இந்தியா எழுச்சி பெறுகிறது' என்ற வாசகத்தை பிரகடனப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யப்படுமா என்று கேட்டதற்கு, உங்கள் யோசனையை வரவேற்கிறேன். ஆனால் அடுத்த தேர்தலுக்கு என்ன உத்தி கையாளப்படும் என்று இப்போதே சொல்லுவதற்கில்லை என்று அத்வானி கூறினார்.

பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன் சுடப்பட்ட முதலாண்டு நிகழ்ச்சி புணேயில் நடைபெற்றது. இதில் அத்வானி கலந்துகொண்டார். கடந்த பொதுத் தேர்தலின்போது "இந்தியா ஒளிர்கிறது' என்ற பாஜக தேர்தல் பிரசார வாசகம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் மகாஜனும் ஒருவர். இந்நிலையில் அத்வானி இப்போது அதுபற்றி கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது."

Dinamani

Tuesday, April 24, 2007

பிரான்ஸ் புறப்பட்டார் கலாம்.

ஜனாதிபதி அப்துல்கலாம் ஐந்து நாள் பயணமாக ஸ்டாரஸ்பர்க்(பிரான்ஸ்), கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டார். பிரான்ஸ் செல்லும் கலாம், நாளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். நாடுகளின் ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். இதற்கு முன்பாக ஸ்டாரஸ்பர்க் நகரில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுமைய பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து கிரீஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.ஜனாதிபதியின் கிரீஸ் பயணத்தின்போது, மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் மூலமாக இருதரப்பு நல்லுறவுகள் மேலும் வலுப்படும் என நம்பப்படுகிறது.21 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் நாட்டுக்கு கலாம் விஜயம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : YAHOO TAMIL

இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதல்.

இலங்கையில் இரண்டாவது முறையாக விடுதலைப் புலிகள் விமானபடைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக புலிகள் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தொலைபேசி வழியாக இளந்திரையன் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, இன்று அதிகாலை இலங்கையின் யாழ்பாணம் பகுதியில் உள்ள பாலே விமான தளம் மீது இரண்டு இலகு ரக விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு வன்னிப் பகுதிக்கு திரும்பி விட்டோம். இது புலிகளின் இரண்டாவது வான் தாக்குதல், என்று கூறினார்.

உ.பி தேர்தல்:பகுஜன் சமாஜ் முன்னிலை?

உத்தரபிரதேசம் நான்காம் கட்ட தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலை பெறும் என தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.உத்தரபிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. நான்காம் கட்ட தேர்தலில் 46 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனம் தேர்தலுக்குப்பின் நடத்திய கருத்துக் கணிப்பில் பகுஜன்சமாஜ் கட்சிக்கே ஆதரவு அதிகம் இருப்பதாக தெரிகிறது.மொத்தமுள்ள 57 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 13 முதல் 17 சீட்டுகளை மட்டுமே பிடிக்கும். சமாஜ்வாடி கட்சி 25 முதல் 29 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது.

Monday, April 23, 2007

சற்றுமுன் : முன்னாள் ரஷ்யா அதிபர் எல்ட்சின் மரணம்


முன்னாள் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க...

Former Russian leader Yeltsin dead

இடஒதுகீடு : தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிறபடுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.இந்திய மேலாண்மைக் கழகம்-ஐஐஎம், இந்திய தொழில்நுட்பக் கழகம் - ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்விநிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது 'பி.எஸ்.எல்.வி.- சி 8'ராக்கெட்

பி.எஸ்.எல்.வி.- சி 8 ராக்கெட்சீறிப்பாயும் காட்ச்சி

வணிக ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள 'பி.எஸ்.எல்.வி.- சி 8' ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்தாலிய நாட்டு செயற்கைக்கோள் 'ஏகிள்' உடன் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி .

சென்னை மெரீனா கடற்கரையில் விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை 5லிருந்து 6 மணி வரை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் விமானபடையின் வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்சிகளை நிகழ்த்தினர் இதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் இதையொட்டி வாகனப் போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டதின் எதிரொளியாக சாகசநிகழ்சிக்குப்பின் பொதுமக்கள் வீடு திரும்பபெரும்பாடு பட்டனர்.

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று ஒரு தபால் அட்டை வந்துள்ளது. அதில், அரசை குறைகூறி ஜெயா டிவியில் தொடர்ந்து செய்தி வருவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் ஜெயலலிதா மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது.

Saturday, April 21, 2007

நாசா கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி.

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி கட்டடத்தில் இயங்கும் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தில், பில்டிங் 44 என்ற கட்டடத்தில் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இந்த சம்பவத்தில் இருவர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாயின.கட்டடத்திற்குள் புகுந்த மர்ம மனிதன், விஞ்ஞானி ஒருவரை சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் தன்னைத் தானே சுட்டு கொன்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. கையில் துப்பாக்கியுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவன் நாசா கட்டடத்திற்குள் புகுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வெர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவ பரபரப்பு அடங்குவதற்குள், நாசா கட்டடத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம், அமெரிக்க மக்களிடையே பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சிலை உடைப்பு:முத்துப்பேட்டையில் பதற்றம்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலயை சில மர்ம ஆசாமிகளால் உடைத்ததின் எதிரொளியாக அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகிஉள்ளது இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...