உச்சநீதிமன்றம் ஏஐஐஎமெஸ் இயக்குனர் வேணுகோபாலுக்கும் நடுவண் அரசிற்கும் இருவரின் உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்த மேல்முறையீட்டினை விசாரிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேல் விவரங்களுக்கு AIIMS: SC notices to Centre, Venugopal - Daily News & Analysis
Monday, May 7, 2007
ச: AIIMS: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Posted by
மணியன்
at
1:30 PM
0
comments
ச: சார்கோசி பிரான்ஸின் அதிபராக தேர்வு
ஞாயிறன்று நடந்த அதிபர் தேர்தலில் வலதுசாரி நிக்கோலஸ் சார்கோசி 53.3% வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெண் வேட்பாளரும் இடதுசாரி அரசியல்வாதியுமான ரோயல் 46.7% வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஒரு வெளிநாட்டு வம்சாவளி பிரெஞ்சுக்காரர் நாட்டின் முதல் குடிமகனாவது வளர்ந்துவரும் இனப்பிரச்சினைகளைக் களையுமா என்ற கேள்வி அந்நாட்டு அரசியலாரிடம் எழுந்துள்ளது.
இது பற்றி - New York Times
Posted by
மணியன்
at
1:14 PM
0
comments
Sunday, May 6, 2007
ச: கௌஹாத்தியில் குண்டு வெடிப்பு: 12 பேர் காயம்
அசாமின் முக்கியநகரான கௌஹாத்தியில் மக்கள் நெரிசல்மிக்க கடைத்தெருவில் இன்று குண்டு வெடிப்பில் இரு துணைராணுவத்தினர் உட்பட, குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் குண்டு வைக்கப் பட்டிருந்ததாகத் தெரிகிறது.
மேலும்..Blast in Guwahati injures 12, including 2 troopers- Hindustan Times
Posted by
மணியன்
at
11:35 PM
0
comments
வெய்யில்: கேரளாவில் விருது, கான் திரைப்படவிழாவிற்கு தேர்வு

பசுபதி,பிரியங்கா,பரத்,பாவ்னா நடித்து இயக்குனர் ஷங்கர் தாரிப்பில் வெளியான 'வெய்யில்' படம் 'மற்றமொழிப்படங்களில் மிகச்சிறந்தது' என்ற வகையில் கேரளாவில் அம்ரிதா விருதைப் பெற்றுள்ளது. அதே நேரம் பிரான்ஸின் மதிப்புமிக்க கான்( Cannes) திரைப்பட விழாவில் இந்திய திரைபடங்களின் சார்பாக பங்குபெற தெர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
IndiaGlitz - Veyyil gets one more award - Tamil Movie News
Posted by
மணியன்
at
11:26 PM
1 comments
ச: நொறுங்கிய விமானத்தில் பயணித்த இந்தியர்கள்
இந்திய அரசு ஞாயிறன்று கென்யா ஏர்லைன்ஸில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்ததாக எண்ணப்படும் இந்திய பயணிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
1. நிக்லி ஷிர்லி (Nigli Shirly)
2. நிக்லி கெவின் ஜோசஃப் (Nigili Kewin Joseph)
3.ஜோர்ஜ் ஜோசஃப் கோச்சேரி (George Joseph Kocherry)
4. மரியா ஜோசஃப் (Maria Joseph)
5. கிரேசி மானுவல் (Gracey Manuel)
6. அமன் கௌர் (Aman Gaur)
7. பிரகாசம் சுந்தரராமன் (Prakam Sundaraman)
8. திருமதி பாக்யா மதுசூதன் (Mrs Bhagya Madhusudhan)
9. செல்வி பூஜிதா மதுசூதன் (Ms Poojitha Madhusudhan)
10. திரு மதுசூதன் (Mr Madhusudhan)
11. மேரி ரூபி (Mary Ruby)
12. அமோல் சௌஹான் (Amol Chauhan)
13. திரு நளகாத் கிரீசன் (Mr Nalakath Gireesan).
14. திருமதி மீரா ஷா) Mrs Meera Shah
இதில் திரு அமோல் சௌஹான் பார்லே குடிபானங்கள் நிறுவனத்தின் டைரக்டர் ஆவார்.
மேலுமறிய....DNA - India - Names of Indians on Kenyan plane that crashed - Daily News & Analysis
Posted by
மணியன்
at
11:15 PM
0
comments
ச: உலகின் பெரிய பயணிகள் விமானம் A380 இந்தியா வந்தது !
இந்திய வான்வெளி வரலாற்றில் முதல்முறையாக உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் A380 தில்லியின் இந்திராகாந்தி பன்னாட்டு விமானதாவளத்தில் தரையிறங்கியது. இரண்டு தட்டுகளில் 850 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்த விமானம் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் இரண்டாம் வருட கொண்டாட்டங்களின் அங்கமாக இன்று காலை இந்திய நேரம் 10.50க்கு பிரான்ஸின் துலூஸிலிருந்து வந்திறங்கியதைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. விமானநிலையத்தின் அண்மையில் செல்லும் NH 8 சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Airbus 380's maiden trip to India - Deccan Herald - Internet Edition
Posted by
மணியன்
at
10:58 PM
2
comments
இன்று ஐம்பது - நாவல் "Atlas Shrugged " by Ayn Rand
தத்துவ இயலை கருவாக கொண்டு வெளிவந்த நாவலாசிரியர் Ayn Rand ன் ஆங்கில நாவல், "Atlas Shrugged" இன்று தன் ஐம்பதாவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. 1957 ல் வெளியிடபட்ட இந்த புத்தகம் மக்களிடையே பரவலாக படிக்க பட்ட ஒன்றாக இருக்கிறது.
இந்த புத்தகத்தை பற்றி சில கருத்துக்களை படிக்க
http://www.ocregister.com/ocregister/opinion/atoz/article_1681164.php
http://www.ocregister.com/ocregister/opinion/atoz/article_1681148.php
Posted by
Radha Sriram
at
9:19 PM
0
comments
போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாததால் மக்களவை ஒத்திவைப்பு
புதுதில்லி, மே 5: போதுமான உறுப்பினர்கள் இல்லாததால், வெள்ளிக்கிழமை மாலை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் வெள்ளிக்கிழமை மாலை பட்டினி சாவுகளைத் தடுப்பது குறித்தப் பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர் சிந்தா மோகன் கிளப்பினார்.
Posted by
Boston Bala
at
1:26 AM
1 comments
ஆண்டுக்கு 16 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன: மத்திய அரசு தகவல்
புதுதில்லி, மே 5: நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் ஆண்டுக்கு 16 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன; இதில் 11 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன என சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி கூறியுள்ளார்:
குறைப் பிரசவம், மிகக் குறைந்த எடையுடன் பிறத்தல், வயிற்றுப் போக்கு, மலேரியா, சின்னம்மை, மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகளே பிறந்த ஓராண்டுக்குள் குழந்தைகளின் இறப்புக்கு அதிக அளவில் காரணமாகின்றன.
குழந்தைகள் இறப்பு உலகளவில் இந்தியாவில்தான் அதிகம் என யுனிசெப் (ஐ.நா. குழந்தைகள் நிதியம்) அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில் 11 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன.
Dinamani
Posted by
Boston Bala
at
1:22 AM
1 comments
Saturday, May 5, 2007
ச:பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் ஜெயில்
ஹில்டன் ஓட்டல் குடும்ப வாரிச்சும், உலகளாவிய பிரபலமுமான பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய வழக்கில் விதிக்கப்பட்ட தடையைஇ மீறி லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:18 PM
3
comments
ச:ரூ.50கோடி வரி ஏய்ப்பு அம்பலம்
தூத்துக்குடி குமரி உள்ள தனியார் கல்லூரிகளிலும் மேலாளரின் வீட்டிலும் வருமானவரி சோதனையில் ரூ.50 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
குலசேகரம் பகுதியில் மூகாம்பிகை கல்விநிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இப்பகுதியைஅ சேர்ந்த வேலாயுதம் நாய்யர் என்பவர் இதை நடத்துகிறார். இந்த நிறுவனமும் மற்றுமொரு நிறுவனமும் வருமானவரி அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
Around Rs. 50 cr. worth tax evasion detected
Posted by
சிறில் அலெக்ஸ்
at
6:12 PM
0
comments
ச:பயிற்சியின்போது ட்ராவிட் முகத்தில் காயம்
பயிற்சியின்போது ஆர்.பி. சிங்கின் பந்து ராகுல் ட்ராவிட் முகத்தில் பட்டு காயம் ஆனது. காயம் பெரிதானதில்லையென்றாலும் அவர் மூக்கிலிருந்து ரத்தம் வந்ததால் ஓய்வு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
6:04 PM
0
comments
ச:யாஹூ புகைப்பட சேவை மூடப்படுகிறது
ப்ளிக்கரை(Flikr) பிரபலப்படுத்தவேண்டி யாஹூ தன் புகைப்பட சேவையை (yahoo! Photos) மூடிவிட்டு பயனாளர்களை Flikrக்கு மாறச் சொல்கிறது.
வரும் ஜூன் முதல் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Yahoo to shut down Yahoo Photos service, push Flickr
Posted by
சிறில் அலெக்ஸ்
at
5:20 PM
1 comments
ச:மன்மோகன்சிங் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுவது சரியல்ல : கேரள எம்பி
சிபிஎம் சார்ந்த சுயேட்சை எம்பி செபாஸ்டியன் பால் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது அரசியலமைப்பிற்கு ஒழுங்கீனமானது என்று கூறினார். காங்கிரஸ் அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும், அதன் மூலம் தனது அரசிற்கு அவர் மக்களிடமிருந்து தார்மீக ஆதரவு பெற்றிருப்பார் எனக் கூறினார்.
PM's election to Rajya Sabha serious impropriety: MP
Posted by
மணியன்
at
5:00 PM
0
comments
ச; தோஹாவில் ஐசிஐசிஐ வங்கி கிளை திறப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரியவங்கியும் நாட்டின் மிகப் பெரிய தனியார்துறை கடன்வழங்கு நிறுவனமுமான ஐசிஐசிஐ வங்கி கத்தாரின் தோஹாவில் தன் கிளையை திறந்தது. இதுவே அங்கிருக்கும் முதல் இந்திய வங்கியாகும்; வெளிநாட்டில் அதன் 18ஆவது கிளையாகும்.
The Hindu News
Posted by
மணியன்
at
4:48 PM
0
comments
b r e a k i n g n e w s...
