.

Tuesday, May 8, 2007

தமிழில் நேரடி கிரிக்கெட்- ராஜ் .டி.வி ஒளிபரப்புகிறது

இந்தியா - வங்கதேசத்துக்கிடையேயான கிரிக்கெட் போட்டிகள் ராஜ் டி.வியில் தமிழ் வர்னணையோடு ஒளிபரப்பப்படவுள்ளது என ராஜ் டி.வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர்

ச: "சிவாஜி' திரைப்படத்தின் பெயர் தமிழ்ப்பெயரா?

சென்னை, மே 7:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் "சிவாஜி' படத்தின் பெயர் தமிழ்ப் பெயரா என்று சட்டசபையில் காங் கிரஸ் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

சுற்றுலா மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீது சட்டசபை யில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பாமக உறுப்பினர் செந்தமிழ்ச் செல்வன், நல்ல தமிழ் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கும், பிற மொழி கலப்பில்லாத வசனங்கள் கொண்ட திரைப்படங்களுக்கும் அரசு கூடுதல் மானியமும், சலுகைகளும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய இ.எஸ்.எஸ். ராமன் (காங்.), தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங் களுக்கு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதனால் இப்போது பெயர் வைப்பதில் நல்ல மாற்றம் வந்துள் ளது. ஆனால், தமிழ் பெயர்கள் குறித்து முடிவு எடுக்க ஏதேனும் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள் ளதா? விரைவில் வெளிவர இருக்கும் "சிவாஜி' திரைப்படத்தின் பெயர் தமிழ்ப்பெயரா? என்று கேட்டார்.

அந்த கேள்விக்கு செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியிடம் இருந்து பதில் பெற உறுப்பினர் ராமன் விரும்பினார். ஆனால் பரிதி இளம்வழுதி உடனடியாக பதிலளிக் காமல் அப்புறம் சொல்கிறேன் என்று நழுவினார்.

- மாலைச்சுடர்

ச: மாநில அரசுகள் எதிர்ப்பு: `செக்ஸ்' கல்வி பாடத்தில் திருத்தம்

புதுடெல்லி, மே. 7-

`எய்ட்ஸ்' நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் `செக்ஸ்' கல்வியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பரீட்சார்த்தமாக மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் இவை இதை பாடத்திட்டமாக கொண்டு வந்துள்ளனர். மாணவர்களுக்கு கல்வியை எப்படி போதிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பாடத்திட்டம் மிக மோசமாக இருப்பதாகவும், இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகம், சதீஸ்கார் ஆகிய மாநில அரசுகள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன் செக்ஸ் கல்விக்கு தடை விதித்து உள்ளன.

எனவே செக்ஸ் பாடத்திட்டம் தொடர்பாக மறு ஆய்வு செய்யதயாராக இருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு டைரக்டர் நிïலரல் சுஜாதா ராவ் தெரிவித்து உள்ளார்.

சில மாநில அரசுகள் இதற்கு தடை விதித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். பாடத்திட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.

- மாலை மலர்

ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை: முதல்வர் தகவல்

சென்னையில் கவிஞர் பா.விஜய்யின் 10 கவிதை நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது: "கடந்த ஆட்சியில் அரசு வேலையில் ஆள் சேர்க்கத் தடைச் சட்டம் கொண்டு வந்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது. இந்த இமயம் வளரக் கூடாது என்பதற்காக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 11 மாதங்களில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 649 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இனி மேலும் தொடர்ந்து அரசு வேலைகள் வழங்கப்படும்."

இந்நிகழ்ச்சியில் கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், மு. மேத்தா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர்கள் விவேக், பாக்யராஜ், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ச:டெக்சாசில் 2 இந்திய மாணவர்கள் மர்ம மரணம்

கூஸ்டன், டெக்சாசில் இரண்டு இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி வளாகத்திலிருந்த நீச்சல் குளத்தில் இறந்து கிடந்ததனர்.இருவருக்கும் வயது 23.

இவர்கள் கொல்லப்பட்டார்களா என்பதற்கு எந்த நேரடி ஆதாரமும் பெறப்படவில்லை என்றும், இருவரும் முந்தைய இரவில் மது அருந்திக்கொண்டிருந்ததைக் கண்ட சாட்சிகள் உள்ளதென்றும் போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போன மாதம் அதே வளாகத்தில் இரு வெளி நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் அதற்கும் இதற்கும் தொடர்பிருக்குமா எனத் தெரியவில்லை எனவும் போலீஸ் தெரிவித்தனர்.

Indian students found dead

பீடியில் மண்டை ஓடு சின்னம்: உத்தரவை கைவிட பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை, மே 7: பீடியின் மீது மண்டை ஓடு சின்னத்தை கட்டாயம் அச்சிட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய அறிவிப்பால் 15 லட்சம் பீடித் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என்றும் முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தனது கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதம்.

உருக்கு ஏற்றுமதியைத் தடுக்க வெனிசுலா அதிபர் முடிவு

காராகாஸ், மே 7: வெனிசுலா நாட்டின் மிகப்பெரிய உருக்கு நிறுவனம் "சிடோர்", ஏற்றுமதிக்குத் தரும் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு முதலில் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹியூகோ சாவேஸ் அறிவுறுத்தியிருக்கிறார். அப்படிச் செய்யாவிட்டால், நிறுவனத்தை அரசே ஒரு விலை நிர்ணயித்து எடுத்துக் கொண்டுவிடும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.

"சிடோர்" நிறுவனம் உருக்கு உற்பத்தியில் மிகப்பெரும் பங்கை வகித்தாலும் அது தன்னுடைய தயாரிப்பில் பெரும் பகுதியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறது. "சிடோர்" நிறுவனத்தின் தாய் நிறுவனம் லக்செம்பர்க்கில் உள்ள "டெர்னியம் சா" என்ற மிகப்பெரிய தொழில் குழுமம் ஆகும். அது ஆர்ஜென்டீனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

"வெனிசுலாவிலிருந்து கனிமத்தை எடுத்து, வெனிசுலா நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பைக் கொண்டு உருக்கைத் தயாரித்து, வெனிசுலா நாட்டு அரசு தரும் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, கிடங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதித்தால் வெனிசுலா அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?" என்று கேட்டார் சாவேஸ்.

Dinamani

ச: காஷ்மீர் தால் ஏரி படம்


காஷ்மீரில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற தால் ஏரியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் அழகிய நீரூற்றுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்ணுக்கும் மனதுக்குள் குளிர்ச்சியாய் காட்சி தருகிறது தால் ஏரி. அடுத்த படம்: அதில் படகுச் சவாரி சென்று இயற்கை அழகை ரிலாக்ஸாக ரசிக்கிறார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா.

ச: முதல்வரின் சட்டமன்ற பொன்விழாவுக்கு அரசு பணம் செலவிடப்படவில்லை

சென்னை, மே 7-
முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன் விழாவுக்கு அரசு சார்பில் பணம் செலவிடப்படவில்லை. அதனால் மக்களை குழப்ப வேண்டாம் என்று தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.


முதல்வர் கருணாநிதியின் இந்த விழாவுக்கு அரசாங்கத்தின் சார்பில் எந்தவிதமான செலவும் செய்யப்படவில்லை. பொதுக்கூட்ட விழா அனைத்தும் தி.மு.கவாலும், அதன் தோழமைக் கட்சிகளாலும்தான் செய்யப்படுகின்றது. சட்டமன்றத்தில் நடத்தப்படும் விழாவுக்கும் அரசாங்கத்தின் சார்பில் எந்தவிதமான செலவும், செய்யப்படாமல் நாங்களே பார்த்துக் கொள்வோம். எனவே அரசு பணம் செலவிடுவதாக நினைத்துக் கொண்டு யாரும் வருத்தப்பட வேண்டாமென்றும், மக்களை குழப்ப வேண்டாமென்றும், விழாக் குழுவின் பொருளாளர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார்.

- மாலை முரசு

ச: ஆற்றல்மிக்க முதல்வர்கள் அண்ணா, காமராஜ்

சென்னை, மே 7-
ஆற்றல் மிகுந்த முதல்வர்கள் என்று பட்டியலிடச் சொன்னால் பேரறிஞர் அண்ணாதான் முதல் இடத்தில் இருப்பார் என்று இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்குபணி, கீழ்த்தட்டு மக்களிடம் கொண்ட ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் 1950களில் இருந்து 1980 வரை இருந்த முதலமைச்சர்களை மதிப்பிடச் சொன்னால் உங்கள் பட்டியலில் யார் முதலிடம் வகிப்பார்? ஏன்? உங்கள் கருத்துப்படி- சட்டப்பேரவையில் ஆற்றல்மிக்க முதலமைச்சராக திகழ்ந்தவர் யார்?


ஆற்றல் மிகுந்த முதலமைச்சர் என்று பட்டியலிடச் சொன்னால் என் கருத்துப்படி அண்ணாதான் முதல் இடத்திலே இருப்பார். ஆனால் அவரது ஆட்சிக் காலம் இரண்டாண்டு காலமே நீடித்ததால் அதிகப் பயனைப் பெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு, பணி, கீழ்த்தட்டு மக்களிடம் கொண்ட ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் சொல்லவேண்டுமேயானால் ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி நடத்திய காமராஜரைத்தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

- மாலை முரசு

Monday, May 7, 2007

ச: கல்லூரிகளில் தமிழ் புறக்கணிப்பு - தமிழாசிரியர்கள் கவலை

திருச்சி, மே 7-

மொழிக் கொள்கைக்கு எதிராக கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழர் பண்பாட்டை கற்பிக்கவும், அவர்களின் அறவியல், கலைத் திறனை வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு கல்லூரிகளில் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதன்படி தன்னம்பிக்கை, நாட்டுப் பற்று, சமூக சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி திருமூலர், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் முதல் தற்போதைய இலக்கியவாதிகளின் படைப்புகள் வரை பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொலை தூரக் கல்வி மையம் மூலம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்போருக்கு ஒரு பருவத்துக்கு (செமஸ்டர்) ஒன்று என மொத்தம் 4 தாள்களும், தொலை நிலைக் கல்வி மையம் மூலம் படிப்போருக்கு ஆண்டுக்கு ஒரு தாள் என இரண்டும் தமிழ்த் தாள்கள் இருக்கும். கல்லூரிகளில் 90 வேலை நாட்களுக்கு 90 மணி நேரம் தமிழ்ப் பாடங்கள் நடத்தப்பட்டு, நான்கு பருவத்துக்கும் மொத்தம் 360 மணி நேரம் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளாக இளநிலை வணிகவியல் (பி.காம்) பட்டப் படிப்பு மாணவர்களுக்கு முதல் ஆண்டு மட்டும் போதும். அதுவும் இலக்கண இலக்கியங்களைப் பயிற்றுவிக்க தேவையில்லை என்று முடிவு செய்து ‘வணிகத் தமிழ்Õ என்று ஒரு தாள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. பின்னர் தொலை நிலைக் கல்வி மையம் மூலம் கற்பிக்கப்படும் குறிப்பிட்ட சில பட்டப் படிப்புகளுக்கும் இதே நடைமுறையை தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார், பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைவு பெற்ற சில தன்னாட்சி கல்லூரிகளில் பி.காம் மற்றும் பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதலாண்டு மட்டுமே தமிழ்ப்பாடங்கள் தற்போது நடத்தப்படுகின்றன.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சில கல்லூரிகளில் 8 பட்டப் படிப்புக்களுக்கு தமிழ்ப் பாடம் முதல் ஆண்டு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இந்த தமிழ் புறக்கணிப்புக்கு விருப்ப பாட தேர்வு புள்ளி முறை (சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம் - சி.பி.சி.எஸ்) எனும் முறையை சாதுர்யமாக பயன்படுத்தியுள்ளனர். இதையே தமிழகம் முழுவதும் சில தன்னாட்சி கல்லூரிகள் பின்பற்ற தொடங்கியுள்ளன. இது போன்ற முறை தொடர்வது நல்லதல்ல என்கின்றனர் பேராசிரியர்கள்.

- மாலை முரசு

ச: வரதட்சணை கேட்டு நடிகர் பிரசாந்த் கொடுமை: மனைவி புகார்

சென்னை: வரதட்சணை கேட்டு நடிகர் பிரசாந்த் கொடுமை மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். நடிகர் பிரசாந்த் , கிரகலட்சுமி திருமணம் முடிந்த சொற்ப காலங்களிலே பிரிந்தனர். இதனையடுத்து மனைவியை குடும்பம் நடத்த வர உத்தரவிடுமாறு பிரசாந்த் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில் கிரகலட்சுமி , கணவர் பிரசாந்த பல முறை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார் என கமிஷர் லத்திகாசரணை சந்தித்து மனுக்கொடுத்துள்ளார்.

- தினமலர்

ச:போலி என்கௌன்டர் வழக்கு: நாடாளுமன்றம் அமளியால் தள்ளி வைப்பு

குஜராத் போலி துப்பாக்கிசூடு விவகாரத்தினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் குஜராத் முதல்வர் மோடியின் பதவி விலகலைக் கோரி அவைநடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அவை நடைவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டன.

News From Sahara Samay:: Parliament adjourned over Guj fake encounter

ச: AIIMS: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உச்சநீதிமன்றம் ஏஐஐஎமெஸ் இயக்குனர் வேணுகோபாலுக்கும் நடுவண் அரசிற்கும் இருவரின் உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்த மேல்முறையீட்டினை விசாரிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேல் விவரங்களுக்கு AIIMS: SC notices to Centre, Venugopal - Daily News & Analysis

ச: சார்கோசி பிரான்ஸின் அதிபராக தேர்வு

ஞாயிறன்று நடந்த அதிபர் தேர்தலில் வலதுசாரி நிக்கோலஸ் சார்கோசி 53.3% வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெண் வேட்பாளரும் இடதுசாரி அரசியல்வாதியுமான ரோயல் 46.7% வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஒரு வெளிநாட்டு வம்சாவளி பிரெஞ்சுக்காரர் நாட்டின் முதல் குடிமகனாவது வளர்ந்துவரும் இனப்பிரச்சினைகளைக் களையுமா என்ற கேள்வி அந்நாட்டு அரசியலாரிடம் எழுந்துள்ளது.

இது பற்றி - New York Times

-o❢o-

b r e a k i n g   n e w s...