.

Tuesday, June 26, 2007

முதிர்ந்த காதல்; மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்.

கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. அப்போது பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பத்தை சேர்ந்த ராயர் படையாட்சி (82) என்பவர் தனது மனைவி பிச்சையம்மாளை (80) இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்களுடன் ஸ்டிரச்சரில் தூக்கிக் கொண்டு கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்தார்.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அமைப்பினர் மூதாட்டி பிச்சையம்மாள் இருந்த ஸ்டிரச்சரை கலெக்டருக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தனர். இதைபார்த்த கலெக்டர் ராஜேந்திரரத்னூ தனது இருக்கையை விட்டு எழுந்து ஸ்டிரச்சர் அருகே ஓடிவந்தார் அவரை பார்த்த முதியவர் ராயர் தான் கொண்டு வந்த மனுவை கலெக்டரிடம் கொடுத்தார். அப்போது ராயர் எனக்கு அரசு நிலம் வழங்கிய இடத்தில் வீடு கட்டிதாருங்கள். அதுவே எனது ஆசை என்று கூறினார். இதனை தொடர்ந்து ராயர் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து உடல் நலம் குன்றியிருந்த மூதாட்டி பிச்சையம்மாளை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லுமாறு கலெக்டர் கூறினார். ஆனால் அதற்கு ராயர் மறுத்து விட்டார். நாங்கள் ஊருக்கு போகிறோம். என்னால் எனது மனைவியை பிரியமுடியாது. இது எங்கள் வாழ்க்கையின் கடைசி கட்டம். உயிர் போவதற்குள் சொந்த வீட்டில் இருவரும் வாழ வேண்டும். என்பதே எங்கள் ஆசை என்று கூறினார்.

பின்னர் முதியவர் ராயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுக்கு குழந்தைகள் இல்லை உறவு என்று சொல்ல எவரும் இல்லை. 60 ஆண்டுகளுக்கு முன்பு நான் பரங்கி பேட்டையில் தென்னை மரம் ஏறிக் கொண்டு இருந்தேன். அப்போது பிச்சையம்மாள் தென்னை ஓலைகளை எடுத்து ஈக்குகளை சேகரித்து விற்பனை செய்து வாழ்ந்து வந்தாள். அவள் மீது பரிதாபம் கொண்ட நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பின் ஒருநாள் கூட நாங்கள் பிரிந்தது இல்லை. உயிர் போவதற்குள் சொந்த வீட்டில் வாழவேண்டும் என்பது தான் எங்களது ஒரே ஆசை எங்களது ஆசையை கலெக்டர் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார். என்று நம்புகிறேன்.

இவ்வாறு ராயர் கூறினார்.

மாலைமலர்

அரசியலில் முன்னாள் கேப்டன் அஸ்ஹருத்தீன்

தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸ்ஹருத்தீன் சேருகிறார்.

தேவேகவுடா கட்சியில் அஸ்ஹருத்தீன் சேருகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்ஹருத்தீன். சூதாட்டத்தில் சிக்கியதால் இவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.

கிரிக்கெட்டுக்கு பிறகு அவர் தற்போது அகாடமிகளை நடத்தி இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மேலும் பல்வேறு வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் அஸ்ஹருத்தீன் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மத சார்பற்ற ஜனதாதள கட்சியில் அவர் சேருகிறார். தேவேகவுடாவை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அஸஹருத்தீன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் நாளை சேரலாம் என்று தெரிகிறது.

இதே போல இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான தோடா கணேசும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் சேருகிறார். அவரும் தேவேகவுடாவை சந்தித்து பேசினார்.

தோடா கணேஷ் சமீபத்தில்தான் முதல்தர போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பிறகு புதிய வாழ்க்கையான அரசியலுக்கு பிரவேசிக்கிறார்.

முன்னாள் வீரர்களான கீர்த்தி ஆசாத், சேட்டன் சவுகான், சித்து ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் விழுந்து நொறுங்கி 27 பேர் பலி.

கம்போடியா நாட்டை சேர்ந்த `ஏ.என்.24' ரக விமானம் அந்த நாட்டின் சீம்ரீம் பகுதியில் இருந்து சிகானுக்விலி என்ற இடத்துக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் சிப்பந்திகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேர் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாக மறைந்து விட்டது. விமானத்தின் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

அப்போது பலத்த காற்றும் வீசியது. சிறிது நேரத்தில் அந்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேரும் பலியாகி விட்டனர்.

இந்த இரு சுற்றுலா நகரங்களுக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் தான் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. விபத்தில் பலியானவர்களில் 13 பேர் தென்கொரி யாவை சேர்ந்தவர்கள். 3 பேர் செக் குடியரசை சேர்ந்தவர்கள். 5 பேர் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள்.

இந்திய விமானங்கள் தரையிறங்க குவைத் அரசு தடை.

இந்தியாவின் அரசு சார்பு விமானப் போக்குவரத்து நிறுவனங்களான "இந்தியன்' மற்றும் "ஏர் இந்தியா' ஆகியவற்றின் விமானங்கள் தரையிறங்க குவைத் அரசு தடை விதிக்க இருக்கிறது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இத்தடை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் வேறு விமானப் போக்குவரத்து நிறுவனங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தப்படி, இந்தியாவிலிருந்து குவைத்துக்கு செல்லும் குவைத் அரசு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதியளிக்க வேண்டும் என அந்நாடு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை இந்தியா கண்டுகொள்ளாமல் இருப்பதால் குவைத் இந்த முடிவை எடுத்திருப்பதாக "அரபு டைம்ஸ்' என்ற நாளிதழ் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரைஇடைத்தேர்தல்"சற்றுமுன்" நிலவரப்படி 20 சதவீதம் வாக்குப்பதிவு.

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பெரும் பரபரப்புக்கு இடையே இன்று நடக்கிறது. ராணுவம் மற்றும் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்து வரும் இந்த தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி 20 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் தெரிவித்தார்.

இணையத்தில் வெறுப்பேத்தும் வார்த்தைகளில் - 'வலைப்பதிவு'

ஒரு கருத்துக்கணிப்பின்படி இணைய பயனாளர்களிடம் வெறுப்பை வரவளைக்கும் வார்த்தைகளாக வலைப்பதிவு(Blog), பதிவுலகம்(Blogsphere), இணைய நல்லொழுக்கம்(Netiquette), விக்கி(Wiki) ஆகியன முதல் பத்துக்குள் இடம்பெற்றுள்ளன.

முதல் வெறுக்கப்படும் வார்த்தையாக Folksonomy தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பதிவுலகம் இரண்டாவதாகவும், பதிவுகள்(Blog) மூன்றாவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பதிவுகளைக் கொண்டு ஆக்கிய புத்தகம்(Blook) நான்காவதாகவும், குக்கீ(Cookie) ஒன்பதாவதாகவும், விக்கி(Wiki) பத்தாவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

`Blog`, `wiki` top list of hated Internet words - Zee News

Monday, June 25, 2007

பிரதமர் சகோதரர் மகளுக்கும் வரதட்சணைக் கொடுமை.

இந்தியாவின் சமூக அவலங்களுள் ஒன்றான வரதட்சணைக்கொடுமை, இந்தியப்பிரதமர் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. பிரதமர் மன்மோஹன் சிங்கின் சகோதரர் இந்திரஜித் சிங்கின் மகளான அம்னீத்கவுர் லூதியானா மாவட்ட காவல்துறையிடம் வரதட்சணை புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் தன் கணவர் ராணா இந்திவார் சிங், நாத்தனார்கள் பல்விந்தர் கவுர், ஜஸ்மீத் கவுர் மற்றும் அவதார் சிங் ஆகியோர் மீது வரதட்சணைக்கொடுமை குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதன் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்து, வழக்கு பதிவு செய்து பல்விந்தர் கவுரை நீதிமன்ற காவலிலும், ஜஸ்மீத் கவுர், அவதார்சிங் ஆகியோரை காவல்நிலைய காவலிலும் வைத்துள்ளனர். வரதட்சணையாக வழங்கப்பட்ட பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்
என்கிறது இந்தச்செய்தி.

சிசேரியன் விவகாரம்: டாக்டர் தம்பதிகள் கைது

உலக சாதனைக்காக தங்கள் 15 வயது மகனை வைத்து சிசேரியன் அறுவைசிகிச்சை செய்ய வைத்த டாக்டர் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டனார்.

Doctor-parents of 15-year-old arrested - The Hindu

குவைத்திலிருந்து இந்தியன், ஏர் இந்தியா விமான சேவை ஜூலை 1 முதல் இரத்து ?

ஜூலை ஒன்று முதல் குவைத்திலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டி வரும். குவைத்தின் விமான சேவைகளை இந்தியா அதிகரிக்க ஒப்புக்கொள்ளாததால் இந்தியன், ஏர் இந்தியா விமானவேவைகளைகுவைத் நிறுத்தப் போவதாக அரப் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

இதுபற்றி மேலும் அறிய..No AI, 'Indian' flights to Kuwait from July 1 - Daily News & Analysis

அயல்நாட்டு கப்பற்படை கலங்கள் இந்தியாவிற்கு வருவது புதுமை அல்ல: அந்தோணி

முதன்முறையாக அமெரிக்க கப்பற்படைச் சார்ந்த விமானந்தாங்கி படைக்கலம் USS Nimitz சென்னை துறைமுகத்தில் நங்கூரமிடப் போகிறது. 'முக்கிய நாடுகளுடனான ஒத்துழைப்பின் பொருட்டு' இவ்வாறு பயிற்சிகள் நடத்துவது புதிதல்ல என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி கூறினார். 90 போர்விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் தாங்கிய இக்கலம் அரபிக்கடலில் ஆறு மாதம் தங்கியிருக்கும். முன்னதாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் உருசிய கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் தங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
முன்னதாக சிபிஎம் இக்கப்பல் சென்னையில் தங்குவதற்கு
எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அணுஆய்தக் கப்பல்களை இந்திய துறைமுகங்களில் அனுமதிப்பதில்லை என்ற இந்திய அரசின் கொள்கைக்கு இது புறம்பானது என்று கூறியிருந்தார். அக்கொள்கையிலிருந்து விலகுவதற்கு அரசிற்கு என்ன கட்டாயம் ஏற்பட்டது என்று அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என மேலும் அவர் கூறினார்.

The Hindu News Update Service

குடியரசுதலைவர் தேர்தல்: 19 பேர் வேட்புமனு தாக்கல்

ஆளும் கூட்டணியின் பிரதீபா பாடில், பிஜேபியின் சுயேட்சை வேட்பாளர் செகாவத் உட்பட பத்தொன்பது பேர் இதுவரை குடியரசுதலைவர் தேர்தலுக்கு வேட்புனு கொடுத்துள்ளனர். வேட்புமனுக்கள் ஜூன்30 வரை ஏற்றுக் கொள்ளப்படும். ஜூலை இரண்ட்டம் தேதி அவை பரிசீலிக்கப்படும். ஜூலய் 4 தேர்தலிலிருந்து விலகிக் கொள்ள கடைசிநாள்.
The Hindu News Update Service

பாலம் உடைந்து இரயில் விபத்து: ஆறு பேர் பலி

அசாமில் வடக்கு கச்சார் மலை மாவட்டத்தில் ஒரு சரக்கு இரயில் சென்றுகொண்டிருந்தபோது அதனடியே பாலம் முறிந்ததில் ஆறு பேர் மரணம்; ஏழு பேர் காயமடைந்தனர். இறந்ததில் ஒருவர் வண்டி ஓட்டுநர். மற்றவர்கள் சரக்கு இரயிலின் கூரையில் பயணித்த உள்ளூர்வாசிகள்.
The Hindu News Update Service

திட்டமிட்டபடி நாளை இடைத் தேர்தல்.

மதுரை மேற்குத் தொகுதியில் நாளை திட்டமிட்டபடி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
மதுரை வந்த கோபாலசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட விரும்பவில்லை. தேர்தலை சுமூகமாகவும், அமைதியான முறையில் நடத்தவும் முக்கியத்துவம் கொடுக்கிறது. மதுரை மேற்கு தொகுதியைப் பொறுத்தவரை தற்போது தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என தீர்மானித்துள்ளோம். எனவே திட்டமிட்டபடி நாளை இடைத் தேர்தல் நடைபெரும். 29ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.

மல்லிபட்டினம் மீனவர்கள் 3 பேர் உடல் இன்று கரை ஒதுங்கியது.

மற்றவர்கள் கதி என்ன?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தில் இருந்து கடந்த 21ம் தேதி, மீன்பிடிப்பதற்காக 40 படகுகள் கடலுக்குள் சென்றன. 37 படகுகள் கரை திரும்பியுள்ள நிலையில் மற்ற 3 படகுகளில் சென்ற 7 மீனவர்கள் மட்டும் இன்னமும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களின் உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மீன் பிடிக்கச் சென்று 4 நாட்களாகியும் 7 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இந்நிலையில் இன்று 3 மீனவர்கள் உடல் கரை ஒதுங்கியது. மற்றவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இதனால் அம்மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியது.

ச:ஹைதரபாத்: கடன் மீட்பு: வங்கி 'குண்டர்'களின் அடிதடியில் ஒருவர் பலி

சுகாதாரத்துறையில் மின்சார ஊழியராக பணியாற்றிய யாதையா, தனிநபர் கடனாக ஐசிஐசிஐ வங்கியில் 15,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதனை திருப்பிக் கட்ட தவறியதால் கடன்மீட்பை உறுதியளிக்க நியமிக்கப் பட்ட வங்கி ஒப்பந்ததாரர் எலைட் பினான்சியல் சர்வீஸ்காரர்கள் வெள்ளியன்று அவருடன் சண்டையிட்டதில் அமீர்பேட்டை மருத்துவமனையொன்றில் நேற்று அவர் மரணமடைந்தார். அவரது உடலை பேகம்பேட் வங்கிக் கிளையின் முன் வைத்துக் கொண்டு அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உச்சநீதிமன்றத்தின் வன்முறையை பயன்படுத்தி கடன் மீட்பு செய்யக்கூடாது என்ற ஆணையின் பின்னும் வங்கிகள் தங்கள் முறைகளை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
Loanee dies in scuffle with bank agents-Hyderabad-Cities-The Times of India

-o❢o-

b r e a k i n g   n e w s...