.

Friday, August 31, 2007

கற்பழிப்பு வழக்குகளை பெண் நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்

புதுடெல்லி, ஆக. 31-
கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்ற வழக்குக ளை கூடிய மட்டும் பெண் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என உள்விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை கோட்பாடுகள் திருத்த மசோதா, உள்விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தி பல்வேறு பரிந்துரைகளை தற்போது இந்தக்குழு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.குழு செய்த பரிந்துரைகள் வருமாறு:

கற்பழிப்பு வழக்குகளை கூடிய மட்டும் பெண் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் மருத்துவர் ஒருவரது மேற்பார்வையில் தான் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். புகார் கொ டுத்த பெண்ணை காவல்நிலையத் துக்கு அழைத்து வராமல் அவரது வீட்டில் வைத்தே விசார ணை நடத்த வேண்டும். விசாரணையை பெண் போலீஸ் அதிகாரி மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் 18 வயதுக்கு குறைந்தவராக இருந்தால் விசாரணையின் போது அவரது பெற்றோர் அல்லது சமுக பணியாளர் ஒருவர் உடன் இருக்க வேண்டும். சிறுமிகள் கற்பழிப்பு வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற போர்வையில் ஒருவரை காவல் நிலையத்தில் அடைத்து வைக்கக்கூடாது. தனிநபர் சுதந்திரம் மிக முக்கியம். சாட்சிகள் பல்டி அடிக்காமல் இருக்க அவர்களது வாக்குமூலத் தை எழுத்துபூர்வமாக கையப்பத்துடன் எழுதி வாங்க வேண்டும். மேலும் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களில் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் வாங்க வேண்டும்.

இவ்வாறு பல பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ளது. இவற்றில் பலவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக நிலைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

இளையராஜாவுக்கு என்.டி.ஆர். விருது - ஆந்திர அரசு அறிவிப்பு

சித்தூர், ஆக.31-
நடிகர்கள் கிருஷ்ணா, அம்பரிஷ், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு ஆந்திர அரசு சார்பில் என்.டி.ஆர். விருது வழங்கப்படுகிறது.

ஆந்திரா மாநில அரசு சிறந்த கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.ராமராவ் பெயரில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. 2002க்கு பின்னர் விருது வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

ராஜசேகர ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த விருது வழங்குதல் தகவல் துறையில் இருந்து தெலுங்கு சினிமா துறை வளர்ச்சி கழகத்துக்கு மாற்றப்பட்டது.

விருது பெறும் நபர்களை தேர்வு செய்து, அரசுக்கு சிபாரிசு செய்ய 3 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இதில் டி.எல். காந்தாராவ், எம். பாலையா, எம். மோகன்பாபு ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்த கமிட்டி 2003 முதல் 2005 வரை 3 ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பெயரை சிபாரிசு செய்து, மாநில தகவல் துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயணரெட்டியிடம் அனுப்பியது.
இதையடுத்து என்டிஆர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஐதராபாத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நேற்று அறிவித்தார்.

அதன்படி 2003ம் ஆண்டுக்கான விருது தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுக்கும், 2004ம் ஆண்டுக்கான விருது இசைஞானி இளையராஜா வுக்கும், 2005ம் ஆண்டுக்கான விருது பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ§க்கும வழங்கப்படுகிறது, இதற்கான விழா விரைவில் நடைபெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ படம் வெளியீடு

அரசு அலுவலகங்களிலும் தூதரகக் கட்டிடங்களிலும் இடம் பெற குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் அவர்களின் அதிகாரபூர்வ நிழற்படம் இரு வார காலமாக தீர்மானமாகாமல் கடைசியாக வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை புடைவையில் நீல பார்டரோடு தங்க கோடிட்ட படத்தை குடியரசுத்தலைவரின் நிழற்பட பிரிவு குடியரசுத்தலைவரின் செயலகத்திலிருந்து அனுமதி பெற்று வெளியிட்டது. இந்தப் படத்தில் புடைவையின் பல்லு பகுதி அவரது தலையை மறைக்குமாறு உள்ளது. முன்னர் வெளியான படத்தை குடியரசுத்தலைவரின் செயலகம் ஆட்சேபித்ததால் திரும்பப் பெறப்பட்டது.

The Hindu News Update Service

அதிகாரமிக்க முதல் பத்து பெண்களில் சோனியா

பிரபல வணிக இதழ் ஃபோர்பஸ் வெளியிடும் உலகின் நூறு அதிகாரமிக்க பெண்கள் வரிசையில் ஐந்தாவதாக இந்திய அமெரிக்கரும் பெப்சி நிறுவன தலைவர்மற்றும் முதல் நிர்வாகியுமான இந்திரா நூயி இடம்பெற்றிருக்கிறார். இவரை அடுத்து ஆறாவது இடத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி இடம் பெற்றுள்ளார்.

ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ள அஞ்செலா மெர்க்கில் இரண்டாவது வருடமாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் சீன துணை பிரதமர் உ யி யும் சிங்கப்பூரின் டெமெஸ்க் நிறுவன முதல் நிர்வாகி ஹோ சிங் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டெலெஸ்சா ரைஸ் நான்காம் இடத்தில் உள்ளார்.

சோனியா காந்தியைப் பற்றி இவ்விதழ் இத்தாலியில் பிறந்த இந்தியாவின் மிகுந்த அதிகாரமிக்க இந்தியதேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தான் அரசியலில் 1990இல் இறங்கியபின்னர் வெகுதூரம் வந்துள்ளார் எனக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவராக பிரதீபா பாட்டில் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு இவரது பங்கை சிறப்பாக கருதுகிறது.

முழு கட்டுரைக்கு Sonia Gandhi, Indra Nooyi among world's 10 most powerful women-Politics/Nation-News-The Economic Times

சேதுசமுத்திரம் திட்டத்திற்கு இடைக்கால தடை

உச்சநீதிமன்றத்தில் இன்று சேது சமுத்திரம் திட்டத்தில் ராம் சேது எனப்படும் மணற்பரப்பை பாதிக்காமல்
அகழ்வுப் பணி தொடரலாம் என்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தடை செப்.14வரை இருக்கும். முழுவிவரம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறது இந்த ரீடிஃப் செய்தி

அணுசக்தி பயன்பாட்டில் இந்தியா பின்தங்க முடியாது: பிரதமர்

இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்ட அமைதிக்குப் பிறகு தாராபூர் அணுசக்தி நிலையத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா அணுசக்தி பயன்பாட்டினால் கிடைக்கும் வளங்களை இழக்கலாகாது எனக் கூறினார். Fast reactor நுட்பங்கள் விரைவாக மேம்படுத்தப்படவேண்டும் என்றும் உள்நாட்டிலேயே யுரேனியம் கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார். மகாராட்டிரத்தின் தானே மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த அணுசக்தி நிலையத்தில் புதிய இரு அணுசக்தி ஆலைகளை நாட்டிற்கு அர்ப்பணித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.

We can't afford to miss nuclear bus: PM

மான் வேட்டை:சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தது

சிங்காரா மான் வேட்டை வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டை விசாரித்த இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு இலக்கம் ரூபாய் ஈட்டுப்பணமும் ரூ50,000க்கு கடன்பத்திரமும் பெற்று ஜாமீனில் விட உத்திரவிட்டது. வழக்கின் விசாரணை 24 அக்டோபருக்கு தள்ளிப் போடப்பட்டது.

முழு விவரங்களுக்கு Rajasthan HC grants bail to Salman

அறிவியல்/தொழில்நுட்ப செய்திகள்

உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டி
------------------------------------------------------------
உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டியை ஜப்பானின் ஷார்ப் (Sharp) நிறுவனம் பார்வையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது. இந்த தொலைக்காட்சிப்பெட்டியின் தடிமன் வெறும் 20mm-கல் தான். இதை சுவற்றில் ஒரு படம் போல மாட்டிவைக்க முடியும்.
இந்த தொலைக்காட்சிப்பெட்டி எப்பொழுது சந்தையில் விற்கப்படும் என்று தெரிவிக்கபடவில்லை.
இந்த செய்தி பற்றிய இணையப்பக்கம் இதோ


புற்றுநோய்க்கு ஒரு புது மருந்து
-----------------------------------------
எய்ட்ஸ் நோய்க்காக உபயோகப்படுத்தப்பட்ட ஒரு மருந்து புற்று நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய திரன் கொண்டது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த செய்தியை பற்றி அறிய இந்த இணைப்பை சொடுக்குங்கள்


ஆதாரம் :
http://www.reuters.com/article/technologyNews/idUSL3050290720070830
http://www.reuters.com/article/scienceNews/idUSN3045790520070831

துபாய் லாட்டரியில் பங்களாதேஷைச் சேர்ந்த மெக்கானிக்கிற்கு பரிசு


துபாய் லாட்டரியில் பங்களாதேஷைச் சேர்ந்த மெக்கானிக்கிற்கு பரிசு


துபாயில் போஸ்ட்கார்ட் மில்லியனர் எனப்படும் வாராந்திர குலுக்கல் நடைபெற்றுவருகிறது. இதன் பரிசுத் தொகை திர்ஹம் ஒரு இலட்சம். கடந்த வாரம் நடைபெற்ற குலுக்கலில் பங்களாதேஷைச் சேர்ந்த முஹம்மது சலீமிற்கு பரிசு கிடைத்துள்ளது. இத்தகவல் கிடைத்ததும் சலீம் பெருமகிழ்ச்சியடைந்தார்.

இப்பரிசுத்தொகை சுமார் இரண்டு மில்லியன் பங்களாதேஷ் தாகாவாகும். இப்பணத்தைக் கொண்டு தனது சிறுநீரக கோளாறு சிகிச்சையை செய்திடவும், தனது மனைவிக்கு நகை வாங்கவும், தனது இரண்டு பெண்களது திருமணம் செய்திடவும் மேலும் தனது ஊரில் ஒரு பள்ளிக்கூடம் துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார் சலீம்.

http://www.gulfnews.com/nation/Society/10150429.html
Plans galore as luck favours auto mechanic

லண்டனில் நெல்சன் மண்டேலாவுக்கு சிலை : உற்சாக வரவேற்பு

லண்டனில் நெல்சன் மண்டேலாவுக்கு சிலை : உற்சாக வரவேற்பு


லண்டனில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் சிலை பார்லிமெண்ட் வளாகத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. லண்டன் வருகை புரிந்த அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் பிரதமர் பிரெளன், லண்டன் நகர மேயர் கென் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Here's welcome for Mandela
www.gulfnews.com

செளதி அரேபியாவில் அல் ஹயாத் அரபி நாளிதழுக்கு தடை

செளதி அரேபியாவில் அல் ஹயாத் அரபி நாளிதழுக்கு தடை

செளதி அரேபியாவில் வெளியாகிவரும் அரபி நாளிதழ் அல் ஹயாத். லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் இந்நாளிதழ் செளதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் பதிப்புகளைக் கொண்டுள்ளது. செளதி அரேபியாவில் அதிக பட்ச விற்பனையை இந்நாளிதழ் கொண்டுள்ளது.

சமீபகாலமாக இந்நாளிதழ் செளதி அரேபிய அரசின் கொள்கைகள் மற்றும் நாட்டின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதமாக செய்திகள் வெளியிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் இயாத் மதானி பலமுறை இதுகுறித்து எச்சரித்தும் இந்நாளிதழ் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இந்நிலையில் சமிப்பத்தில் வெளியான ஈராக் குண்டுவெடிப்பு குறித்த செய்தியில் செளதி அரேபியாவில் உள்ள குழுவினருக்கு தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அல் ஹயாத் நாளிதழுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் தடை விதிக்கப்பட்ட காரணம் எதனால் என்பது முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.



http://archive.gulfnews.com/articles/07/08/30/10150147.html
Saudis ban distribution of Al Hayat indefinitely

அறிவியல் இன்று - 31/08/2007

வலைப்பூக்கள் மூலமாக பரப்பப்படும் கணிணி வைரஸ்
--------------------------------------------------------------

வலைப்பூக்கள் மூலமாக இணைய தள சுட்டிகளை இடுகைகளாக இட்டு,அதை சொடுக்கும் பயனர்களின் கணிணிகளில் வைரஸ்களை பரப்பும் ஒரு கும்பல் பற்றிய செய்தி இதோ இந்த பக்கத்தில்

ஒரு ஐபாட் (Ipod) அளவே உள்ள கருவியில் 30,000 திரைப்படங்களை சேமிக்கலாம்
----------------------------------------------------------------------------------------------


அணுக்களின் அளவுகளில் பொருட்களை கையாளுவது குறித்த ஆராய்ச்சியை நானோ டெக்னாலஜி (Nanotechnology) என்று ஆங்கிலத்தில் வழங்குவார்கள் . இந்தத்துறையில் ஐ.பி.எம் நிறுவனத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் மூலம் ஒரு ஆப்பிள் ஐபாட் அளவே உள்ள கருவியில் 30000 திரைப்படங்களை உள்ளடக்கும் தொழில்நுட்பம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளன.இந்த செய்தியை உள்ளடக்கிய இணையப்பக்கம் இங்கே

இன்னும் சில மாதங்களில் காரில் உண்மையாகவே பறக்கலாம்
------------------------------------------------------------------


தரையில் இருந்து 10 அடி உயரத்தில் பறக்கக்கூடிய கார் ஒன்றை மொலர் இண்டர்நேஷனல் (Moller International) எனும் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் வெளியிட உள்ளது.
வருடத்திற்கு 250 கார்கள் எனும் அளவில் தயாரிப்பை தொடங்க உள்ள இந்த நிறுவனம் ,இந்த கார் ஓட்டுவதற்கு சுலபமாகவும் பயணிகளுக்கு நிறைய இடம் கொடுக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ளது.
M 200G என்று அழைக்கப்பட உள்ள இந்த காரின் விலை 90,000 அமெரிக்க டாலர்களாக நிற்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாயில் குத்து மதிப்பாக 90,000 X 40 = 36,00,000 ரூபாய்கள்.

கம்மியாதான் இருக்குல்ல??
காரை பற்றி மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.
பி.கு:படத்தில் இருப்பது அவர்கள் விற்கப்போகும் காரின் மேம்பட்ட வெளியீடு (advanced version).

ஆதாரம் :
http://news.bbc.co.uk/2/hi/technology/6970368.stm
http://www.reuters.com/article/technologyNews/idUSN3046298520070830
http://news.bbc.co.uk/2/hi/business/6970031.stm

படம்:
http://www.21stcentury.co.uk/images/technology/moller_m400_skycar.jpg

கட்டுரைக்கு கிடைத்த காசை பொதுநிவாரணநிதிக்கு அளித்த தமிழக முதல்வர்

கட்டுரைக்கு கிடைத்த காசை பொதுநிவாரணநிதிக்கு அளித்த தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய ‘’மாநிலங்களில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ எனும் சிறப்புத் தலைப்பில் எழுதிய கட்டுரை இந்திய சுதந்திர நாளன்று
ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியிருந்தது. அதற்கு மதிப்பூதியமாக பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை அதன் தலைமைப் பதிப்பாசிரியர் என்.ராம் முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தார். இக்காசோலையை உடனடியாக முதலைமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு வழங்க உத்தரவிட்டார்.

http://www.tn.gov.in/pressrelease/pr290807/pr290807_560.pdf

கேரளாவில் ஓணம் பண்டிகை : மது விற்பனையில் சாதனை

கேரளாவில் ஓணம் பண்டிகை : மது விற்பனையில் சாதனை
திருவனந்தபுரம் : ஓணம் பண்டிகையையொட்டி மதுபான விற்பனையில் கேரளா சாதனை படைத்துள்ளது. ஓணம் பண்டிகை விடுமுறை நாட்களில் அங்குள்ள மதுபான கடைகளில் குடி மன்னர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் அன்றைய தினம் மட்டும் ரூ.52.79 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது என்று கேரள மாநில மதுபானக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 41.2 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

www.dinamalar.com

ஜெய்ப்பூரில் பிராமணர் பந்த்

தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பிராமணர்கள் சில நாள்களுக்கு முன்னால் ஜெய்ப்பூரில் ஊர்வலம் சென்றனர். அப்போது தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக பிராமணர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதில் பலர் காயம் அடைந்தனர்.

அதைக் கண்டிக்கவும், தங்களுக்குள்ள ஆதரவை அரசுக்குக் காட்டவும் பிராமணர்கள் புதன்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களுக்கு ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனா என்ற அமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது.

ஜெய்ப்பூரில் பல தொழில், வர்த்தக நிறுவனங்களும் இந்த அழைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் தங்கள் நிறுவனங்களை மூடின. ஏராளமான தனியார் பள்ளிக்கூடங்கள் விடுமுறை அறிவித்திருந்தன.

ஜெய்ப்பூர் பழைய நகரப்பகுதியில் கடைகளை மூடுமாறு பந்த் ஆதரவாளர்கள் கடைக்காரர்களை கேட்டுக்கொண்டபடியே வீதிவீதியாகச் சென்றனர்.

நகரில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வீதிகளில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தனர்.

வரலாற்றில் இருந்திராத வகையில் தங்கள் சங்கம் பந்த் நடத்தியிருப்பதாக சர்வ பிராமண சபா தலைவர் சுரேஷ் மிஸ்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

முழு அடைப்புக்கு மக்கள் தாங்களாகவே முன்வந்து ஆதரவு அளித்தனர் என்று ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனாவின் மாநில அமைப்பாளர் லோகேந்திர கால்வி குறிப்பிட்டார்.

தினமணி

Spotlight | Jaipur strike nearly total, business affected | Indiainteracts.com
The Hindu News :: Brahmins' body calls for Jaipur bandh today
Brahmins call bandh for reservation

-o❢o-

b r e a k i n g   n e w s...