.

Saturday, March 31, 2007

சற்றுமுன்: கண்துடைப்பு?- கருணாநிதி கண்டனம்

முதல்-அமைச்சர் கருணா நிதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலக் கொள்கையாக இருந்து வருகிற இட ஒதுக்கீடு கொள்கைக்காக ஒரு அமைதி கிளர்ச்சியாக வேலை நிறுத்தம் செய்வதாக வேண்டுகோள் விடுத்து, அறிவிப்பு செய்துள்ளது வெறும் கண்துடைப்பு என்று ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து, அது இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஏடுகளில் முதல் பக்கத்தை அலங்கரித்திருக்கிறது.

ஜெயலலிதாவின் வழியி லேயே அவரது சகோதரர் விடுத்துள்ள அறிக்கையிலே பொது வேலை நிறுத்தத்தை வேலை நாளில் அறிவிக்காமல் விடுமுறைநாளான சனிக் கிழமை நடத்துவது ஏமாற்று வேலை என்கிறார். சேராத இடம் தனில் சேர்ந்ததால் எப் படி பட்ட நிலைக்கு அவர் ஆளாகி விட்டார்ப சமூக நீதி உணர்வு குருதியோடு ஓடு பவர்களுக்கு எதிர்ப்பினை எவ்வளவு விரைவிலே காட்டவேண்டும் என்பதில் தான் எண்ணம் செல்லும். சனிக்கிழமைகளில் ரெயில்கள் ஒடுவதில்லையாப

நம்மை அவ மானப்படுத்தினாலும் நாட்டு நலனுக்காக மானத்தைக்கூட பெரிதுபடுத்தாமல் ஒத்துப் போவது நல்லது என்ற அடிப்படையில் நாம் அனுப் பிய அழைப்பைக்கூட லட்சி யம் செய்யாதவர்களுக்கு இந்தியாவில் உள்ள நம் மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் எக்கேடு கெட்டால் என்ன- ஆதிக்க புரியினர், அமோக வாழ்வு பெற்றால் அது ஒன்றே நமக்கு சொர்க்கம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு வாழுபவர் ஒன்றுகூடி நடத்தும் சதியில் வெற்றி பெறலாம் எனக் கனவு காண்கிறார்கள்.

கண்துடைப்பாம் கண் துடைப்பு! உடன்பிறப்பே இது கண்துடைப்பு அல்ல, கண்ணீர் உடைப்பு! இந்தக் கண்ணீர் அடக்கமுடியாமல் அடித்தட்டு மக்கள் புழுக் களாய்த் தேரைகளாய் பொட் டுப்பூச்சிகளாய் மடிந்து போகாமல்-புரட்சிக்குரல் எழுப்ப எழுந்திடும் உரிமைப் போர்ப்படையின் மீது காரி உமிழ்வது போல இந்தப் பெண் மணியார் கண்துடைப்பு என் கிறாரே, இதுவும் நாம் எதிர் பார்த்தது தான் நாகத்திடம் நச்சுப்பல்லையும், இவர் போன்றோரிடம் நாச காலச் சொல்லையும் தானே எதிர் பார்க்க முடியும்


"மேலும் செய்திக்கு மாலை மலர்"

சற்றுமுன்: சிவாஜி பட ரிலீஸ் பற்றி டி.ஆர் கருத்து

நெல்லையில் நடைபெற்ற தனது 'லட்சிய தி.மு.க கூட்டத்தில் பேசிய விஜய டி.ராஜேந்தர் 'சிவாஜி படத்துக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு.

அந்த பட ரிலீஸ் போது திரையரங்குகளில் டிக்கட்கள் அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டால் தன் கட்சி சார்பில் போராடுவோம் என்கிறார்.அத்துடன் காவிரி பிரச்சனையில் ராஜினி மௌனம் சாதித்ததையும் சாடுகிறார்.தமிழகத்தில் சம்பாதித்து கர்நாடகத்தில் சொத்து வாங்கும் அவர் படத்துக்கு டிக்கெட் விலை ஏற்றினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.அரசாங்க கொள்கைகளில் தனி மனிதர்களுக்கு விலக்கு அளிக்க முற்பட்டால் விடமாட்டேன் என்றும் கூறுகிறார்

சற்றுமுன்: திருநங்கைகளும் மனிதர்கள் - லிவிங் ஸ்மைல் வித்யா

தமிழக அரசு அண்மையில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கைகள் எனப்படும் அரவாணிகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகளை அரசு மருத்துவனனைகளிலேயே செய்து கொள்ளலாம்.அண்மையில் சென்னையில் நடந்த பாலின சிறுபான்மை மாநாட்டில் 'லிவிங் ஸ்மைல் வித்யாவால் வைக்கப் பட்ட கோரிக்கையும்,மதுரை உயர் நீதிமன்றத்தில்ல் 'சரவணன்' என்ற தன் பேரை லிவிங் ஸ்மைல் வித்யா' வாக மாற்ற போடப்பட்ட வழக்கும் அரசின் இந்த உத்தரவுக்கு காரணங்கள்.
தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன வித்யா சொன்னவை:பாலின் மாற்று அறுவைச் சிகிச்சை எங்கள் மொழியில் நிர்வாணம் செய்வது எனப்படும்.
இதற்கு 15000 முதல் 20000வரை செலவாகும்.இந்த தொகையைச் சேமிக்கவே திருநங்கைகள் பிச்சை எடுப்பது,விபச்சாரம் போன்ற தொழில் செய்கின்றனர்.
நான் இதைச் செய்ய வேண்டி வடமாநிலங்களில் ஒருவருடம் பிச்சை எடுத்தேன்.இப்போது இந்த சிகிச்சையை இலவசமாக அரசு மருத்துவமானைகளில் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சொல்லியிருக்கிறது.ஒரு திருநங்கை பேங்க் அக்காவுன்ட்,டிரைவிங் லைசன்ஸ்,ரேஷன் கார்டு,பாஸ்போர்ட்,வாக்காளர் அட்டை ,செல்போன் இணைப்புக் கூட வாங்க முடியாத நிலை இருக்கிறது.இந்த பிரச்சனைகள் தீரவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.அரசின் தற்போதைய உத்தரவில் பாலின அறுவைசிகிச்சையோடு வாய்ஸ் தெரபி,மார்பக வளர்ச்சி சிகிச்சையும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.
மேலும் திருநங்கைகளும் மனிதர்கள் அவர்களை மதிப்போம் என்ற பிரச்சாரமும்,அவர்களின் பெற்றோருக்கு கவுன்ஸிலிங்கும் ,வீட்டைவிட்டுத் துரத்தும் பெற்றோருக்கு தண்டனையும் வழங்கப் பட வேண்டும். என்றும் கூறுகிறார் வித்யா

சற்றுமுன்: 2015ம் வருடத்துக்குள் 1.5 கோடி வேலைவாய்ப்பு

இந்தியாவில் அடுத்த 8 ஆண்டுகளில் புதிதாக 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என எத்திராஜ் மகளிர் கல்லூரி நடத்திய வேலை வாய்ப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி “வேலை வாய்ப்புகளை மேம்படுத்த கலை-அறிவியல் கல்லூரிகள் இணைந்து செயலாற்றுதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.
இதில் கல்லூரியின் முதல்வர் எம். தவமணி, “இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் இந்தியாவில் 1.3 முதல் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. கலைக் கல்லூரி மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.



- தினகரன்

சற்றுமுன்: முழு அடைப்புக்கு விஜயகாந்த் ஆதரவு

உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பாக, தமிழகத்தில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு, தே.மு.தி.க. ஆதரவு தெரிவிக்கும் என்று, அதன் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். மத்திய அரசு இட ஒதுக்கீடு சம்பந்தமாக சரியான விவரத்தை, உச்ச நீதிமன்றத்துக்கு தராததால்தான், இத்தகைய விளைவு.

அனைத்துக் கட்சி கூட்டத்தை, தி.மு.க. கூட்டி முழு அடைப்பு சம்பந்தமாக பேசியிருக்கலாம். இருந்தாலும், சமுதாயத்தின் அடித்தள மக்களின் நலன் கருதி, இந்த முழு அடைப்புக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- தினகரன்

கண்டிப்பான ஆசிரியைக்கு 1.4 மில்லியன் டாலர்!

அமெரிக்காவில் இருக்கும் லூசியான மாஹாணத்தை சேர்ந்த பாலா பெயின் (Paula Payne) என்ற ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியை, தன்னிடம் பயின்ற எழுபது சதவிகித மாணவர்களுக்கு மிகுந்த குறைவான மதிபெண்களை கொடுத்துள்ளார். இதை அடுத்து இந்த உயர் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர் கொடுத்திருக்கும் மதிப்பெண்களை திருத்துமாறு கேட்டு மிகவும் துன்புறுத்தியுள்ளார். பாலா பெயின் அதற்கு சம்மதிக்காமல் போகவே அவரை கீழ்நிலை ஆசிரியராக மாற்றி பின்னர் தற்காலிக வேலை நீக்கமும் செய்திருக்கிரார்.


இந்த வழக்கு நீதிமன்றம் சென்று இப்பொழுது இந்த ஆசிரியருக்கு அவர் வேலை செய்துகொண்டிருந்த லூசியானா பள்ளி நிர்வாகம், 1.4 மில்லியன் டாலர்(அவரை மன ரீதியாக துன்புறுதியதற்காகவும், மற்ற சேதங்களுக்காகவும்) வழங்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்து உள்ளது.


மேலும் படிக்க

http://www.msnbc.msn.com/id/17874261/?GT1=9145

சற்றுமுன்:தமிழகம் முழுவதும் 2-ந் தேதி கோர்ட்டுகள் புறக்கணிப்பு :வக்கீல்கள் சங்கம் முடிவு

நேற்று காலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க கூட்டம், சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில், செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கண்டித்து ஏராளமான வக்கீல்கள் பேசினார்கள். இதன்பிறகு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 29-ந் தேதி இடைக்கால தடை விதித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக இயற்றிய இந்த சட்டத்திற்கு, ஓட்டு வங்கிக்காக இயற்றப்பட்ட சட்டம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறியிருப்பது வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

பெரும்பாலான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 2-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் இந்த நீதிமன்ற புறக்கணிப்பை கடைபிடித்து ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடப்படுகிறது.

- தினதந்தி

சற்றுமுன்: சுப்புடு உடலுக்கு கலாம் அஞ்சலி


புதுடில்லி:பரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு, டில்லியில் காலமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கர்நாடக இசை விமர்சகராக புகழ் பெற்றவர் சுப்புடு என்ற சுப்ரமணியம். கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர் சுப்புடு. இவரது விமர்சனங்கள் காரசாரமாகவும், தவறை சுட்டிக் காட்டுவதில் சுவையாகவும் அமைந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர், நேற்று முன்தினம்
இரவு 7.30 மணிக்கு தெற்கு டில்லியில் காலாமானார். அவருக்கு வயது 91. ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

- தினமலர்

சற்றுமுன்: போப் இரண்டாம் ஜான் பாலின் மகிமை



பிரென்ஞ் கன்னியாஸ்திரி மேரி சைமன் பெரே என்பவர் ஓரிரவு பிராத்தனையின் பின் தனக்கு இருந்த நோய் குணம் அடைந்துவிட்டதாகவும் அதை வாடிகன் போப் இரண்டாம் ஜான் பாலின் மகிமை என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் செய்திக்கு.."FORBES.COM"

Friday, March 30, 2007

சற்றுமுன்: ஷேவாக் தந்தை ஆவேசம்

உலகக் கோப்பை தோல்விக்கு சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மோசமாக ஆடியதே காரணம் என்று வீரேந்திர ஷேவாக்கின் தந்தை ஆவேச மாக கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தோல்விக்கு தன்னுடைய மகன் மட்டுமா காரணம் என்று கேள்வி எழுப் பிய அவர், டெண்டுல்கர், திராவிட் ஆகிய முன்னணி வீரர்கள் படுமோசமாக ஆடிய தாக கூறினார். ஷேவாக் துவக்க வீரராக ஆட அனுமதிக்கப்பட்டிருந்தால் மேலும் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்திருப்பார் என்று அவர் தெரிவித்தார். ஷேவாக்கின் ஆட்டம் தனக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


"மாலைச் சுடர்"

சற்றுமுன்:பாமகவுக்கு துக்கநாள் - ராமதாஸ்

கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட் டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தீர்ப்பு திருத்தப்படும் வரை பாமகவினருக்கு துக்கநாள்தான் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை அமல்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார். கட்சித் தலைவர் ஜி.கே. மணி, பாமக எம்எல்ஏக்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் கறுப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

"நாடாளுமன்ற அதிகாரத்தில் உச்சநீதிமன்றமே தலையிடாதே', "உயிர் போனாலும் இடஒதுக்கீட்டுக்கு உயிர் கொடுப்போம்', "உயிரை கொடுத்தாவது இட ஒதுக்கீட்டை காப்போம்', "விடமாட்டோம் விடமாட்டோம் இடஒதுக்கீடு பறிபோக விடமாட்டோம்' போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினார்கள்.

"மாலைச் சுடர்"

சற்றுமுன்: பந்த்-கேலிக்கூத்து,கண்துடைப்பு நாடகம் : ஜெயலலிதா

உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை உரிய முறையில் சந்தித்து நல்ல தீர்ப்பை பெற முயற்சிக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து பொது வேலை நிறுத்தம் என்பது கண்துடைப்பு நாடகமாகவே கருதப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஆளும் கூட்டணி கட்சிகளே பொறுப்பு என்றும் அவர் கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் கோட்டை விட்டவர்கள் இங்கே பொது வேலை நிறுத்தம் என்று அறிவித்திருப்பது கேலிக்கூத்து என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"மாலைச் சுடர்"

சற்றுமுன்: முஷாரப்பிற்கு அமெரிக்கா பாராட்டு

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அதிபர் முஷாரப் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கர்மாக் நிருபர்களிடம் கூறியதாவது:

பயங்கரவாதம் அதிபர் முஷாரப்பிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. பயங்கரவாதத்தை நசுக்க அதிபர் முஷாரப் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்போம். இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளை முஷாரப் வழங்கியுள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகிறோம். 2001 ஆகஸ்டில் இருந்ததை விட பாகிஸ்தானில் தற்போது நிலைமை மாறியுள்ளது.இவ்வாறு சீன் மெக்கர்மாக் கூறினார்.


- தினமலர்

சற்றுமுன்: தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி

சந்திப்பூர் (ஒரிசா) : கடற்படை கப்பலில் இருந்து பாய்ந்து சென்று 150 கி.மீ., துõரத்தில் உள்ள எதிரி கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட "தனுஷ்' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒரிசா சந்திப்பூர் அருகே கடற்படை கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

- தினமலர்

சற்றுமுன்: பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு பதில் அளிக்க உத்தரவு!

செவ்வாய், 27 மார்ச் 2007 (10:53 ஐளுகூ)
குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவு குறித்து 6 வாரங்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெப்சி, கோககோலா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குளிர்பானங்களில் பூச்சி கொல்லி மருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது; அவ்வாறு இருந்தால் குளிர்பானங்களை அதிக அளவில் அருந்துபவர்களின் எலும்புகள் பாதிக்கப்படும். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும். சிறு குழந்தைகளின் எடை அதிகரிக்கும் என்று பாராளுமன்றத்தின் நிபுணர் குழு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பாக 2004-ம் ஆண்டு என்.கே.கங்குலி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.குழு தனது அறிக்கையை கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் பெப்சி, கோககோலா நிறுவனங்களில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து அதிக அளவில் உள்ளதாகவும் இது மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பாக தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.தக்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

தங்கள் நிறுவன குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவு குறித்து 6 வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெப்சி, கோககோலா ஆகிய குளிர்பான நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"வெப் உலகம்"

-o❢o-

b r e a k i n g   n e w s...