கடந்த ஓராண்டாகவே சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் அகில இந்திய மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகம் (எய்ம்ஸ்) மேலும் ஓர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்று சுக்தேவ் தரோட் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, கடந்த 8 நாள்களாக எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முற்போக்கு டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைப்பு என்ற போர்வையின் கீழ் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளிக்குமாறு எய்ம்ஸ் இயக்குனர் பி. வேணுகோபாலுக்கு, தேசிய எஸ்.சி., எஸ்.டி. கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சுக்தேவ் தரோட் கமிட்டி அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எய்ம்ஸ் பேராசிரியர்கள், உள்ளுறை டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் சங்கத்தினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இப்பிரச்னை குறித்து எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபாலுடன், தேசிய எஸ்.சி., எஸ்.டி., கமிஷன் தலைவர் பூடா சிங் இம்மாதம் 1-ம் தேதிக்குப் பிறகு 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.
எய்ம்ஸ்-ஸின் 'ஃபுளோட்டிங் ரிசர்வேஷன்' கொள்கை சட்டவிரோதமானது என்று பூடா சிங் கூறியுள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மீது பாரபட்சம் காட்டுவதாக எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார் எய்ம்ஸ் செய்தித் தொடர்பாளர் சக்தி குமார் குப்தா. 1993-ல் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எய்ம்ஸ் முழுமையாகக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி
Govt asks AIIMS to give it information regarding reserved posts - India - The Times of India
The Hindu News :: Govt. to amend law governing AIIMS, PGIMER
News From Sahara Samay:: HC notice to Ramadoss, Thorat
Thursday, July 26, 2007
மேலும் ஒரு சர்ச்சையில் எய்ம்ஸ்
Posted by
Boston Bala
at
3:01 AM
0
comments
இட்லியிலிருந்து ஊத்தப்பத்துக்கு...
குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் பதவியேற்றதை அடுத்து, சுவையான ஊத்தப்பம் செய்யும் பணியில் ராஷ்டிரபதி பவன் சமையல் கலைஞர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
"அப்துல் கலாம் இட்லி, தோசை, சாம்பார் வகைகளையே விரும்பி உண்பார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த வரை ராஷ்டிரபதி பவன் "டைனிங் டேபிள்' தயிர் சாதம், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றால் நிரம்பி வழியும்" என்று நினைவு கூர்ந்தார் ராஷ்டிரபதி பவன் மூத்த அதிகாரி.
72 வயதான பிரதிபா பாட்டீலுக்கு பிடித்த உணவு ஊத்தப்பம் மற்றும் பருப்புக் கூட்டு. அவருக்குப் பிடிக்காதது கீரை மற்றும் உருளைக்கிழங்கு.
"பிரதிபாவுக்கு எளிமையான உணவுதான் மிகவும் பிடிக்கும். எண்ணெய் மற்றும் நறுமணப் பொருள்கள் அதிகம் சேர்க்காமல் சமைத்த உணவை அவர் விரும்பி உண்பார்" என்றார் ஜெய்ப்பூர் ஆளுநர் மாளிகை தலைமை சமையல் கலைஞர் கைலாஷ்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது, ராஷ்டிரபதி தலைமை நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தார். அதாவது, ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சமையல் செய்யப்படும் பொது சமையல் கூடத்திலேயே, தனக்கும் சமையல் செய்ய வேண்டும். தனக்காக தனி சமையல் கூடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
அதே போல், இரவில் தான் உணவு சாப்பிடும் வரை மற்ற ஊழியர்கள் காத்திருக்கக் கூடாது. உணவு பரிமாறுவதற்கு ஒருவர் மட்டும் போதும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அப்துல் கலாம் பிறப்பித்திருந்தார்.
கலாமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து, அவரிடம் 4 ஆண்டுகள் செயலராக இருந்த பி.எம். நாயர் கூறியது:
வழக்கமாக நள்ளிரவு 1 அல்லது 1.30 மணிக்குத் தான் கலாம் தூங்கச் செல்வார். இருந்தாலும் காலை 6.30 மணிக்கே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்.
கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 14 அன்று காலை 8.40 மணிக்கு எனது டேபிளில் இருந்த போன் ஒலித்தது. மறுமுனையில் அப்துல் கலாம். மிஸ்டர் நாயர், எனது படுக்கை அறை ஒழுகுவதால் இரவு முழுவதும் தூங்கவில்லை. அதை சரி செய்து கொடுங்களேன் என்று வழக்கமான மெல்லிய குரலில் பேசினார்.
தினமணி
Posted by
Boston Bala
at
2:41 AM
5
comments
மலேசிய வலைப்பதிவர்கள் மீது கெடிபிடி முடுக்கிவிடப்பட்டது
இஸ்லாம் அல்லது மலேசிய அரசரை புண்படுத்தும் வலைப்பதிவர்கள் மீது தீவிரவாத தடுப்புச் சட்டங்கள் ஏவப்படும் என்று மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவின் பொடா போல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும் வழக்கு தொடுக்காமலும் வெகுகாலம் சிறையில் வைக்க இந்த சட்டங்கள் உதவுகிறது.
மலேசியாவில் பொதுத்தேர்தல் வரப்போகும் சமயத்தில், விமர்சனங்களை மட்டுறுத்தும் வகையில் இந்த செய்கை இருப்பதாக பிபிசி செய்தியாளர் ஜொனாதன் கென்ட் (Jonathan Kent) கருத்து தெரிவித்துள்ளார்.
BBC NEWS | Asia-Pacific | Malaysia cracks down on bloggers
Posted by
Boston Bala
at
2:22 AM
4
comments
ஃபேஸ்புக் மீது மோசடி வழக்கு
உலகெங்கும் உள்ள கல்லூரி நண்பர்களையும் முன்னாள் சகாக்காளையும் ஃபேஸ்புக் கை கோர்க்கிறது. ஹார்வர்டில் படித்தபோது, இந்தத் தளத்திற்கான எண்ணத்தை தங்களிடமிருந்து திருடிவிட்டதாக ConnectU வழக்குத் தொடுத்திருக்கிறது.
2002- ஆம் ஆண்டு கேம்ரானும் (Cameron) டைலரும் (Tyler Winklevoss) திவ்யா நரேந்தாவும் (Divya Narenda) கணினி நிரலி எழுத மார்க்கை (Mark Zuckerberg) தொடர்பு கொண்டார்கள். இணைய தளத்திற்கான நிரலை அப்போது எழுதாமல் தட்டிக் கழித்த மார்க், சில காலங்கழித்து நுட்பத்திற்கான திட்டத்தை களவாண்டு ஃபேஸ்புக் துவங்கினார் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
BBC NEWS | Business | Facebook site faces fraud claim
Posted by
Boston Bala
at
2:10 AM
0
comments
Wednesday, July 25, 2007
துருக்கியின் அதிபர் தேர்தலில் அப்துல்லா குல் போட்டியிடலாம்
துருக்கியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்துல்லா குல், அந்நாட்டின் அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப்போவதாக குறிப்புணர்த்தியுள்ளார். கடந்த வாரம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, குல் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.
மே மாதம் அதிபர் தேர்தலில் குல் போட்டியிட்டபோது, இராணுவத்தின் அழுத்தம் காரணமாக அவரது வேட்பு மனு தடுக்கப்பட்டது. முன்னாள் இஸ்லாமியவாதியான குல், துருக்கியின் மதசார்பற்ற அரசியல் சட்டட்திற்கு ஆபத்தாக இருப்பார் என்று இராணுவத்தின் சார்பில் அச்சம் அப்போது வெளியிடப்பட்டது.
ஆனால், தற்போதைய தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மக்களின் மனநிலையை புறந்தள்ளும்படி தம்மிடம் யாரும் எதிர்பார்க்கமுடியாது என்று குல் தெரிவித்துள்ளார். குல்லின் இந்த கருத்துக்கள், அந்நாட்டின் மதசார்பற்ற நிர்வாகத்தின் மத்தியில் கவலையை ஏற்படுத்தக்கூடும் என்று துருக்கியில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவித்தார்.
BBC Tamil
BBC NEWS | Europe | Turkey's Gul hints at presidency
Turkish foreign minister Gul hints he will run for president again, despite opposition - International Herald Tribune
Posted by
Boston Bala
at
11:40 PM
0
comments
இராக் குண்டு வெடிப்பில் 50 பேர் பலி
இராக்கின் தலைநகர் பாக்தாதில் கால்பந்து ரசிகர்களின் குழு ஒன்றுக்கு அருகே, குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்தச் சம்பவத்தில் சுமார் 135 பேர் காயமடைந்தனர்.
ஆசிய கிண்ணத்துக்கான கால்பந்து சுற்றுப் போட்டியில் தென்கொரிய அணியை, இராக்கிய தேசிய அணி வெற்றிபெற்றதை இந்த ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கையில் இந்தக் குண்டு வெடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இராக்கிய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
BBC Tamil
Car bombs strike Iraqi football fans - Gulf - World - The Times of India
Bombs aimed at Baghdad soccer fans kill 50: police | International | Reuters
Posted by
Boston Bala
at
11:36 PM
0
comments
தீவிரவாதிகள் பட்டியலில் ஏழு வயது சிறுவன்.
தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகிறது. விமான நிலையங்களில், தீவிர கண்காணிப்பும் நடக்கிறது. தேடப்படும் அதி பயங்கர தீவிரவாதிகள் பட்டியல்களை தயாரித்து அதை விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் போர்ட் லாடர்லே விமான நிலையத்துக்கு கிறிஸ்டா மார்ட்டின் என்ற பெண் தனது 7 வயது குழந்தை மைக்கேல் மார்ட்டினை அழைத்துக்கொண்டு வந்தார். ஈரான் நாட்டு விமானத்தில் ஏறுவதற்காக வந்த அந்த தாய் மற்றும் குழந்தையின் பெயரை அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது அந்த குழந்தையின் பெயர் தீவிரவாதிகளின் பட்டியலிலும் இருந்தது.
இதனால் அந்த குழந்தைக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. அது மட்டுமல்ல அந்த 7 வயது குழந்தையை தீவிரவாதியிடம் சோதனை செய்வது போல் சோதனை நடத்தி அதிகாரி களும், போலீசாரும் கெடுபிடி செய்தனர்.
என்ன தப்பு செய்தோம் என்று தெரியாமல் அந்த சிறுவன் திருதிருவென விழித்துக்கொண்டு இருந்தான். நீண்ட நேர சோதனைக்குப் பிறகே அந்த குழந்தைக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள்.
மாலைமலர்
Posted by
வாசகன்
at
11:25 PM
2
comments
அபுதாபியில் கட்டப்படும் மிகப்பெரிய மசூதி
40 ஆயிரம் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தவல்ல மிகப் பெரிய மசூதி, ஐக்கிய அரபு குடியரசின் தலைநகரில் ரூ. 2 ஆயிரத்து 300 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் பிற மாகாணங்களிலிருந்து தலைநகர் அபுதாபி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் மக்தா முஸ்தபா பாலத்திற்கு அருகே மிகப்பெரிய மசூதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மசூதியை அமைக்க முன்னாள் அதிபர் மறைந்த ஷேக் சையது பின் சுல்தான் அல் நகியான் விருப்பப்பட்டார். இதுகுறித்து, அவர் தனது வாரிசுகளிடம் கூறியிருந்தார். அவரது கனவை நனவாக்கும் விதத்தில், தற்போது மசூதி அமைக்கப்பட்டு வருகிறது
முதல்கட்டப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் முடிவடைந்து விடும். மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து விடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மசூதியின் சுற்றளவு 41 ஆயிரத்து 222 சதுர மீட்டர். ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் தொழுகை நடத்தவும் விசாலமான இடம் உள்ளது. மசூதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ள தொகை 217 கோடி திர்ஹம் (2,300 கோடி ரூபாய்). முன் ஹாலில் தொழுகைக்கான சிறப்பு அரங்கில் 5 ஆயிரத்து 627 சதுர மீட்டர் பரப்பில் போடப்பட உள்ள தரை விரிப்பு (கார்பெட்) விசேஷமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த தரைவிரிப்பை கையினால் நெய்யும் பணியில் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான செலவு மட்டும் 32 கோடி ரூபாய்.
நன்றி: தினமலர்
Posted by
வாசகன்
at
11:18 PM
0
comments
78 வயது சோம்நாத் சாட்டர்ஜிக்கு கருணாநிதி வாழ்த்து.
78 ஆம் பிறந்தநாள் கொண்டாடிய நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த சோம்நாத் சாட்டர்ஜி, நாட்டின் பெரிய தலைவர்களில் ஒருவரும் அனைத்து மக்களின் மதிப்புக்கு மரியாதைக்குமுரியவருமான கருணாநிதி தன்னை வாழ்த்தியதற்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகச் சொன்னார்."மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு தலைவர் வாழ்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் அவர். "தலைவர்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் அவர்".
முன்னதாக, குடியரசுத்துணைத்தலைவர் வேட்பாளர் டாக்டர் முஹம்மத் ஹமீத் அன்சாரியும் டெல்லியின் தமிழ்நாடு இல்லத்தில் கருணாநிதியை இன்று காலை சந்தித்துப்பேசினார்.
Posted by
வாசகன்
at
6:56 PM
0
comments
அண்ணா பல்கலை.யில் அப்துல்கலாமுக்கு சம்பளமில்லை.
குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து விடைபெற்ற அப்துல்கலாம், இன்று இரவு 9 மணிக்கு சென்னை வருகிறார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் மற்றும் பேராசிரியர்கள் அவரை வரவேற்கிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியதைப் போலவே, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், 'உயிரி தொழிற்நுட்பம்' பாடப்பிரிவின் கவுரவப் பேராசிரியராகவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் பணியாற்ற உள்ளார். இதற்காக சம்பளம் எதுவும் வழங்கப்படாது என்று துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஆயினும் அவருக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க உள்ளது.
"அப்துல்கலாம் அவர்களின் அறிவும் அனுபவமும் மாணவர்களுக்கு நன்கு பலன் அளிக்கும்" என்ற துணைவேந்தர் இது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் தெரிவித்துள்ளார்.
Posted by
வாசகன்
at
6:33 PM
0
comments
சென்னையை உடனுக்குடன் காண: Sify தளம்
Sify.com சென்னை நகர போக்குவரத்தை உடனுக்குடன்் நிகழ்படங்களாக பரப்பும் வசதியுடன் புதிய தளத்தை வடிவமைத்திருக்கிறார்கள். நகரின் முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள வெப்காம்களிலிருந்து நிகழ்படங்களின் உடனடி பரப்புவதால் நாம் செல்லவேண்டிய வழிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை அறிந்து திட்டமிட இது வசதியளிக்கும் என தமிழ் திரைப்பட பிரபலங்கள் பங்கேற்ற வண்ணமிகு அறிமுகவிழாவொன்றில் சிஃபியின் இணையதளங்கள் துறை தலைவர் சிவராமகிருஷ்ணன் கூறினார். இந்த தளத்தை (www.chennailive.in) தமிழக தகவல் தொழிற்நுட்ப செயலர் டாக்டர் சி சந்திரமௌலி துவக்கி வைத்தார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
6:23 PM
0
comments
ஹங்கேரி: வெயிலுக்கு 500 பேர் பலி
இந்தியாவில் கடும் மழை வெள்ளத்தால் மக்கள் அவதியில் அகப்பட்டிருக்க.,ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் கடும் வெயிலால் நிறைய பேர் பலியாகியுள்ளனர்.
இந்தச்செய்தியின் படி, கடந்த வாரத்தில் மட்டும், வெயிலாலும், அனல் காற்றாலும் ஹங்கேரியில் 500 பேர் வரை பலியாகிவிட்டனராம். 42^C அளவுக்கு வெயில் கொளுத்துகிறதாம்.
பக்கத்து நாடான ருமேனியாவிலும் 30 பேர் பலியாகியுள்ளனராம். செர்பியாவில் விவசாயப்பயிர்கள் கருகிவிட்டன.
நன்றி: மாலைமலர்
Posted by
வாசகன்
at
6:20 PM
0
comments
நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் பேசுவேன்! டெல்லியில் முதல்வர் கருணாநிதி பேட்டி!!
நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் பேசவிருப்பதாக டெல்லியில் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற தமிழகமுதல்வர் கருணாநிதிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், ரகுபதி, வேங்கடபதி, ராதிகாசெல்வி ஆகியோர் வரவேற்றனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி, நதிநீர் இணைப்பு பிரச்சினை பற்றி பிரதமருடன் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, ஏற்கனவே கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், இதுகுறித்து கடந்தமுறை வந்தபோதும் பேசியிருப்பதாகவும், அவற்றின் தொடர்ச்சியாக மீண்டும் பேசு உள்ளதாகவும் தெரிவித்தார். சுயநிதி மருத்துவ கல்லூரி மாணவர்களின் நலன் காக்க தேவைபட்டால் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
Posted by
Adirai Media
at
3:59 PM
0
comments
புதிய குடியரசு தலைவராக பிரதிபா பாட்டீல் இன்று பிற்பகல் பதவி ஏற்றார்.
புதிய குடியரசு தலைவராக பிரதிபா பாட்டீல் இன்று பிற்பகல் பதவி ஏற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அப்துல் கலாமின் குடியரசு தலைவர் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 19ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரதிபா பாட்டீல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நாட்டின் 13 வது குடியரசு தலைவராகவும், முதல் பெண் குடியரசு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல், நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் இன்று பிற்பகல் பதவி ஏற்றார்.
அவருக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார். பிரதிபா பட்டேல் பதவி ஏற்று உரையாற்றினார். இந்தநிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஷெகாவத், நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி, ராஜ்யசபா துணைத்தலைவர் ரகுமான்கான், மாநில கவர்னர்கள் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்ததும். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மகிழ்ந்தனர். பின்னர் அணிவகுப்பு மரியாதையுடன் பிரதிபாபட்டேல் குடியரசு தலைவர் மாளிகைக்கு அழைத்துசெல்லப்பட்டார்.
Posted by
Adirai Media
at
3:53 PM
0
comments
சபரிமலை பெண்கள் வழிபாடு: கேரள சட்டமன்றத்தில் விவாதம்
கேரள தேவஸ்வம் அமைச்சர் ஜி சுதாகரன்சபரிமலையில் பெண்கள் வழிபட வகைசெய்யவேண்டும் என்ற தங்கள் அரசின் கொள்கைக்கு ஆதரவாக 10-50 வயதுள்ள பெண்கள் அங்கு வழிபட்டதற்கான ஆதாரங்களை சட்டமன்றத்தில் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்த ஒரு உரிமையை மீட்பதே தவிர எந்த ஒரு வழக்கத்தையும் புதியதாக தாங்கள் கொண்டுவர வில்லை எனவும் 1940இல் திருவாங்கூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி வழிபட்ட ஆதாரம் உள்ளதாகவும் கூறினார். 1990இல் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை ஒட்டியே இன்று இவ்விதி தீவிரமாக அமலாக்கப் படுகிறது என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர் கே சுதாகரன் மத நம்பிக்கையிலும் பழக்கவழக்கங்களிலும் அரசு தலையிடுகிறது என்று அமைச்சருடன் எதிர்வாதம் செய்தார். அமைச்சர் நம்பிக்கை என்பது சபரிமலை ஐயப்பன் மீதானதாகும்;அது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொது என்று பதிலிறுத்தார். பழக்கவழக்கங்கள் காலத்திற்கேற்ப மாறியே வருகிறது; கோவில் பூசாரி முன்பெல்லாம் குளத்தில்தான் குளிப்பார், ஆனால் தற்போதைய தந்திரிகள் குழாய் தண்ணீரில்தான் குளிக்கிறார்கள் என்றும் அவர் பதிலளித்தார். சபரிமலை செல்லும் பக்தைகளை 'மாளிகாபுரம்' என்றழைப்பதிலிருந்தே அவர்கள் வழிபட தடையேதும் இருந்திருக்கவில்லை எனத் தெரிகிறதென்றார்.
பெண்ணிய சங்கங்களிலிருந்து அரசிற்கு ஏராளமான மனுக்கள் இதுபற்றி வந்திருப்பதாகக் கூறிய அமைச்சர் பெண்களுக்காக தனி பருவம் ஒதுக்கபடலாம் என்ற ஆலோசனையும் வந்திருப்பதாகக் கூறினார்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
3:43 PM
0
comments
b r e a k i n g n e w s...
