.

Saturday, February 24, 2007

சிபிஐ குழு அர்ஜென்டீனா செல்கிறது

சி.பி.ஐ கடைசியில் தன் குழுவொன்றை அர்ஜென்டீனாவிற்கு அனுப்பி கூட்ரோக்கியின் 'நாடு கடத்தலைகொணர்தலை' (extradition) {நன்றி:பாலா} விரைவுபடுத்த அனுப்ப இருக்கிறது. பி.ஜே.பி, இடதுசாரிகள் என எல்லோரும் குறை சொன்னபிறகு, உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு போட்டபின்பு இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. சிபிஐயின் இயக்குநர் விஜயசங்கர் பேசும்போது 17 நாட்கள் கழித்து அறிவிப்பு வெளியானதில் தாமதம் ஏதும் இல்லை, ஆவணங்களை மொழிபெயர்த்து ஆள் அடையாளங்களை சரிபார்த்த பின்பே அறிவிக்கப் பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.்


DNA - India - Daily News & Analysis

2 comments:

Bala said...

extradition - இதன் தமிழாக்கம் "நாடு கொணர்தல்" என்று இருக்கலாமோ?

மணியன் said...

நீங்கள் சொல்வதும் ஏற்றுக் கொள்ள கூடியதே.வேறு ஏதேனும் சொல் கிடைக்கும்வரை :)

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.