ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மீனவப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் இந்திய கடற்படை வீரர். அவரை போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் முகுந்தராயர் சத்திரம் என்ற இடத்தில் கடற்கரையில் குடிசைகள் உள்ளன. மீனவர்கள் வசிக்கும் இந்த குடிசை வீடுகளில் ஒன்றில் சங்கர் என்பவரும் அவரது மனைவி தனலட்சுமியும் (27) வசித்து வருகின்றனர்.
இரவு வீட்டின் வெளியில் சங்கர் படுத்திருந்தார். வீட்டுக்குள் தனலட்சுமி உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு 2 மணியளவில் கடற்கரை செக்போஸ்ட் பணியில் இருந்த இந்திய கடற்படை வீரரான அமித்குமார் (24) என்பவர் சங்கரின் வீட்டுக்குள் பின்பகுதி வழியாக நுழைந்தார். தனலட்சுமியை மானபங்கம் செய்ய முயன்றார்.
இதையடுத்து அவர் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சங்கரும் பிற மீனவர்களும் வந்து அமித்தை பிடித்து உதைத்து ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆனால், தகவல் அறிந்த கடற்படையினர் ராமேஸ்வரம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து அமித்குமாரை விடுவிக்குமாறு வாக்குவாதம் செய்தனர்.
ஆனால், இதை போலீசார் ஏற்கவில்லை. ராமநாதபுரம் எஸ்.பி. திருஞானம் உத்தரவைத் தொடர்ந்து கடற்படை வீரர் அமித்குமாரை கைது செய்யப்பட்டார்.
News Sources That's Tamil
Saturday, March 24, 2007
சற்றுமுன்: மீனவ பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இந்திய கடற்படை வீரர்
Posted by கோவி.கண்ணன் [GK] at 4:03 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
என்ன கொடுமை இது?
இந்திய எல்லையை பாதுகாக்கும் ஒரு வீரனுக்கு இந்த உரிமை கூட இல்லையா?
அனியாயம் அக்கிரமம்...
விளங்கும் இந்திய சனநாயகம்.
வருத்தம் :-(
Post a Comment