.

Tuesday, March 6, 2007

Lenovo Laptops பேட்டரிகளை திரும்பப் பெறுகிறது

சீனாவின் முன்னணி கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனமான லெனோவா தனது லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பேட்டரிகளை திரும்ப் பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் சான்யோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த பேட்டரிகள் அதிக வெப்பத்தை ஏற்படுத்தி தீ பிடிக்கும் அபாயம் இருப்பதால் அவற்றை திரும்பப் பெற லெனோவா முடிவு செய்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் லெனோவா தனது பேட்டரிகளை திரும்பக் கோருவது இது இரண்டாவது முறையாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள திரும்பப் பெறும் அறிவிப்பில் அமெரிக்காவில் உள்ள ஒரு லட்சம் பேட்டரிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பேட்டரிகளும் அடங்கும் என்று லெனோவா செய்தித் தொடர்பாளர் பாப் பேஜ் கூறியுள்ளார்.


MSN - TAMIL்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...