.

Sunday, May 27, 2007

தினமலரின் வேண்டுகோள்!

அனனத்து இந்திய தமிழ்ச் சங்கங்களுக்கும் அன்பான வேண்டுகோள்

இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்கள் தொடர்பாகவும் தினமலர் இணைய தளத்தில் செய்திகள் வெளியிட இருக்கிறோம். எனவே டில்லி, மும்பை, புனே, நாக்பூர், கோல்கட்டா, திருவனந்தபுரம், பெங்களூர், ஐதராபாத், புவனேஸ்வர், போபால், இந்துர், ராஞ்சி, ரெய்ப்பூர், ஜெய்ப்பூர், ஆமதாபாத், பரோடா, சூரத், சண்டிகர், லக்னோ, டேராடூன், சிம்லா, கவுகாத்தி, இம்பால், காங்க்டாக், ஷில்லாங், இடாநகர், அய்ஜால், அகர்தாலா, கொகிமா மற்றும் இதர முக்கிய நகரங்களில் அமைந்துள்ள தமிழ்ச்சஙகங்கள் தங்கள் செய்திகளை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். சங்கங்களின் நிர்வாகிகள் விவரம், சங்க நடவடிக்கைகள், உங்கள் பகுதிகளில் உள்ள தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் போன்ற செய்திகளை படத்துடன் அனுப்பி வையுங்கள். தமிழர்களுக்கு இடையேயான ஒரு இணைப்பு பாலமாக விளங்க தினமலர் இணைய தளம் விரும்புகிறது. அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

3 comments:

சிவபாலன் said...

தினமலரின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

//கோயில் விழாக்கள் போன்ற செய்திகளை படத்துடன் அனுப்பி வையுங்கள். //

மசூதி, சர்ச்சுகளில் நடக்கும் விழக்களுக்கு அனுமதி இல்லையா ?

:))

Mukundan said...

அய்யய்யோ ஆரம்பிச்சிட்டிங்களா, மசூதி, சர்ச் எல்லாத்துக்கும் தமிழில் கோயில் தானப்பா

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.