.

Wednesday, June 13, 2007

ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டு பேனர் கிழிப்பு.

ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பு .

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு கடைதெரு, பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அமைப்பு சார்பில் ஒரு பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. பேனரில் ஜுன் 17-ந் தேதி நெல்லையில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொள்கிறார் என்றும், இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் எழுதப் பட்டு இருந்தது.இந்த நிலையில் இந்த மாநாட்டு வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.இது குறித்து விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அமைப்பாளர் சரவணன் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த மனுவில் கடந்த ஜனவரி மாதம் அதே போல் இங்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனரை சிலர் கிழித்து தகராறு செய்தனர்.அந்த கோஷ்டியினரே தற்போதும் பேனரை கிழித்து இருக்காம் என்று தெரிவித்து உள்ளார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் பாப்பாநாடு, ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.