முதல்- அமைச்சர் கருணாநிதி அளித்துள்ள கேள்வி-பதில் ஒன்று மாலைமலரிலிருந்து..
கேள்வி:- சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 30 ஆம் நாள் நடைபெற்ற தங்களின் மைத்துனர் வீட்டுத் திருமணத்தில் தாங்கள் பேசும்போது, "கழக ஆட்சிக்கு சிலர் அறைகூவல் விடுக்கும் போதெல்லாம் உறுதியான வீர உள்ளம் படைத்த கழகத்தினர் இருக்க பயமேன்'' என்று குறிப்பிட்டதை தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளுக்கு விடுத்த மிரட்டல் என்பது போல சில ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?
பதில்:- தோழமை கொண்டோருக்கு யாரும் "சவால்'' அல்லது "மிரட்டல்'' விட மாட்டார்கள்-துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் தான் அறை கூவலோ, சவாலோ விடுவார்கள். வேடிக்கை என்ன வென்றால் தி.மு.க. அணியை உடைக்க வேண்டுமெனப் "பகீரத'' முயற்சி செய்து வருகிற சில ஏடுகள், திருமணத் தில் நான் பொதுவாகப் பேசியதை, கழகத்தின் உறுதியை எடுத்துக் கூறியதை, திரித்து வெளி யிட்டுக்கலகம் செய்திடத் துடியாய்த் துடிக்கின்றனவே அது தான் பெரிய வேடிக்கை. இத்தகைய எத்தர்களின் விஷமப் பிரச்சாரத்தில் எல்லோரும் ஏமாந்து விடமாட்டார்கள்.
Thursday, August 30, 2007
சவால் தோழமை கட்சிகளுக்கில்லை - கருணாநிதி.
Posted by
வாசகன்
at
10:05 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
2 comments:
பமாக திமுக ஏதோ Understanding ஆகிவிட்டது போல் தோன்றுகிறதே?!
//தோழமை கொண்டோருக்கு யாரும் "சவால்'' அல்லது "மிரட்டல்'' விட மாட்டார்கள்-துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் தான் அறை கூவலோ, சவாலோ விடுவார்கள்//
something fishy in his comment.
Edirigal - opposition parties / opponents.
Drogigal - Drogigal never comes from outside. is it in the party or in the alliance?.
Post a Comment