லக்னோ, ஜூன் 6: உத்திரப் பிரதேசத்தில் இன்று இறந்த 6 பேர் உட்பட மொத்தம் 22பேர் கோடை வெயிலுக்கு பலியாகியுள்ளனர். 43டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் சுட்டது. நாளை வெயில் இன்னும் அதிகமாகலாம் என தரிவிக்கப்பட்டுள்ளது.
Six die due to heat in UP, toll 22 The Hindu
Wednesday, June 6, 2007
உ.பியில் வெப்பத்துக்கு 22பேர் பலி
Posted by
சிறில் அலெக்ஸ்
at
11:50 PM
0
comments
வெப்ப ஆற்றலிலிருந்து.. மின்னாற்றலுக்கு..!
ஆற்றல் மாறா கோட்பாட்டின் அடிப்படையில்...
வீணாகும் வெப்பத்தை ஒலியலைகளைக்கொண்டு மின்சாரமாக மாற்றுகிற சாதனமொன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒரெஸ்ட் சைம்கோ தனது ஐந்து ஆய்வு மாணவர்களுடன் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
அக்கொஸ்டிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா என்கிற அமைப்பின் வருடாந்திர மாநாட்டில், ஜூன் 8ம் தேதி இக்கண்டுபிடிப்பு காட்சிபடுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்துக்கு அமெரிக்க ராணுவம் புரவலராகியுள்ளது. ராடாரிலிருந்து வெளியாகும் வெப்பத்தை கையடக்க மின்சாதனமாக மாற்றி போர்க்களங்களில் உபயோகிப்பதில் அவர்கள் ஆர்வங்கொண்டுள்ளனராம்.
Heat to Sound, to Electricity (TOI)
Posted by
வாசகன்
at
10:37 PM
1 comments
சென்னையில் SEVENTY MM வாடகை டிவிடி
சென்னை, ஜூன் 7: பெங்களூரைச் சேர்ந்த செவன்ட்டி எம்எம் நிறுவனம், சினிமா டிவிடிக்களை வாடகைக்கு விடும் திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து இந் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுபாங்கர் சர்க்கார், விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் அனுஜ் முகர்ஜி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழ், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மொழிகளில் உரிமை பெற்ற சினிமாக்களை டிவிடி வடிவில் வாடக்கை விடும் திட்டத்தை பெங்களூரில் தொடங்கினோம். தற்போது சென்னையில் அறிமுகம் செய்துள்ளோம்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஹிட் பேக், சூப்பர் ஹிட் பேக் மற்றும் பிளாக்பஸ்டர் பேக் என மூன்று வித திட்டங்கள் உள்ளன. தேவைப்படும் சினிமா டிவிடிக்களை இணையதளத்தில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் ஆர்டர் செய்யலாம். வீட்டுக்கு வந்து டிவிடி டெலிவரி செய்யப்படும். எத்தனை நாள் வேண்டுமானாலும் படத்தை வைத்திருந்து பார்க்கலாம். ஒரு படத்தை பார்க்க ரூ.8 தான் செலவாகும்.
மேலும் முழு செய்திக்கு "தினகரன்"
அந்த வாடகை டிவிடி வலைதளம் "SEVENTYMM.COM"
Posted by
சிவபாலன்
at
9:42 PM
3
comments
பார்வையின்மையை சரிசெய்ய 'ஸ்டெம் செல்'கள்!
பொதுவான பார்வையின்மை குறைபாட்டை சரிசெய்ய 'ஸ்டெம் செல்'களை பயன்படுத்த பிரித்தானிய மருத்துவ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இத்திட்டம் வெற்றி கண்டால் நிறையப் பேருக்கு பலனளிக்கும் என்று தெரிகிறது.
'கேடராக்ட்'எனப்படும் விழிப்படல அறுவை சிகிச்சையைப் போன்றே இதுவும் ஒரு எளிய ஒருநாளில் முடியும் அறுவை சிகிச்சையாக அமையுமாம்.
TOI
Posted by
வாசகன்
at
9:41 PM
0
comments
டெல்லி: பெட்ரோல் டீசல் விலை உயர்வு!
பெட்ரோல், டீசல் எரிபொருள் மீது மாநில அரசின் விற்பனை வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதால் அவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் டெல்லியில் பெட்ரோலுக்கு 67 பைசாவும் டீசலுக்கு 23 பைசாவும் உயர்ந்துள்ளன.
கடந்த ஆண்டு, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோது, மத்திய அமைச்சர் முரளி தியோரா மாநில அரசுகள் விற்பனைவரி விதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Posted by
வாசகன்
at
8:41 PM
0
comments
கொல்கத்தா சிறையில் ஒரு மெக்ஸிகன் உண்ணாவிரதம்
எட்வர்டோ அன்டோனியோ (Febles Ortiz Eduardo Antonio ) என்ற நாற்பத்தி ஏழு வயது மெக்ஸிகன் பயணி, மார்ச் 21ஆம் தேதி, தில்லியிலிருந்து பாங்காங் செல்லும் இந்திய விமானம் ஒன்றில் குடிபோதையில் சக பயணிகளை மிரட்டிய காரணத்துக்காக கைது செய்யப்பட்டார். அபாயகரமான வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக அவர் செய்த கலாட்டாவில் விமானத்தைக் கொல்கத்தாவில் தரையிறக்கி அவரைப் போலீஸார் வசம் ஒப்புவித்தனர்.
அவருக்கு பெயில் அளிக்கப்பட்டு விட்ட பிறகும், அதற்கான தொகையான ரூ 4,50,000/- ஐ அவரால் கட்ட முடியாமல் போனதால் தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இந்தத் தொகை மிக அதிகம் என்றும், தன்னால் கட்ட முடியாது என்றும் சொல்லும் அந்தோனியோ, தன்னை விடுவிக்கச் சொல்லி நேற்று முதல் சிறையிலேயே கால வரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
Mexican on hunger strike in Kolkata jail - DNA
Posted by
பொன்ஸ்~~Poorna
at
7:53 PM
1 comments
ஹுண்டை - பள்ளிக்கூடங்களுக்கு உதவி
ஹுண்டை மோட்டார் நிறுவனம் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மரச்சாமான்களை (மேசை, பெஞ்ச்) வழங்கி உதவ இருக்கின்றது.
முதல் கட்டமாக இருங்காட்டுக்கோட்டை பஞ்சாயத்து பள்ளிக்கூடத்துக்கு 350 பெஞ்ச், மேசைகள் வழங்கப்பட்டன. வருடத்துக்கு 10,000 ஜோடி பெஞ்ச் மேசைகள் வினியோகிக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
Hyundai to donate furniture to needy schools The Hindu
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:51 PM
0
comments
ச:அனுமதி இல்லாத கட்டிடங்கள் - மறுபரிசீலனை மனு
சென்னையில் முறையான அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவேண்டும் எனும் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு மனு ஒன்றை தமிழக அரசு அனுப்ப முடிவு செய்ய்துள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார்.
நடுத்தர மக்களின் நலனும், வியாபாரக் கூடங்களின் நலனும் பாதிக்கப்படாத வகையில் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதால் இந்த முடிவு என்றும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலமையில் ஒரு கமிட்டி இது குறித்த ஆய்வு ஒன்றை நடத்த அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்புள்ள 75,000 கட்டிடங்களையும் இடிக்கவேண்டும் என்றும் மறுபரிசீலனை மனு செய்யக் கூடாது என்றும் வலியுறுத்திவருகிறார்.
TN to file review petition on illegal constructions issue Zee News
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:38 PM
1 comments
ச:போப் வண்டிமீது குதித்த வாலிபர்
செயிண்ட் பீட்டர் ஸ்கொயரில் போப் தன் பிரத்யோக வண்டியில் வலம் வந்துகொண்டிருக்கையில் 27 வயது நிரம்பிய ஜெர்மெனிய வாலிபர் பாதுகாப்பு அரணைத் தாண்டி போப்பின் வண்டி மீது குதிக்க முயன்றார்். போப்பின் பாதுகாவலர்கள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர். இந்த பரபரப்பை கண்டுகொள்ளாமலேயே போப் பயணத்தை தொடர்ந்தார்.
Pope security breachedNDTV.com
Man tries to jump into popemobile Houston Chronicle, TX
Man Tries to Jump Into Popemobile Newsday, NY
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:23 PM
7
comments
மூன்றாவது அணி-ஜெ அறிவிப்பு .
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முயற்சியால் தேசிய அளவில் 8 கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இக் கூட்டணியில் அதிமுக தவிர முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மதிமுக, ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தள், அஸ்ஸாம் கன பரிஷத், கேரள காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தேசிய அளவில் 3வது அணி அமைப்பது குறித்தும், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவும் இன்று ஹைதராபாத்தில் இந்தக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க தோழி சசிகலாவுடன் நேற்றிரவு ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். வைகோவும் இன்று காலை ஹைதராபாத் சென்றடைந்தார். இன்று காலை சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் நடந்த இக் கூட்டத்தில் மூன்றாவது அணி உருவானது. இக் கூட்டத்தில் கேரள காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஆனாலும் கூட்டணியில் சேர்வதாக அக் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. இதில் ஜெயலலிதா, நாயுடு, முலாயம் சிங் யாதவ், அவரது வலதுகரமான அமர்சிங், சமாஜ்வாடி கட்சியின் கர்நாடக பிரிவுத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பங்காரப்பா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா சார்பில் பாபுலால் மராண்டி, அஸ்ஸாம் கன பரிஷத் சார்பில் பிருந்தாவன் கோஸ்வாமி, லோக் தள் சார்பில் செளதாலா, வைகோ ஆகியோர் பங்கேற்றனர். சமீபத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் ஏற்பட்ட பிளவில் உருவானது தான் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என்பது குறிப்பிடத்தக்கது. இக் கூட்டணியின் தலைவர், ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் இந்தக் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காது எனத் தெரிகிறது. பாஜக சார்பில் சுயேச்சையாக நிறுத்தப்படவுள்ள துணை ஜனாதிபதி ஷெகாவத்தை இக் கூட்டணி ஆதரிக்கக் கூடும். அல்லது தனி வேட்பாளரை நிறுத்தக் கூடும் என்று தெரிகிறது.
Posted by
Adirai Media
at
6:25 PM
0
comments
வாயில் தீக்குச்சியை கொளுத்திப்போட்ட கொடூரம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் அரிஜன காலனியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. அவருடைய மகன் சன்னாசி (வயது 15).
வாலிபர் சன்னாசி நேற்று முன்தினம் இரவு, அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள குமாரின் வீட்டிற்கு சென்று டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே காலனியை சேர்ந்த வாலிபர் குணசேகரன் அங்கு வந்தார்.
அவர், டி.வி. நிகழ்ச்சிகளை மும்முரமாக ரசித்துக் கொண்டிருந்த சன்னாசியை கடைக்கு சென்றுவரும்படி கூறி வேலை வாங்கினார். அதற்கு சன்னாசி மறுக்கவே, அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த குணசேகரன், ஒரு தீக்குச்சியை கொளுத்தி, சன்னாசியின் வாயில் வலுக்கட்டாயமாக போட்டதாக கூறப்படுகிறது. இதில் சன்னாசியின் நாக்கு மற்றும் உதடு ஆகியவற்றில் தீக்காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நல்லதம்பி, வாலிபர் குணசேகரனிடம், "ஏன் இதுபோல் செய்தாய்?" என்று கூறி தட்டிக்கேட்டார். அதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த குணசேகரன், அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து தாத்தாவின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் நல்லதம்பி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து, ஆத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலாம்பாள் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிவிட்ட வாலிபர் குணசேகரனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தினத்தந்தி
Posted by
வாசகன்
at
5:04 PM
0
comments
திமுகவினர் மிரட்டுவதாக விஜயகாந்த் புகார்
மதுரை மேற்கு தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேமுதிகவினரையும், கட்சி கவுன்சிலர்களையும் திமுகவினர் மிரட்டி வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியலில் என்னை முடக்க சதி திட்டம் நடத்தப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும் முடக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அது நடக்காது. நான் தெய்வத்தையும், மக்களையும் நம்பி வந்திருக்கிறேன். மதுரை மேற்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட முடியாதவாறு ஆளும் கட்சியினர் தேமுதிகவினரை மிரட்டி வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களின் வீட்டிற்கு சென்று பேரம் பேசி வருகின்றனர். தேமுதிக அனைத்து இடையூறுகளையும் கடந்து மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெறும் என்றார் விஜயகாந்த்.
Posted by
Adirai Media
at
4:48 PM
0
comments
ஏழு வயதில் மெட்ரிக் தேர்ச்சி! - இந்தியச் சாதனை.
அந்த சிறுமியின் பெயர் சுஷ்மா வர்மா. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.
மெட்ரிகுலேஷன் படிப்பு
சிறுமி சுஷ்மா 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தாள். இவளுடைய தந்தை தேஜ் பகதூர் வர்மா. கூலித்தொழிலாளி. தாய் சாயா. குடும்பத்தலைவி.
வறுமை காரணமாக சுஷ்மாவை அவளது பெற்றோர், பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. ஆனால் சுஷ்மா பொது அறிவில் சிறந்து விளங்கினாள்.
அவளுடைய கல்வி திறனை பார்த்து பொதுமக்கள் மட்டுமின்றி மாநில பள்ளிக் கல்வித்துறையும் ஆச்சரியத்தில் மூழ்கியது. இதையடுத்து லக்னோ செயின்ட் மீனா பள்ளியில் சுஷ்மாவை 9-ம் வகுப்பில் நேரடியாக சேர்த்துக் கொள்ள கல்வித்துறை அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு அவள் 10-ம் வகுப்பு மெட்ரிகுலேஷன் பரீட்சை எழுதினாள்.
7 வயது சிறுமி மெட்ரிக் எழுதும் தகவல் அறிந்ததும் பத்திரிகைகளும், டி.வி.க்களும் சுஷ்மாவை பற்றி பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அளவுக்கு அதிமான விளம்பரத்தால் சுஷ்மாவின் திறமை பாதிக்கப்படலாம் என்று பள்ளி நிர்வாகம் கவலை அடைந்தது.
சாதனை
உ.பி.மாநில மெட்ரிகுலேஷன் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சிறுமி சுஷ்மா 600-க்கு 354 மதிப்பெண்கள் வாங்கி தேர்வு பெற்றாள்.
அவள் இந்தியில் 58, ஆங்கிலத்தில் 60, கணிதத்தில் 66, விஞ்ஞானத்தில் 63, சமூக அறிவியலில் 68, கம்ப்ïட்டர் பாடத்தில் 39 மதிப்பெண்கள் பெற்று இருந்தாள்.
இதற்கு முன்பு பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த துளசி என்ற 9 வயது சிறுமி மெட்ரிகுலேசன் பரீட்சையில் பாஸ் செய்து இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த சாதனையை படைத்த மாணவி என்ற பெருமையை பெற்று இருந்தாள். அந்த சாதனையை இப்போது சுஷ்மா முறியடித்து விட்டாள்.
அவளுக்கு சக மாணவிகள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். சாதனை படைத்த சுஷ்மா கூறுகையில், "கம்ப்ïட்டர் பாடத்தில் மார்க் குறைந்ததால் முதல் வகுப்பில் பாஸ் செய்ய முடியாமல் போய் விட்டதே என்பதுதான் தனது வருத்தம்'' என்று குறிப்பிட்டாள்.
சுஷ்மாவின் குடும்பத்தை பொறுத்தவரை அவள் மட்டுமின்றி அவளுடைய அண்ணன் சைலேந்திரனும் அறிவு ஜீவிதான். இவன் 11-வது வயதில் 12-ம் வகுப்பு பாஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவன். ஆங்கிலத்தில் இவனுடைய அபார திறமையை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவனுக்கு மேல்படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால் பண வசதி இல்லாததால் அவன் அமெரிக்கா போகமுடியவில்லை.
தினத்தந்தி
அஞ்சல்வழித் தகவல்: நண்பர் 'ஷஃபீக்'
Posted by
வாசகன்
at
4:32 PM
0
comments
பி.சுசீலா: இரண்டாவது இன்னிங்ஸ்
பொட்டு வைத்த முகத்தை தொட்டு வைத்த தலைவா...உனக்கொரு உனக்கொரு கோரிக்கை...தொட்டுவைத்த முகமும் விட்டுவைத்த அழகும்...உனக்கொரு உனக்கொரு காணிக்கை...'' என்று அந்த பாடல் வரிகள் அமைந்திருந்தது.
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பாடகியாக கொடிகட்டி பறந்த பி.சுசீலா, பல வருடங்களாக சினிமாவில் பாடவில்லை. மேடைகளில் மட்டும் பாடி வந்தார். மிக நீண்ட இடைவெளிக்குப்பின், அவர் சினிமாவுக்காக பாடினாலும், அந்த இனிய குரல் இன்னும் அப்படியே இருப்பதாக கவிஞர் வைரமுத்துவும், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் கூறினார்கள்.
பி.சுசீலா பேட்டி
மிக நீண்ட இடைவெளிக்குப்பின், சினிமாவுக்காக பாடியது பற்றி பி.சுசீலா `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-
``1952-ம் ஆண்டில் நான் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனேன். `பெற்ற தாய்' என்ற படத்துக்காக, ``ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு அழைத்தாய்'' என்ற பாடலை முதன்முதலாக பாடினேன்.
இதுவரை தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிவிட்டேன். கடைசியாக, `புதிய முகம்' என்ற படத்துக்காக 1994-ம் ஆண்டில் பாடினேன். ``கண்ணுக்கு மையழகு'' என்ற அந்த பாடலை கவிஞர் வைரமுத்துதான் எழுதியிருந்தார்.
13 வருடங்கள் கழித்து மீண்டும் அவர் எழுதிய பாடலை, இப்போது பாடியிருக்கிறேன்.''
இவ்வாறு பி.சுசீலா கூறினார்.
Posted by
வாசகன்
at
4:19 PM
3
comments
ச: மூன்றாம் அணிக்கு முன்னோடி
ஹைதராபாத்தில் காங்கிரசிற்கும் பிஜேபிக்கும் மாற்றாக மூன்றாம் அணி அமைப்பதற்கு முன்னோடியாக ஐந்து பிராந்தியக் கட்சிகளின் கூட்டம் இன்று சந்திரபாபு நாயுடு வீட்டில் கூடியது. அ இ அதிமுக தலைவர் ஜெயலலிதா, சமாஜ்வாடிக் கட்சியின் முலாயம்சிங் யாதவ், அசோம் கணபரிஷத் தலைவர் ப்ரிந்தாவன் கோஸ்வாமி, இந்திய தேசிய லோக் தளத்தின் ஓம் பிரகாஷ் சௌதாலா,முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பா,முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் மாராண்டி, மதிமுக தலைவர் வைகோ, மற்றும் கேரள காங்கிரசின் கேஜே தொமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களில் கடைபிடிக்கக் கூடிய வாய்ப்புக்களை விவாதித்தனர்.
The Hindu News Update Service
Posted by
மணியன்
at
3:13 PM
0
comments
b r e a k i n g n e w s...