ராகிங்: மாணவியை நிர்வாணமாக்கிய மாணவிகள்
ஆகஸ்ட் 28, 2007
டேராடூன்: முதலாமாண்டு மாணவியை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து கொடுமைபடுத்தியுள்ளனர் சீனியர் மாணவிகள்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய மாணவர் படை பயிற்சி (என்.சி.சி) முகாம் சமீபத்தில் நடைபெற்றது. 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த முகாமில், டேராடூனில் உள்ள கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் பங்கேற்றார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த மாணவி ரிக்ஷா தொழிலாளியின் மகள். இந்த மாணவியை பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சீனியர் மாணவிகள் சிலர் சேர்ந்து ராக்கிங் செய்துள்ளனர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவிகள் ஒன்று சேர்ந்து அவரை கடுமையாக திட்டியதோடு வலுக்கட்டாயமாக நிர்வாண நிலையில் நிற்க வைத்துள்ளனர்.
இதனால் அந்த மாணவி மன நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு இந்த சம்பவத்தை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
எனது மகள் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக தான் இதுவரை புகார் கொடுக்கவில்லை என்று அந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து என்.சி.சி முகாம் நிர்வாகிகள் கூறுகையில்,
என்.சி.சி பயிற்சியின் போது அந்த மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ராக்கிங் நடந்திருக்கலாம். அதனை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தட்ஸ்தமிழ்
Tuesday, August 28, 2007
ராகிங் கொடுமை... (பெண்களும் சளைத்தவர்கள் இல்லை )
Labels:
பெண்கள்
Posted by
கோவி.கண்ணன் [GK]
at
2:03 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
4 comments:
என்ன கொடுமை இது?
ராகிங் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், அப்பொழுது தான் அது மற்றவர்களுக்கு பாடமாக அமையும்.
NCCலேயே இவ்வளவு ஒழுக்கமா? :(
ராகிங் எனும் ஆங்கிலச் சொல்லை இலங்கையில் பகிடிவதை எனத் தமிழில் சொல்வர். இச் சொல்லைத் தமிழகத்தில் எப்படித் தமிழில் சொல்வார்கள்?
Post a Comment