.

Tuesday, August 28, 2007

குஜராத்: கட்சி தாவும் சட்டமன்ற உறுப்பினர்கள்

இந்தாண்டு இறுதியில் குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து காங்கிரசுக்கு தாவும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல், முன்னாள் மத்திய அமைச்சர் காசிராம் ராணா, மூத்த தலைவர் சுரேஷ் மேதா ஆகியோர், மோடியின் செயல்பாடு பிடிக்காமல் கட்சியிலிருந்து வெளியேறி இருப்பது காங்கிரசுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள், தற்போது வெளிப்படையாகவே பாரதிய ஜனதாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நரேந்திர மோடியின் ஆட்சியை அகற்ற எங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.பாரதிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.,வான திரு கஜிராவையும், அவரது சகோதரர் வசந்த் கஜிராவையும், அவர்களது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார் காங்., தலைவர் சங்கர்சிங் வக்கேலா.இவர்கள் தவிர, பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., சித்தார் பரமரும், காங்.,குக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாரதிய ஜனதாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களை தன்வசம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களான மனிஷ் கில்லட்டுவாலா, அக்சாரியா ஆகியோர் பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளனர். இவர்களில், அக்சாரியா காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்.கட்சித் தாவும் எம்.எல்.ஏ.,க்கள், இரு கட்சிகளிலும் அதிகரித்து வருவதால், குஜராத் அரசியலில் விரைவில் பெரும் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

நன்றி: தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...