.

Tuesday, March 6, 2007

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா: உலகின் மோசமான நாடுகள்?

பி.பி.சியின் உலகளாவிய ஆய்வு ஒன்றில் இஸ்ரேல், ஈரன், அமெரிக்கா ஆகிய நாடுகள் மோசமான பேரைப் பெற்றிருப்பதாக அறியப்பட்டுள்ளது. 28000க்கும் மேலானோர் உலகின் 12 நாடுகளைப் பற்றி மதிப்பிட்டனர். கனடா ஜப்பான் சிறநத நாடுகளாக வாக்களிக்கப்பட்டன. இந்தியா எதிர்மறை வாக்குகளைவிட ஆதரவு வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறது.

BBC survey: Iran, Israel, US have most negative image in world

இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

சற்றுமுன் நிலவரப்படி இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது (13 ஓவர்கள்). கங்கூலி 19 ரன்களுக்கும், ஷேவாக் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

முழு ஸ்கோர் விவரம்

இந்தியா 31/0

இன்று நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் பயிற்சி போட்டி நடந்து வருகிறது. டாஸில் ஜெயித்த நெதர்லாந்து இந்தியாவை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. தற்போதைய நிலவரப்படி இந்தியா 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது.

மேல் விவரங்களுக்கு

சிகாகோவிற்கு கிடைக்குமா ஒலிம்பிக்ஸ்?


வரும 2016ல் ஒலிம்பிக்் போட்டியை நடத்த சிகாகோவும் (Chicago) விண்ணப்பித்துள்ளது. இதில் சான்பிரான்சிஸ்கோ (San Francisco) மற்றும் லாஸ்ஏன்ஜெல்ஸ் (Los Angeles). ்போன்ற நகரங்களும் விண்ணபித்துள்ளன.

இன்று ஒலிம்பிக் கமிட்டி சிகாகோவை மேற்பார்வை இடுகிறது.

இதில் புது தில்லியும் (New Delhi) கோதாவில் குதித்திருக்கிறது.

பார்ப்போம் யார் வெல்வார்கள் என..


பார்க்க சிகாகோ செய்தி



பார்க்க புது தில்லி செய்தி

பருத்தி வீரன், மொழி - சாதனை

'இந்த செய்திக் கூற்றின்படி முதல் ஐந்து தமிழ்படங்கள் வரிசையில் முதலிடத்தை 'பருத்திவீரன்' பிடித்து ஒரு அறிமுகநடிகர் தன் முதல்படத்திலேயே சாதனை நிகழ்த்திய பெருமையை நடிகர் கார்த்திக்கு கொடுத்திருக்கிறது.

முதல் ்முதல் ஐந்து இடங்கள்:
1.பருத்திவீரன்
2. மொழி
3.பச்சைக்கிளி முத்துச்சரம்
4. போக்கிரி
5. திருவிளையாடல் ஆரம்பம்

இந்தோனேசிய நிலநடுக்கம்: 30 பேர் பலி

நில அதிர்வுகளுக்கு மத்தி யில் அடிக்கடி அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்தோனேசிய மக்களை இன்று காலை மீண்டும் ஒரு வலுவான நிலநடுக்கம் தாக்கியது. அந்த நில நடுக்கம் இந் தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள வடக்கு மாகாண தலைநகர் பதங் அருகில் மையம் கொண்டிருந்தது. அந்த நாட்டு நேரப்படி காலை 10.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற கணக்கில் அது பதிவாகி இருந்தது. மிக வலுவான இந்த நில நடுக்கத்தால் தலை நகர் பதங் குலுங்கியது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

சுமத்ரா தீவை புரட்டிப்போடும் வகையில் இந்த நிலநடுக்கம் இருந்ததாக உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்தும் அலுவலகங்களில் இருந்தும் அலறியடித்தப்படி வெளியில் ஓடி வந்தனர். தெருக்களில் திரண்ட மக்கள் பதட்டத்துடன் நடுங்கியபடி நின்றனர்.

இதற்கிடையே நிலநடுக் கத்தால் சுனாமி பேரலைகள் தாக்ககூடும் என்ற பீதி பர வியது. இதனால் மக்கள் உயரமான பகுதிகளுக்கு படை யெடுத்தனர். மக்கள் குடும்பம், குடும்பமாக பதங் நகரை விட்டு வெளியேறியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு பக்கம் மக்கள் ஓட்டம் பிடித்துக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு பக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி நடந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப் பட்டனர்.

மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 1 மணி நேரம் கழித்து பதங் நகர் அருகே மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமத்ரா தீவு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கமும் பதங் நகர் அருகே மையம் கொண்டிருந்ததால் பதங் நகரம் மிக கடுமையாக பாதிக் கப்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் முழுமையாக நொறுங்கி விட்டன. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் செத்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பதங் நகர் அருகில் உள்ள பதுசங்கர்நகரில்தான் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்தது. அந்த நகரில் நில நடுக்கத்துக்கு 30 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. உயிரிழப்புமேலும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பதங், பதுசங்கர் நகர இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பதங் நகர மருத்துவமனைகளுக்கு மற்ற பகுதிகளில் இருந்து டாக்டர்கள் விரைந்துள்ளனர்.

மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுனாமி தாக்காது என்று இந்தோனேசியா அறிவித்த பிறகே சுமத்ரா தீவு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சுமத்ரா தீவில் உருவான நிலநடுக்கம் 420 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் உண ரப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள உயரமான கட்டிடங்கள் பலதடவை குலுங்கின. சில கட்டிடங்கள் அங்கும் இங்கு மாக தொட்டில் போல ஆடின.

இதனால் சிங்கப்பூர், மலேசியாவில் மக்களிடம் பதட்டம் ஏற்பட்டது. வீடு, கட்டி டங்களில் இருந்து வெளியேறி தெருக்களில் நின்றனர்.

இந்த நில அதிர்வு காரணமாக சிங்கப்பூர், மலேசியாவில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. சுமார் 10 நிமிடங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.

source மாலைமலர்

சுமத்ரா நிலநடுக்கத்தில் 11பேர் மரணம்

இந்தோனேஷியா வின் மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பாடங் நகரருகே நிகழ்ந்த அடுத்தடுத்த இரு நிலநடுக்கங்களில் குறைந்தது 11 பேர் மரணித்திருப்பார்கள் என ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது. இந்த நிலநடுக்கங்கங்கள் அடுத்துள்ள மலேசியா, சிங்கப்பூர் வரை உணரப்பட்டதாக மேலும் அந்த செய்தி சொல்கிறது. CNN 30 பேர் வரை இறந்திருக்கலாம் என வெளியிட்டுள்ளது.

உடனடியாக சுனாமி அறிவிப்பு எதுவும் வெளியிடப் படவில்லை.

சிங்கப்பூரில் பூகம்பம்.

5 நிமிடங்களுக்கு முன் சிங்கையில் பூகம்பம்.

பதிவர் கோவி. கண்ணன்
இன்னும் பதட்டமாக இருக்கு 1 1/2 டன் எடையுள்ள server rack ஆடிய ஆட்டம்...உடனே தெரிந்து கொண்டேன்... எல்லோரும் வெளியில் ஓடிவிட்டார்கள்...நிகழ்வு 15 செகண்ட் வரை நீடித்தது... விளைவுகளும் அதிர்வு அளவு பற்றிய செய்திகள் இன்னும் முழுதும் வரவில்லை.

நக்கீரன் தனிமடலில் இதே செய்தியை தந்துள்ளார்.


சிங்கை பகல் 1 மணி செய்திவழியாக வந்த தகவல் என்று பதிவர் கோவி.கண்ணன்
சற்று முன் கிடைத்த சிங்கை தமிழ் செய்தியில் படி சிங்கப்பூரில் பூகம்பம் உணரப்பட்டதை பொதுமக்களும் அரசாங்க அமைப்புகளும் உறுதி செய்துள்ளதாக அறிவித்தது.

இந்தோனேசியாவில் பாடாங் என்ற இடம் பூகம்பம் ஏற்பட்ட மையமாக தெரிய வந்திருக்கிறது. அங்கு உயிர்சேதம் பொருள் சேதம் பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை. இந்தோனேசியா பாடாங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிய வந்திருக்கிறது.

அரசிதழில் வெளியிட்டால் பாதிப்பு ஏற்படாது : ஜெ அறிக்கை

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசின் அரசிதழில உடனே வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுவரை, அந்த தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனுக்கான ஒரே வழி, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதுதான்.

அவ்வாறு வெளியிட்டால், நமக்கென தீர்ப்பில் குறிப்பிட்ட குறைந்தபட்ச நீராவது கிடைக்கும். இதற்கும் தீர்ப்பில் உள்ள பாதகமான விஷயங்கள் குறித்து, ஆணையத்திடம் மனு செய்வதற்கும், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கும் தொடர்பில்லை.

இது சம்பந்தமான் முந்தைய இடுக்கைகள்


காவிரி:அதிமுக கோரிக்கைக்கு கருணாநிதி எதிர்ப்பு

நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெ. கோரிக்கை


தினகரன்

தெருநாய்களைக் கொல்வதால் வணிகம் பாதிக்கும்

கர்நாடகாவின், தெருநாய்களைக் கொல்லும் முயற்சியால் வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்படலாம் என விலங்குப் பிரியகளின் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இந்தக் கொடூரச் செயலை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது' என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

Karnataka act against stray dogs may hit trade: animal lovers

"The world is watching us; it might stop trading with Karnataka, boycott its coffee and adversely affect our economy," the Animal Lovers Association (ALA) warned in a statement here.

அசாம் இந்தியன் ஆயில் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

அசாமில் IOCன் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

The Hindu
A major fire broke out in the Indian Oil Corporartion's Guwahati refinery's crude distilling unit on Monday night, IOC refinery sources here said.
The fire, caused due to a leakage in unit 1 of the refinery, was spotted at around 9 p.m.
Fire tenders of the refinery and of the State doused the blaze in over two hours, the sources said.

The quantam of damage could not be immediately ascertained. No casualty or injury was reported, sources said.

35 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

அயர்லாந்துக்கு எதிராக இன்று நடந்த பயிற்சி போட்டியில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென்னாப்பிரிக்கா. 7 விக்கெட்ட் இழப்பிற்கு 66 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்து சுதாரித்து 192 ரன்களை அடைந்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. பின் அனைத்து விக்கெட்களையும் மடமடவென இழந்து 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா இப்போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மேல் விவரங்களுக்கு

இன்று நடந்த மற்ற போட்டிகளில் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் பெர்முடாவையும், இலங்கை 172 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தன. கென்யாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 5 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் அடித்துள்ளது.

மேல் விவரங்களுக்கு

Lenovo Laptops பேட்டரிகளை திரும்பப் பெறுகிறது

சீனாவின் முன்னணி கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனமான லெனோவா தனது லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பேட்டரிகளை திரும்ப் பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் சான்யோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த பேட்டரிகள் அதிக வெப்பத்தை ஏற்படுத்தி தீ பிடிக்கும் அபாயம் இருப்பதால் அவற்றை திரும்பப் பெற லெனோவா முடிவு செய்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் லெனோவா தனது பேட்டரிகளை திரும்பக் கோருவது இது இரண்டாவது முறையாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள திரும்பப் பெறும் அறிவிப்பில் அமெரிக்காவில் உள்ள ஒரு லட்சம் பேட்டரிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பேட்டரிகளும் அடங்கும் என்று லெனோவா செய்தித் தொடர்பாளர் பாப் பேஜ் கூறியுள்ளார்.


MSN - TAMIL்

இந்தியா, பாக்: தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டு முயற்சி

இந்தியா பாக்கிஸ்தான் கூட்டாக தீவிரவாதத்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கான ஒரு குழுவை இரூ நாடுகளும் ஒன்றிணைத்துள்ளன.

India, Pakistan to launch joint terrorism panel

The Pakistani and Indian leaders agreed to set up the panel when they met on the sidelines of a conference in September, when they also agreed to resume their stuttering peace process, frozen after bombings in the Mumbai in July.

Pakistan asked to take part in the investigation of the bombing but India declined. Pakistan expects to hear the results of India's investigation at the two-day meeting in Islamabad, said Foreign Ministry spokeswoman Tasnim Aslam.

"This is a mechanism which has been established to help the two countries prevent terrorism acts on either side," Aslam told a briefing on Monday, referring to the panel.

நாட்குறிப்பைக் கொல்லும் வலைப்பதிவுகள்

Reutersன் ஆய்வு வலைப்பதிவுகள் நாட்குறிப்பெழுதும் பழக்கத்தை மாற்றிவிட்டன எனச் சொல்கிறது.

Blogging sounds death knell for diarists - survey

A survey released on Monday of 1,000 British teenagers shows that fewer than one in 10 young people take the time to write a traditional diary, compared with 47 percent who share their innermost thoughts by blogging online.

-o❢o-

b r e a k i n g   n e w s...