.

Tuesday, July 31, 2007

தாலிபான் கொடூரம்: இரண்டாவது கொரிய பிணைக்கைதி கொலை

ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் தீவிரவாதிகள் ஜூலை 19 அன்று காபூலிலிருந்து காந்தஹார் சென்றுகொண்டிருந்த 23 கொரிய பயணிகளை வழிமறித்து பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள். இவர்களை விடுவிக்க இணையாக 23 தாலிபான் கைதிகளை விடுவிக்க கோரிக்கை எழுப்பியிருந்தனர். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே பாதிரியார் பே ஹுயங் கு வினைக் கொன்று அவரது உடல் திங்களன்றுதான் கொரியா சென்றடைந்துள்ளது. இதனிடையே இன்று ஆஃப்கான் காவல்துறையினர் ஷ்ஹிம் சுங் மின் என்ற மென்பொருளாளரின் உடலை கண்டெடுத்துள்ளனர். அவரது வலது பொட்டில் துப்பாக்கி இரவை பாய்ந்த காயம் உள்ளது. நாளைக்கு மதியம் 12 மணிக்குள் தாங்கள் கோரிய கைதிகளை விடுவிக்காவிட்டால் 18 பெண்கள் அடங்கிய பிணைக்கைதிகளிலிருந்து ஒவ்வொருவராக கொலை செய்யப் படுவர் என அவர்களின் பிரதிநிதியாக செயல்படும் காரி யூசஃப் அஹமதி கூறியுள்ளார். ஆஃப்கன் அரசும் கொரிய அரசும் பொய் பேசுவதாலும் ஏமாற்றுவதாலுமே இந்தக் கொலைகள் நடந்தேறியதாகவும் அவர் கூறினார். இந்த செய்தி கொரியாவை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Hostage Killing: Second South Korean Hostage Murdered - International - SPIEGEL ONLINE - News

3 comments:

மணியன் said...

தாலிபான்களின் செயலைப் புரிந்து கொள்ள முடியவில்லையே :(
அனைத்து நாடுகளின் கோபத்தை தங்கள் மீது திருப்பிக் கொண்டு அமெரிக்கர்களுக்கல்லவா ஆதரவு சேர்க்கிறார்கள் ?!

ஒன்றும் அறியாத அப்பாவிகளை காவு வாங்கும் போர்முறை/தீவிரவாதத்திற்கு என்று தீர்வு காணப்படும் ?

Boston Bala said...

பேரத்தைப் பெரிதாக்க இவ்வாறு செய்திருப்பார்கள்.

Anonymous said...

koriya ponRa aasiya Naattavar kaithiyaaka iruppathaal innilai.
amerikka aangkila kaithikaL enil inneram ulakamE (i mean ottumoththa miidiyaavum) aLaRiyirukkum

-o❢o-

b r e a k i n g   n e w s...