.

Tuesday, July 31, 2007

தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது அவதூறா? - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதியரசர் அசோக்குமார் நியமனம் பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாகியுள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் கொண்ட கொலேஜியம் எனும் அமைப்பை கலந்தோ, கலக்காமலோ, நியமனம் செய்யப்பட்டதா எனும் கேள்வி இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளது.

வழக்கினை சட்ட அமைச்சராக இருந்த மூத்த வழக்குரைஞர் சாந்திபூஷனும் காமினி ஜெய்ஸ்வாலும் தாக்கல் செய்துள்ளனர். இதன்மீது நோட்டீஸ் ஏதும் பிறப்பிக்காமலேயே, மய்ய அரசு பதில் உரை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் டி.கே. ஜெயின் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது; 1999 முதல் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட் டவர்கள் பற்றிய விவரங்களை ஆறு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

வழக்கு மனு தாக்கல் செய்தவர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் அனில்தவான் வாதிடுகையில் 1998-இல் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் படி, தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகளும் கொண்ட கொலேஜியம், நீதிபதிகளை முதலில் நியமிக்கும் போது மட்டும் அல்லாமல் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் போதும் முடிவெடுக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அசோக்குமார் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது இது பின்பற்றப்பட வில்லை; இந்த விசயத்தில் நாங்கள் வாதிடுவதில் எங்களுக்கு ஒன்றும் மகிழ்ச்சி யில்லை, ஆனால் நடந்தவை எங்களைச் சங்கடப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் 2003-இல் கூடுதல் நீதிபதியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். கூடுதல் நீதிபதியாகவே ஏறத்தாழ நான்கு ஆண்டுக்காலம் பதவி வகித்து வந்தவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் கூறும் வாதம் என்னவென்றால், இந்தியத் தலைமை நீதிபதி கொலாஜியத்தையோ, அல்லது பிற உச்சநீதிமன்ற நீதிபதிகளையோ கலந்து ஆலோசிக்காமல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்திருக்கிறார் என்பதே!

கொலேஜியம் மூலம் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறை 1998-இல் நடைமுறைக்கு வந்தது. இந்த நடைமுறை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினால் வந்தது இந்திய அரசமைப்புச் சட்டத் தில் கூறப்பட்ட நடைமுறை வேறு. அதன்படி, மாநில, மத்திய அரசுகளின் பரிந் துரைப்படி இந்தியத் தலைமை நீதிபதியைக் கலந்து ஆலோசித்து நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவர் என்பதுதான் ஆதியில் இருந்த நடைமுறை, 1950 முதல் இருந்த நடைமுறை. பாதியில் வந்த நடைமுறையின்படிதான் கொலேஜியம் சர்வ அதிகாரம் கொண் டதாக ஆக்கப்பட்டு மைய, மாநில அரசுகள் வெறும் பொம்மைகளாக மாற்றப் பட்ட நிலை.
தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இந்தியத் தலைமை நீதிபதியும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்.

முழுவதும் படிக்க: விடுதலை

The Hindu : National : Justice Ashok Kumar’s appointment challenged
IBNLive > Madras HC judge chosen despite SC objection, PIL filed

3 comments:

சிவபாலன் said...

பாபா

பகிர்வுக்கு மிக்க நன்றி!

ம்ம்ம்.. செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவு!

Nakkiran said...

i do not understand the reason for the title.. in my opinion Title and Post, does not have any relationship.

Thamizhan said...

இந்திய உச்ச நீதி, உயர் நீதி மன்றங்களில் நீதிபதிகள் நியமனங்கள் மாநில, மத்திய அரசுகளின் ஆலோசனைகளுடன் நடக்க அரசியல் சட்டம் வழி வகுத்துள்ளது.
இதில் இந்திரா காந்தி ஆட்சியின் போது நடந்த அநியாயங்களைப் பயன் படுத்தி உச்ச நீதி மன்றம் அந்த நியமன் உரிமைகளைப் பறித்துக் கொண்டது.
உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி,மற்ற மூத்த இரண்டு நீதிபதிகளின் ஆலோசனைக் குழு உயர் நீதி மன்ற நீதி பதிகளை நியமிக்க அரசுக்கு அனுப்பு கின்றனர்.
தலைமை நீதிபதி பாலகிருஷ்னன் பதவிக்கு வரும் போதே உயர் ஜாதியினர் எதிர்த்தனர்.ஆனால் அப்போது ஜனாதிபதியாக இருந்த தாழ்த்தப் பட்ட நாராயணன் அவர்களின் பிடிவாததிதினால்தான் பாலகிருஷ்னன் நியமிக்கப் பட்டார் என்பது பல்ரின் எண்ணமும், சிலரின் எரிச்சலும் ஆகும்.
உச்ச நீதி மன்றந்தான் பார்ப்பனீயத்தின் கடைசிக் கயிறு என்பது காஞ்சி சங்கராச்சாரி வழக்கில் நன்கு தெரிந்து விட்டது.
இப்போது புரிந்து கொள்ளலாம் உச்ச நீதி மன்ற நாடகங்கள் சில பார்ப்பன அதிகாரத்தின் கடைசி அத்தியாயங்கள் என்பதை.
அனைவருக்கும் அரசியல் சட்டம் சமம் என்பார்கள் ஆனால் கொலைக் குற்றம்
சாட்டப்பட்ட சுப்பிரமணிக்கு மட்டும் அவர்களே வாதாடுவார்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...