சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மொரீசியசில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டு வந்தது. இதில் கிரண் முகமது (35), அவரது மனைவி செய்யது பீவி (30) ஆகியோர் பயணம் செய்தனர்.
தங்களது 5 மாத குழந்தை ஹைதர்அலிக்கு இருதய கோளாறு தொடர்பான சிகிச்சை பெறுவதற்காக அவர்கள் சென்னை வந்தனர். விமான நிலையத்தை நெருங்கும் வேளையில் குழந்தை ஹைதர் அலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.
இது பற்றி பெற்றோர் விமானியிடம் கூறினார்கள். அவர் விமானநிலைய அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் அங்கு வர வழைக்கப்பட்டனர்.
விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியதும் குழந்தை ஹைதர்அலியை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது குழந்தை நடுவானில் வைத்தே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைக்கேட்டதும் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் அங்கேயே குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடுத்த விமானத்திலேயே மொரீசியசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாலைமலர்
Thursday, July 26, 2007
நடுவானில் விமானத்தில் இறந்த குழந்தை.
Labels:
குழந்தைகள்,
மரணம்
Posted by
வாசகன்
at
11:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
6 comments:
இத்தனை தூரம் வந்ததே. பிழைத்து இருக்கலாமே.
அடப்பாவமே(-:
பெற்றோருக்கு மன அமைதி கிட்டட்டும்.
ஹ்ம்ம்ம்... சோகமான செய்திதான். கடவுள் அந்த பெற்றோருக்கு ஒரு ஆரோக்கியமான குழந்தையை அளிக்கட்டும்..
வெளிநாடுகளிலிருந்து எத்தனையோ பேர் இங்கு வந்து சிகிச்சை பெற்று
நலமாக திரும்பும்போது இந்தக்குழந்தைக்கு கொடுத்துவைக்கவில்லையே!
விமானத்திலேயே ஒரு டாக்டர் பயணித்திருந்தால் குழந்தை பிழைத்திருக்குமோ?
சகாதேவன்.
Post a Comment