.

Saturday, June 9, 2007

ச:கொட்ரொச்சி இந்தியமீட்பு: அர்ஜென்டீனா நீதிமன்றம் மறுப்பு

அர்ஜெ டீனாவின் கீழ் நீதிமன்றம் இரண்டுநாட்களாக சிபிஐ வாதத்தைக் கேட்டபிறகு அவரை இந்தியாவிற்கு வெளியேற்ற முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள் ஜூன்13 அன்று வெளியிடப்படும். சிபிஐ ஐந்து நாட்களுக்குள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும். அதற்கு ஏதுவாக ஜூன் 18 வரை கொட் ரொச்சி அந்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளது.

NDTV.com: Quattrocchi's extradition: Argentina rejects demand

எம்.பி. ஆனார் கனிமொழி.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நரேஷ் குப்தா வழங்கினார்.

தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட்ட கவிஞர் கனிமொழி உள்ளிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆறு பேருக்கும் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த 6 பேரின் பதவிக்காலம் முடிந்ததால் அவர்களுக்குப் பதில் புதிதாக 6 பேரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் பி.எஸ்.ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோரும், அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், இளவரசன் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சுயேச்சையாக பத்மராஜன் மட்டும் மனு தாக்கல் செய்தார். மனுக்கள் பரிசீலனையின்போது பத்மராஜன் மனு நிராகரிக்கப்பட்டது. மற்ற 6 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்ன. இதையடுத்து அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது. நேற்று மாலைக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அதற்கான அவகாசம் முடிந்ததும், கனிமொழி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரியான தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மாலை 4.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து ஆறு பேருக்கும் அவரவருக்குரிய வெற்றிச் சான்றிதழை நரேஷ்குப்தா வழங்கினார். இதைத் தொடர்ந்து கனிமொழியுடன் வந்திருந்த அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து கொடுத்தனர். மற்ற எம்.பிக்களுக்கும், அவரவர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களை நரேஷ்குப்தாவுடன் சேர்த்து நிற்க வைத்து புகைப்படம் எடுக்க போட்டோகிராபர்கள் கோரினர். திமுக கூட்டணி எம்.பிக்கள் இதற்கு உடன்பட்டனர். ஆனால் அதிமுக எம்.பிக்கள் அதை நிராகரித்து விட்டு கிளம்பி விட்டனர்.

நயாகராவில் அஸ்தி கரைப்புச் சடங்கு: ஹிந்துக்கள் கோரிக்கை

கனடா நாட்டில் ஒன்டாரியோ மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து சமூகத்தவர், நயாகரா நதியில் அஸ்திகளைக் கரைக்க அரசின் அனுமதியை நாடியுள்ளனர். கனடா வாழ் ஹிந்து சமூகத்தவரின் சம்மேளனத் தலைவர் ரூப்நாத் சர்மா இதைத் தெரிவிக்கிறார்.

நயாகரா என்பது வேகமாக ஓடும் நதி. அதன் நீர் மிகத் தூய்மையாக இருக்கிறது. இறந்தவர்களின் அஸ்திகளை ஆற்றில் கரைப்பது ஹிந்துக்களின் வழக்கம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் நதி நீரைச் சுத்தமாக வைத்திருக்க சட்டமே இருக்கிறது. எனவே அஸ்தி கரைப்பை அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ள முடியாது. இறந்தவர்களுக்காக ஹிந்துக்கள் செய்யும் சடங்குகளை விளக்கி, அஸ்திகரைப்பும் அதில் ஒன்று என்று புரிய வைக்க வேண்டும். அதன் பிறகு கனடா அரசின் அனுமதியைப் பெற்றால்தான் அஸ்தியைக் கரைக்க முடியும்.

Dinamani.com

அர்ஜுன விருதுக்கு இளவழகி பரிந்துரை

தில்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் போட்டியில் மகுடம் சூடிய தமிழக வீராங்கனை ஐ. இளவழகி, யோகேஷ் பிரதேசி ஆகியோர் அர்ஜுன விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பிரதேசியும் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்றவர்.

Dinamani.com

சிறையில் இருக்கும் 38 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க. வினர் நேற்று நடத்திய மறியல், கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. பி.கே.சேகர்பாபு (ஆர்.கே.நகர்)
2. கு.சீனிவாசன் (பூங்கா நகர்)
3. கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி)
4. பி.பல ராமன் (பொன்னேரி)
5. கோ.அரி (திருத்தணி)
6. கு.பாண்டு ரங்கன் (அணைக் கட்டு)
7. சி.வி.சண்முகம் (திண்டிவனம்)
8. இரா.குமரகுரு (திருநாவலூர்)
9. செல்வி ராமஜெயம் (புவனகிரி)
10. அருண்மொழித்தேவன் (சிதம்பரம்).

11. கணபதி (வானூர்)
12. சி.சண்முகவேலு (உடுமலைபேட்டை)
13. எஸ்.தாமோதரன் (கிணத்துகடவு)
14. ஏ.கே.சின்ன ராஜ் (மேட்டுப்பாளையம்)
15. ஆர்.பிரேமா (அவினாசி)
16. சி.பொன்னுதுரை (பெருந்துறை)
17. எல்.ரவிச் சந்திரன் (சேலம்-1)
18. பி.தங்க மணி (திருச்செங்கோடு)
19. கே.பி.அன்பழகன் (பாலக்கோடு)
20. ஆர்.டி.கணேசன் (தேனி)

21. ம.குணசேகரன் (மானாமதுரை)
22. மு.சந் திரா (ராஜபாளையம்)
23. அனிதா ஆர்.ராதா கிருஷ் ணன் (திருச்செந்தூர்)
24. எல்.ராதாகிருஷ்ணன் (கோவில் பட்டி)
25. பெ. மோகன் (ஓட்டப்பிடாரம்)
26. போ.சின்னப்பன் (விளாத்திக்குளம்)
27. மு.பரஞ்ஜோதி (ஸ்ரீரங்கம்)
28. செ.சின்னச்சாமி (மருங்காபுரி)
29. ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)
30. துரைக்கண்ணு (பாப நாசம்)

31. எஸ்.இளமதி சுப்பிர மணியன் (வலங்கைமான்)
32. ஆர்.கே.பாரதிமோகன் (திருவிடைமருதூர்)
33. வீர கபிலன் (பேராவூரணி)
34. ஆர்.நெடுஞ்செழியன் (புதுக் கோட்டை)
35. ந.சுப்பிர மணியன் (குளத்தூர்)
36. செந்தில் பாலாஜி (கரூர்)
37. மா.சந்திரகாசி (வரகூர்)
38. க.ராஜேந்திரன் (ஜெயங் கொண்டம்)

எம்.பி.க்கள்

  1. பெருமாள்,
  2. சையதுகான் தங்க தமிழ்ச் செல்வன்,
  3. காம ராஜ்,
  4. நாராயணன் கோவிந்த ராஜன்


மாலைமலர்

எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை: கால்களால் தேர்வு எழுதி முதலிடம் வென்ற மாணவி

Thanks to Viduthalaiஉத்தரபிரதேச மாநிலம் தல்லபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்சந்திரபிரதான். இவரது மனைவி சூர்யாபத்தி. இவர்களுக்கு 4மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் ராணிவர்மா. இவர் கடந்த 2001ம் ஆண்டில் நடந்த விபத்து ஒன்றில் 2 கைகளையும் இழந்தார்.

அவர் கால்களால் எழுத பயிற்சி பெற்று, சிறிது நாட்களிலேயே கையால் எழுதும் வேகத்தைப் போல கால்களால் கடகடவென எழுதக் கற்றுக் கொண்டார்.

சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ராணி வர்மா மாநிலத்தில் முதலிடம் வென்று சாதனை படைத்தார். பிரதமர் மன்மோகன்சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்து, அவரது படிப்பு செலவுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இதுபற்றி ராணி வர்மா கூறும்போது, இந்த உலகத்தில் என்னைப் போல யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது. நான் படித்து உயர் அதிகாரியாகி வாகன விபத்துகளைத் தடுப் பதற்காக முயற்சிகளை மேற் கொள்வேன்.

நான் படித்து இந்த நிலைக்கு வர காரணமானவர் என் அம்மாதான். அவர் 2 மாதத்திற்கு முன் இறந்து விட்டார். அவர் உயிரோடு இருந்தால் என்னை விட பல மடங்கு சந்தோஷப்பட்டிருப்பார் என்றார்.

மாலைமலர்

பாரிஸ் ஹில்டனைத் தொடரும் சிறை வாசம்

போதையோடு காரோட்டியதற்காக பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் மூன்று முழு நாட்கள் மட்டுமே ஜெயிலில் இருந்தபிறகு, வீட்டுக்காவலுக்கு மாற்றப்படுவதாக காவல்துறை அறிவித்தது.

இது குறித்த தனக்கு தெரிவிக்கப்படாமல் முடிவெடுத்ததாக தெரிவித்த நீதிபதி, இந்த குறைக்கப்பட்ட தண்டனைக்காலத்துக்கு ஒப்புதல் தர மறுத்தார். நாற்பத்தைந்து நாள்களையும் வீட்டுவாசத்திற்கு பதில் சிறைவாசமாக நிலைநிறுத்திய இன்றைய தீர்ப்பில், 'மூன்றே நாளில் வெளியே விடுவது நீதிமன்றத்தின் மேல் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமையும்' என்றார்.

தீர்ப்பைக் கேட்ட பாரீஸ், 'அம்மா' என்று தன்னுடைய தாயாரை நோக்கிக் கதறியவாரே மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சி.என்.என்.

Friday, June 8, 2007

'பட்டம்' வாங்கினார் பில்கேட்ஸ்!

அப்பாடா, ஒரு வழியாக, 30 வருடத்துக்கு முன்பே தான் வாங்கத்தவறிய பட்டத்தை தான் படித்த அதே கேம்பிரிட்ஜ்ஜின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனரும், உலக மகா பணக்காரருமான பில் கேட்ஸ் பெற்றுக்கொண்டார்.

ஆம், நேற்று இப்பல்கலை.யில் நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவொன்றில் சட்டப்படிப்பில் கவுரவ பட்டம் பில்கேட்ஸுக்கு வழங்கப்பட்டது. 51 வயதாகும் பில்கேட்ஸ், 1977ல் ஹார்வர்டில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறிய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்து இந்தப் பட்டத்தை ஒருநாள் வாங்கிவிடுவேன் என்று நான் சொன்னேனில்லையா?" என்று குழுமியிருந்தோரிடையே இருந்த தனது தந்தையை நோக்கி சொன்ன பில்கேட்ஸ், "அடுத்த ஆண்டு தான் பணி மாற இருப்பதால் தனது சுயகுறிப்பில் (Resume)
சேர்த்துக்கொள்ள இந்தப் பட்டம் மிகவும் உதவும்" என்று ஆரவாரத்துக்கிடையே கூறினார்.

அடுத்த ஆண்டு முதல் தனது முழுநேரத்தையும் தரும காரியங்களில் செலவிட இருப்பதாக பில்கேட்ஸ் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

மேலும்...

83 வயதில் தந்தையான இசைஞர்.

சம்பல்பூர் மாவட்டத்தின் பரமன்பூர் கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற இசைஞர், 83 வயது நாத் என்பவர் தன் 45 வயது மனைவி மூலமாக 2.5 கிலோ எடையுடன் பிறந்த பெண்மகவுக்கு தந்தையாகியுள்ளார்.
இதன் மூலம் தான் இசைஞர் மட்டுமின்றி இளைஞரும் என்று நிரூபித்துள்ளார்.
மருத்துவ வரலாற்றில் 80 வயதுக்கு மேற்பட்ட 'தந்தைமை'கள் மிக அபூர்வமாகவும், குறிக்கத்தக்கனவாகவும் விளங்குகின்றன என்றாலும் 90 வயதிலும் ஆண்கள் தந்தைமை அடைவது முடியாத ஒன்றல்ல என்று மகப்பேறு மருத்துவர் சந்தோஷ் மிஸ்ரா கருத்தளித்தார்.

மேலும்...

மகன் கொலை: தாய்க்கு ஆயுள்தண்டனை.

தனது பதின்ம வயது மகனை விசம் கொடுத்து கொலை செய்த தாய்க்கு பஞ்சாப் உள்ளூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.

தனது இரண்டாம் திருமணத்திற்குப் பின்னரும் மூன்றாவதாக கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்ட தன் தாயை 14 வயது பல்விந்தர் கண்டித்ததால், தாயான பல்ஜித்கவுர் மகனுக்கே விசம் வைத்து கொன்றுள்ளார்.

மேலும்...

டவுன் பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்.

திருச்சி அருகே நகரப் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 30 பயணிகள் காயமடைந்தனர். திருச்சி அருகே உள்ள மாத்தூரிலிருந்து, சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. கும்பக்குடி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, எதிரே ஒரு ஆடு குறுக்கில் ஓடியது. ஆட்டின் மீது பேருந்து மோதி விடாமல் இருக்க பேருந்தை திருப்பினார் டிரைவர். அப்போது பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இலங்கைத் தமிழர்களை வெளியேற்ற தடை.

இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு !

கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்ற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொழும்பில் வசித்து வரும் தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வேலையில் கொழும்பு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயல் என்றும், தமிழர்களை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கடந்த 2 நாட்களில் மட்டும் கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, போர் நடந்து வரும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் கொழும்பு போலீஸாரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற தனியார் அமைப்பு சார்பில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொழும்பு போலீஸாரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அதிமுக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதாக கூறி அதிமுகவினர் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. திமுகவினரும், அதிமுகவினரும் சரமாரியாக பல இடஙகளில் மோதிக் கொண்டனர். கரூரில் உச்சகட்ட வன்முறை அரங்கேறியது. இந்த நிலையில் நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர். இதில் அலுவலகம் ஓரளவு சேதமடைந்தது. அலுவலகத்திற்குள் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

மும்பை ரயிலில் திருடர்களை அடித்து விரட்டிய பெண்கள்

நாகர்கோயில் விரைவு வண்டியில் நேற்று தம் சொந்த ஊரான ஏர்வாடியிலிருந்து விடுமுறை முடிந்து, குழந்தைகளுடன் மும்பை திரும்பிக் கொண்டிருந்தனர் திருமதி லக்ஷ்மி வேலுவும்(35), திருமதி பிச்சம்மாள் மணியும்(36).

வண்டி தாதர் ரயில் நிலையத்தை இரவு சுமார் ஒன்பது மணிக்கு அடைந்தபோது அவர்களின் பெட்டியில் பயணம் செய்த எல்லா பயணிகளும் இறங்கிவிட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐந்து இளைஞர்கள் வண்டியில் ஏறி பிச்சம்மாள் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.

உடனிருந்த லக்ஷ்மி அந்த இளைஞர்களை அடிக்கத் தொடங்கினார். பிச்சம்மாளும் சமாளித்து தொடர்ந்து தாக்கியதில் இளைஞர்கள் பின்வாங்கினர். கூர்மையான ஆயுதத்தால் அவர்கள் தாக்கியபோதும் தளர்ந்து விடாமல் போரிட்டதைக் கண்டு ஐந்து திருடர்களில் மூவர் ஓடிவிட்டனர். பெண்கள் தொடர்ந்து துரத்திச் சென்று விரட்டி ஒரு இளைஞனை ஓடும் ரயிலிலிருந்து விழ செய்துவிட்டார்கள்!

'சுமார் ரூ. 69000 மதிப்புள்ள நகைகளை இழந்து விட்டாலும் திருடர்களைத் துரத்தியடித்தைப் பற்றி மகிழ்கிறோம்' என்று பத்திரிக்கையாளர்களிடம் லக்ஷ்மி தெரிவித்தார்.

தாதர் ரயில்வே போலீஸார், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்து, ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்ட இளைஞனை அடையாளம் கண்டு, பிடித்தும் விட்டனர். ஜரார்தன் ஜய மங்கள் ராம்(21) என்ற அந்த இளைஞன் மூலம், அவன் கூட்டாளிகளான ஜெதாலிகுமார் கோகலே(22), துனி முகியா(19), சிக்கந்தர் கான்(22), விஷால் குமார் ரத்தோட்(22) முதலானோரையும் பிடித்து ரூ. 52,000 மதிப்புள்ள நகைகளையும் மீட்டுவிட்டதாக காவல்துறை அதிகாரி நம்தியோ கதம் கூறினார்.

Men smart, women smarter - DNA News.

'கல்விக் கொள்கையை மாற்றாவிட்டால் அரசை எதிர்த்துப் போராட்டம்': பாமக

தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் அதிகக்கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கல்விக் கொள்கையைத் தமிழக அரசு மாற்றாவிட்டால், பாமக கடுமையான போராட்டங்களை நடத்தும் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பேட்டி: தமிழகத்தில் மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வரை, கல்வி வியாபாரம் நடக்கிறது.

தமிழக அரசு தகுந்த சட்டங்களைக் கொண்டுவந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 400 இடங்களை இந்த தனியார் கல்வி நிறுவனத்தினர் கிடைக்காமல் செய்துவிட்டனர்.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...