Friday, July 29, 2011
Saturday, April 16, 2011
மீண்டும் வருகிறது சற்றுமுன் !
மீண்டும் வருகிறது சற்றுமுன்... பங்களிபாளர்களின் வேலை பளு காரணமாக தனது சேவையில் சிலகாலம் தொய்வு ஏற்ப்பட்டு விட்டதை யாவரும் அறிவோம் . மீண்டும் இச்சேவையை வழங்குவதில் சற்றுமுன் குழுமம் பெரும் மகிழ்ச்சியடைகிறது . வாசகர்கள் வழக்கம் போல் இத்தளத்திற்கு வருகைத்தந்து எங்களை ஊக்கப்படுத்த வேண்டுகிறோம் .நன்றி
Posted by Adirai Media at 9:05 AM 0 comments
Sunday, July 5, 2009
Monday, January 28, 2008
ராமனாதன் என் கண்ண திறந்துட்டீங்க!!
ட்ஜொக்கெர்குக்கு மட்டும் attitude ப்ராப்ளெம் இல்ல அவங்க familyக்கே இருக்கும் போல இருக்கே??
http://msn.foxsports.com/tennis/story/7726158
"As you say, the king is dead. Long live the (new) king," Djokovic's mother, Dijana, told FOXSports.com.
I knew he could do it," Dijana said. "He was so mentally strong. At the U.S. Open, when he played Federer, he was playing the king. He's only 20 (years old playing) in front of 23,000 people. He was shaky and didn't take the many opportunities he had. But when that was over, my husband told him, 'you'll never lose to Federer again if you get more mature
அட கண்றாவியே?? pushy யா இருக்க வேண்டியதுதான் ஆனா இப்படியா?? தாங்கலடா சாமி..........!!
Posted by Radha Sriram at 12:55 AM 2 comments
Monday, September 10, 2007
ஜெயலலிதா தேர்தல் வழக்கு
அதிமுக தலைவர் ஜெயலலிதா 2001 தமிழக தேர்தல்களில் போட்டியிட்டபோது விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நடப்பு வழக்கில், தேர்தல் அதிகாரிகளின் கவனமான ஆய்வின்படி, 177 பிரிவு( பொய்த் தகவல்களை அரசு அதிகாரிக்கு தருதல்) படி எந்தக் குற்றமும் காண இயலவில்லை என கூறியுள்ளது. தேர்தல் விண்ணப்பங்களில் பொய்த் தகவல்கள் கூறியதாக தன் மீது நடவடிக்கை எடுக்க சென்னை நீதிமன்றத்தின் ஜூன் 13 ஆணையிட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் உச்சநீதிமன்ரத்தில் பதிந்த மேல்முறையீட்டினை ஒட்டி தேர்தல் ஆணையம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
உயர்நீதிமன்றம் தேர்தல் ஆனையத்தை குறைகண்டிருந்ததை குறிப்பிட்டு " தேர்தல் அதிகாரிகளே சட்டப்படி விண்ணப்பங்களை வாங்கவும் பரிசீலிக்கவும் தகுதியானவர்கள்; அதனால் இதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள்தான் இம்மனுக்கள் குற்றவியல் சட்டம் பிரிவு 177 உடன் பிரிவு 195 படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள்; அவர்கள் இவ்விதயத்தில் செயல் நீதிமன்ற அதிகாரத்தைப் பெறுகிறார் " என அவர்களை கைகாட்டி விட்டது.
இந்த நிலைப்பாட்டால் நாளை தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியுமா இல்லை புதிய பிரச்சினைகள் கிலம்புமா எனத் தெரியவில்லை.
The Hindu News Update Service
Posted by மணியன் at 8:10 PM 0 comments
ஃபெடரர் மீண்டும் மீண்டும்!!!
யு.எஸ் ஓப்பன் டென்னிஸ் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்
ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ஃபெடரரும், செர்பியா நாட்டின்
நோவாக் ஜோகோவிச்சும் இன்று விளையாடினர்.
மிகப்பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 7- 6 , 7-6 , 6 -4
என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் ஃபெடரர் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இது இவருடைய நான்காவது நேரடி யு.எஸ் சாம்பியன் பட்டமாகும்.
2004,2005,2006 மற்றும் 2007 ஆண்டுகளில் பட்டங்களை வென்றுள்ளார்.
உலக ஆட்டக்காரர்கள் நிலைப்பட்டியலில் முதலாம் நிலையை தொடர்ந்து
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தக்க வைத்து கொண்டிருக்கும் ரோஜர் ஃபெடரர்
இன்றைய போட்டியில் வென்ற பரிசுத்தொகை 24 இலட்சம் டாலர்கள்.
Posted by பெருசு at 4:45 AM 0 comments
Sunday, September 9, 2007
சற்றுமுன்: ஸ்ரீகாந்த் - வந்தனா
புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க....அப்ப பழைய கல்யாணம்?
சற்றுமுன் செய்திகள் இப்போது இங்கே....http://satrumun.com/
Posted by ✪சிந்தாநதி at 10:36 PM 0 comments
Friday, September 7, 2007
திட்டமிட்டபடி படகுகளில் யாழ்ப்பாணம் செல்வோம்!
திட்டமிட்டபடி இராமேஸ்வரத்திலிருந்து எதிர்வரும் 12 ஆம் தேதி உணவு மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகளில் யாழ்ப்பாணம் செல்வோம். இதில் எந்தவித மாற்றத்துக்கும் இடமில்லை என்றும் தமிழர் விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் தேதி வரை இரு பிரிவுகளாக படகு பிரசார பயணம் மேற்கொள்வோம். மதுரையில் இன்று இடம்பெறும் பிரசார தொடக்க விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மற்றும் சேதுராமன், ஜனதாதள மாநில பொதுச் செயலாளர், ஜான் மோசஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெடுமாறன் மேலும் கூறியதாவது, தமிழின விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இலங்கை யாழ்ப்பாணத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் உணவு மற்றும் மருந்து பொருட்களை திரட்ட தொடங்கினோம். 2 மாதங்களில் ரூ. 2 கோடி மதிப்புள்ள மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.இந்த பொருட்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு அனுப்ப இந்திய தேசிய செஞ்சிலுவைச் சங்கத்தை கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அணுகினோம். அவர்கள் அதற்கு உடன்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடந்த 9.2.07 அன்று கடிதம் எழுதினோம். மேலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்கள்.
Posted by Adirai Media at 10:14 AM 0 comments
Tuesday, September 4, 2007
நாளை முதல் satrumun.com
சற்றுமுன் செய்தித் தளம் நாளை காலை இந்திய நேரம் 6 மணி முதல் ப்ளாகர் சேவையிலிருந்து விலகி satrumun.com எனும் தனித் தளத்திலிருந்து இயங்கவிருக்கிறது. satrumun.com பல மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் இயங்கும். விரைவில் ஒவ்வொன்றாக இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
சற்றுமுன்னின் Blogger செய்தி ஓடையைப் (Feed) பயன்படுத்தி வந்தவர்கள் புதிய ஓடைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதிய ஓடை http://feeds.fe
சற்றுமுன் மின்னஞ்சல் சேவை தொடர்ந்து கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதிய தளத்தில் பதிந்துகொள்ள வேண்டுகிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.
புதிய தளத்தில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்ட உறுப்பினர்கள் மட்டுமே பின்னூட்டமிட இயலும் என்பதால் உங்கள் பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம். பயனர் கணக்கு உருவாக்க இங்கு செல்லுங்கள்.
புதிய தளம் குறித்த கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
சற்றுமுன்.com தமிழ்மணம் திரட்டியில் தெரிவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணம் பயனர்கள் நேரடியாக சற்றுமுன் தளத்தைப் பார்வையிடக் கேட்டுக் கொள்கிறோம்.
சற்றுமுன் குழுவில் இணைந்து செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் பதிவர்களை சற்றுமுன் அன்புடன் வரவேற்கிறது. satrumun at gmail dot com என்ற முகவரிக்கு மடல் செய்யவும்.
satrumun.comல் சந்திப்போம்.
Posted by சிறில் அலெக்ஸ் at 11:05 PM 6 comments
கலக்கும் சென்னை - தபால் துறையில் GPS - வீடியோ.
தபால் பட்டுவாடா செய்யும் வாகனங்களில் GPS பொருத்தி தபால்களை சரியான நேரத்தில் சென்றடைய சென்னைத் தபால் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
மேலும் செய்திக்கு "CNN - IBN TV..."
Posted by சிவபாலன் at 10:33 PM 0 comments
விடுதலைப் புலிகளின் புத்தகங்களை வைத்திருந்தவர் கைது
சென்னையிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லவிருந்த சுரேஷ் என்கிற 29வயது இளைஞர், விடுதலைப் புலிகள் பிரசுரித்த புத்தகங்களை வைத்திருந்ததால் க்யூ பிரிவு காவால்துறையினரால் கைது செய்யப்பட்டார். சுரேஷ் திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியைச் சார்ந்தவர்.
Passenger carrying pro-LTTE books held - The hindu
Posted by சிறில் அலெக்ஸ் at 9:00 PM 0 comments
தீவிரவாத பட்டியல்: வடகொரியாவை நீக்க அமெரிக்கா நிபந்தனை.
தீவிரவாத நாடுகள் பட்டியல் : வடகொரியாவை நீக்க அமெரிக்கா நிபந்தனை
வடகொரியாவை தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து விடுவிக்க அந்நாட்டிடமிருந்து மேலும் சில நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற அமெரிக்க வடகொரிய தலைவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தனது தீவிரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வடகொரியாவை நீக்கும் என்று வடகொரிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இதை மறுத்த அமெரிக்க பிரதிநிதி வடகொரியா அணுஆயுத திட்டங்களில் மேலும் சில நம்பிக்கையான செயல்களில் ஈடுபடும் வரை அந்நாட்டை பட்டியலிலிருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்.
தினமலர்
Posted by வாசகன் at 8:44 PM 0 comments
'ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது' - ஈரான் அதிபர்
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத். அதற்கான வலுவான கணித ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார் அவர்.
"அடிப்படையில் நான் ஒரு பொறியாளர். அதிலும், கணக்கிடுதல், அட்டவணைப்படுத்துதலில் நிபுணர். என்னுடைய கணித ஆற்றலை பயன்படுத்தி பல மணி நேரம், விதவிதமான ஹிபோதிசஸ் கணக்குகளை போட்டுப் பார்த்தேன். இதிலிருந்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறேன். என் கணக்குப்படி, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வாய்ப்பே இல்லை' என்று உறுதிப்பட கூறுகிறார் மஹமூத் அகமதிநிஜாத்.
போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடுதல் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்றிருக்கும் அவர், ஏராளமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
மிகுந்த மத நம்பிக்கையுடைய அவர் மேலும் கூறுகையில், "நீதியின் வழியில் நடப்பவர்கள் வெற்றியடைவார்கள் என்று இறைவன் கூறியிருப்பதை நான் நம்புகிறேன். நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம்' என்கிறார்.
அதிபர் மஹமூத் அகமதுநிஜாத் கூறியதாக திங்கள்கிழமை பத்திரிகைகளில் வெளியாகி உள்ள இந்த செய்தி தான் ஈரான் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. அதிபர் மஹமூத், அப்படி என்ன கணக்கு போட்டு பார்த்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
கடந்த 2003-ல் அணுகுண்டை தேடுகிறோம் என்று இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அதேபாணியில் ஈரான் மீதும் போர் தொடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அதற்கு அச்சாரமாக அதிபர் புஷ்ஷுன் அண்மைக்கால பேச்சுக்களும் அட்சதை தூவி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி
Posted by வாசகன் at 6:20 PM 0 comments
தமிழ்நாட்டில் இன்டெல் நிறுவனம் 1800 பள்ளிகளுக்கு உதவி
கணீனி சிப்களை உருவாக்கும் இன் டெல் நிறுவனத்தின் இந்தியப்பிரிவு தமிழக அரசுடன் ஒப்பிட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் 1800 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி சோதனைச்சாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி சம்பந்தமான பொருளடக்கத்தை கைக்கொள்ள வகை செய்து தர முன்வந்துள்ளது. கல்விச்சாலைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் உடல்நலமையங்களை இணைக்கும் கணினி வலையமைப்பை இரு தரப்பும் ஒத்துழைத்து உருவாக்கும்.
இது பற்றிய மேல்விவரங்களுக்கு...The Hindu News Update Service
Posted by மணியன் at 6:01 PM 0 comments
சென்னை: ஒரேநாளில் 4000 விளம்பரப் பலகைகள் அகற்றம்
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4,000 விளம்பரப் பலகைகள் திங்கள்கிழமை ஒரே நாளில் அகற்றப்பட்டன என்று மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களிலும், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் விளம்பரப் பலகைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன.
அனுமதியின்றி மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகைகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சாலையை மறைத்து வைக்கப்படும் இந்த மின்னணு விளம்பரப் பலகைகளால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இதுதவிர மழைக்காலத்தில் காற்று வீசுவதால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டிருந்த விளம்பர அட்டைப்பலகைகள் , துணிப்பலகைகள் (பேனர்) மற்றும் மின்னணு விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை மட்டும் நகரில் இருந்த 4,000 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. காவல்துறையினரின் இந்நடவடிக்கைகள் தொடரும்.
அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பாக நிறுவப்படும் விளம்பரப் பலகைகளை 2 முதல் 5 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த காலவரம்பிற்குள் விளம்பரப் பலகைகளை நீக்காவிட்டால், உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.
உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு பெற்ற நிறுவனங்களைத் தவிர இதர நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுடன் காவல்துறையினர் இணைந்து புறநகர்ப் பகுதிகளிலும் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
விதிகளை மீறி விளம்பரப் பலகைகளை வைத்திருந்தாலும், புதிதாக நிறுவினாலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. எனினும் நகரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் நாஞ்சில் குமரன்.
தினமணி
Posted by வாசகன் at 5:58 PM 0 comments
சற்றுமுன்...
b r e a k i n g n e w s...