.

Wednesday, August 22, 2007

சதாமின் மகளை இராக்கிடம் ஒப்படைக்க ஜோர்தான் மறுப்பு

இராக் முன்னாள் அதிபர் மறைந்த சதாம் ஹுசேனின் மூத்த மகள் ரகாத்தை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என இராக் விடுத்த கோரிக்கையை செவ்வாய்க்கிழமை நிராகரித்தது ஜோர்தான்.

பல ஆண்டுகளுக்கு முன் சதாம் ஹுசேன் மற்றும் அவரது மகன்களை இராக் அரசு கைது செய்தபோது, சதாமின் 2 மகள்களும் ஜோர்தான் நாட்டுக்கு குடிபெயர்ந்தனர். தந்தையின் மறைவுக்கு கூட அவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜோர்தானில் உள்ள மூத்த மகள் ரகாத், தனது தந்தையின் மரண தண்டனைக்குப் பின் அவரது ஆதரவாளர்களுடன் கைகோர்த்து கொண்டு இராக்கில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியது.

இதையடுத்து, ரகாத்தை தங்கள் நாட்டு விசாரணைக்கு உட்படுத்த உதவி செய்ய வேண்டும் என்று இன்டர்போலிடம் இராக் அரசு கேட்டது. இன்டர்போலும் ஜோர்தான் அரசு, ரகாத்துக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், ரகாத்தை ஒப்படைக்க ஜோர்தான் மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...